புதன், 27 ஜூலை, 2011

உண்பதுதான் சமிபாடடையும்!
நாம்!
வாயூற பார்த்திருந்தோம்.
வயிறாற-
புசித்திருந்தோமா?

தூரத்துப் பச்சையில்-
துயில் நீத்திருந்த-
என் சமூகமே!
உனக்குள. ஊறும்
பசுமைகளை ஏன் துலைத்தாய்?

பஞ்ச தந்திர கதை படித்ததினால்
எழுந்த பாதகமா?
கல்லை பூசிக்கும் களமே!
உன் காத்திரர்களை ஏன் மறந்தாய்?+
போ!

முத்தென்ன வெண் நகையாள் பாடு.
முன்வந்தெதிரெழுந்தாள்.
பத்துடையீர்!
ஈசன் பழுவுடையீர்!
ஓம்பு!

உன் வீட்டு முற்றமும்
விரைவில்:
ஓடையற்ற,
கோவணம் இழந்த கோபுரமாய்-
தப்பே இல்லை,
தாமரை குளத்தில்,
ஈசன் தவமிருந்து,
உன் சந்ததியை-
தக்க தருணத்தில்
அற்புதம் செய்து ஆய்ந்ததாய் அரற்று.
காவு-

இதுதான்-
உனதான சந்ததிக்கு நீ
மீட்டி வைத்த மிருதங்கம்!

இருக்கும் போது சுவைக்காத எதுவும்-
இழந்தபின் மீட்கும்-
சோக கீதம் தொடரட்டும்.
வேறென்ன உன் வாழ்வில்-
வெகுமதியாய்-
ஈட்டி வைப்பாய்?

போ!
அங்கே ஆலய மணி ஆரவராமாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்