புதன், 27 ஜூலை, 2011

முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-

முதுகு நேர்த்து சொறிந்த வன்னகைகள்-
தமிழ்
இனத்திற்கு செறிந்த வஞ்சனையின்றி-
எந்த
இகத்திற்கு இழைத்த பஞ்சணையாகும்.




தொலை நோக்கு!

தொலைவல்ல,

கலையால் கரம் தொடு.

விலை போனார்கள் சிலர்:

விதண்டா வாதம் செய்ய சிலர்.

கண்டதையும் கக்கி காசாக்க சிலர்.

விண்டதாக விவாதிக்க வித்தையேற்று சிலர்.

அண்டா,அண்டாவாக அளக்க சிலர்.

கொண்டதெல்லாம் தாம்
விடுதலையின் தலையென்பர் சிலர்.



அன்றலர்ந்த மலராய்,
ஆளுமையாய் அண்ணனுடன்,

சென்றிந்த செம்பகையை,
பொடியாக்கி போனார்களே.
அவர்கள:

பொடிகளல்லர் தமிழுடன் தன்னை,

ஆகுதியாக்கிய கரும்பூ இவர்கள்.



இந்த-
கல்லறையின் கனதிகளையும்,

அதன் காத்திரத்தையும்,
கொண்ட கொள்கையின்
கொற்றங்களையும்,

தன்
சுயத்திற்காக
கொன்று
இங்கு

பிரிந்து நிற்கும் பீடர்கள்
என்று
இவர் உறுதியாய் எங்கள்
உழவன் கரம் கொடுத்தான்.


உறவாடி கெடுக்கும்
உறவு.


இதுதான்
அன்று வரை இன்று ஈறாக
தொடரெழுதும்
ஒட்டு,

எட்டப்பர் க(ஓ)டை.

முள்ளி வாய்க்காலில் விழ்ந்தாலும்-

கள்ளிப் பால் தெளிக்க எங்கள் இனமே
கனதியாய்.


இழி நிலையேற்ற கொடியோரின்
கும்பம் கண்டோம்.


பிரித்தகற்ற முடியா பிடாரிகள் எல்லாம்
இன்று
தானாவே தன்னை பிரிகையாற்றிய
பிம்பம்.
ஒரு சுத்திகரிப்புக்குள்
சுதாகரித்து.

தன் பீடத்தை தானே தகற்ற வரலாறும் இங்குதான்.



நன்றே.

பிரிவில் ஊறும் உறுதியற்ற உருவம் கண்டோம்.

பிறளாத எங்களின் திண்மையான திண்ணம் கண்டோம்.

இனி
விதி அளி(ழி)க்கா வீரியம் பெறுவோம்.

எமக்குள்
களையற்ற காளையரும்,

கனதியான,
தாளையரும்---
வலம் வரும் தலம்.


விடிவெள்ளி இனி தூரமும் இல்லை.

சோரம் போகும் சாரமும் இல்லை.


தோள் தொடும் தோழர்கள் இனி
தேற்றம் பெறுவர்.
ஈழத் தோற்றம் வரைவர்.
ஈகமே இழைந்திரு இயல்பாகும் எல்லாம்.
ஈற்றுவோம் அந்த தோற்றுவாயில் தொகுப்பாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்