புதன், 27 ஜூலை, 2011

நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்
நித்திலர்!
பேரறியாமல்,பேதமை நீக்க
ஊரறியாமல் உறுப்பேந்திய
சத்தியரை மறந்தீரோ?
இன்று!
சாத்தியமற்ற சாகித்தியத்தை-
சகிப்பு அப்பாற்பட்ட-
சாதனையை நுகருவாயோ ?-எம்
போதனை அகற்றிய போதி மரம் சூழ
வாதனை உனை வாட்ட -எந்த
"மா "வினை சூட்டுவாய்?

மறந்ததுவும்,
துறந்ததுவும்,
பறந்ததான-
பாவனை காட்டும்.?
எதையும்,யாவற்றையும்,
கறந்தனவாக காதகர் வீதி -
உன் உலா வரும்.
வருடும்,
வசந்தத்தின் சுகந்தங்களென
வீதி புனரமைப்பென பூப்புனித நீராட்டும்-

ஐயகோ!
ஆவி உனை விட்டகல,
ஆவன செயும்.அத்தனையையும் அள்ளும்,
"சோ"வினை உனை சூழ,
உனை நெயும்.
பூசை அறிவாயா?

புத்தா!
என -
உனை புணரும்-
வாதனை அறிவாயா?
வற்றியரே!

என்றும்,
பாதை அறியா பரப்பில்-
வெறும் போதையை மட்டும்-
போற்றும்.
போகியரே!

போ!
உன் வீட்டு முற்றத்திலும்-
அயலவரின்-
ஆத்திலும்,
கல்லாக கடை விரித்த-
காடையரை தொழு.
உன்!
விதியின்-
வீதி-
வீரியம் பெறும்.

ஆம்!
கார்த்திகை முடிந்து-
இப்போது-
திருவெண் பாவை பாடு.
உன்-
வெண் பாவை-
ஆரியன் சூடிய-
காலத்தின் கனிவில்-
கல்லை பூசி!
புத்தனின் புனிதக் கால்-
பதிந்ததாய்-
மத்தாப்பிடு!

போததிற்கு-
உன்,
அயலவரையம்-
ஆராவரமாய் ஆதங்கி-
காத்திரர்களின்-
காலடி ஒதுக்கி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்