வெள்ளி, 15 மே, 2009

வலுவிருக்க வலுக்கொள்ளு.


இத்தனை அவலங்கள் ஊட்டிய
எத்தனின் உள்ளத்தில்
எத்தனை மதகளிப்பு.அது
மந்தாரம் சூடியதானகவே,
சத்திடும் சதகழிப்பு,இதை
எத்துணை மனதுடன் ஏற்பது என்பதில்
எங்களின் பதகளிப்பு,எந்த
சத்துணை கொண்டிதை
இல்லாதொழிப்பதில் அத்தனை கனவிருப்பு,
உலவும் உள்ளத்தின் மனக்கொதிப்பு,உசா கொண்டிட
யாருமில்லையென யாண்டிட யதி இருப்பு.
யாரும் உள்ளகம் கண்டிதை யாத்தெம் யாசகம்
யாக்கார என்றொரு யதவிருப்பு.

எங்கெலாம் உடலங்கள் உதிர்ந்திட,
உள்ளத்தில் பதகளிப்பு,
எங்கும் சடலங்களாக்கி எம் சந்ததி
அழிப்பவன் உதிரான என்றொரு,
ஓங்கார ஒருக்களிப்பு.
இதை உற்றவன் இங்கினி இல்லாதொழித்திட
ஓஙுகிடும் மனவிகாரிப்பு.
சதை பிய்த்தெறிந்து எங்கள் சனத்தை
அழிப்பவன் உய்வான என்றொரு சத்தங்கள் மனவிரிப்பு.

அவயங்களை அரிந்தவனை,
அழித்திட ஏகுமே
ஆதங்க தளவிரிப்பு,
அங்கங்கள் பிளந்தவனை,
எரித்திட,ஏகுமே இனியிருப்பு
தங்க அவன் இனியெம் தரணியில் உலவிட,
தாங்குமா களவிரிப்பு,இதை
தாண்டியே,
சிங்களன் சீண்டிட சங்கடம் ஆக்குமே,
வல்ல புலியிருப்பு,

வல்லமை தன்னகம் தாங்கியதாம் இந்த
சிங்கள வசீகரிப்பு,எல்லாம்
வகை பிளத்து,
வெங்களம் வெட்டி வீழ்த்திட ஆகுமே பகை
வென்றதன் தகையிருப்பு,
வேயும் களம் வேதினியில் வேதமாய் ஊற்றிட,
தாகுமே தமிழ் விரிப்பு.எங்கள்
தாயக உள விரிப்பு.தமிழ் ஈழத்தின்
மலர்ச் சிரிப்பு,
எங்கள் மாதவ மனச்சிலிர்ப்பு.

ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????

காத்திருக்கும் காலம் என்று பூத்திருக்குமோ?
காணும் காலவடுவாக நீண்டு மாய்திருக்குமோ?
ஈத்திருக்கும் ஈழம் என்று இகமியங்குமோ?ஊன
பாயெரித்து ஊதல் எல்லாம் உளமியங்குமோ?
எங்கள் மனமியங்குமோ?

ஊரெரித்து பகையும் உலவும்,
உடலெரிந்து உறவும் உறையும்,
பாரெடுத்து சோகம் சொல்ல பாதை விரியுமே,
இந்த நோவுரைக்க நேயம் கொள்ள மனம்
இயங்குமே,உலரும் மனம் இயங்குமே.

தாகம் தீர்க்க தண்ணீரில்லை,
பசித்திருக்க உணவும் இல்லை,
பாலுக்கழும் பாலர் முகங்கள்,
பார்த்திருக்குமா?இந்த பார் முழுதும்
உறவிருந்தும் பால் சுரக்குமா?

பாவி அவன் போர்க்கலங்கள்,
பதை,வதைத்து உயிர் விழுங்கும்.
மேவி,
ஆவிதாவி வன்னி மண்ணில் மேய்ச்சல் பூணுதே,
காவி உயிர்களெல்லாம் கந்தகத்தில்
கரை ஒதுங்குதே.

எரிகலங்கள் ஆகும் அந்த வெண்ணிறக் குண்டு,
பெரிக்கி, உடல் உருக்கி கருக்கும் கந்தகங் கொண்டு.
வீசிப் பகை வீதியெல்லாம் சாவிரிக்குதே,
ஊசி உடல்கள் எல்லாம் உதவியின்றி நரகலாகுதே,
ஈசி,
கிருமி,மூசி ஈழமெல்லாம் கரைசலாகுதே.

வேர்த்திருக்கும் காலம் இல்லை,
வேங்கை களம் ஓய்வதில்லை,
பார்த்திருக்கும் நேரமில்லை,களம்
இறங்குவோம்,சர்வ களமியங்குவோம்.

இன அழிப்பை ஈவின்றி ஈனன் ஆற்றுவான்,இனம்
சுரந்தியங்கும் ஈழவேட்கை அழித்திருப்பானா?
மானம் காக்க புலிகள் எல்லை மீண்டும் ஏகுவார்,பார்
வானமே எல்லை என்று வாகை முழங்கி வெல்லுவார்,
ஈழம் இகத்தில் ஈற்றுவார்.

வியாழன், 14 மே, 2009

ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே

ஊர் எழுதும் பேரெழுதி,
உறவழுதும் நீர் தழுவி,
வேரறுந்து நீங்கள் எல்லாம்,
எங்கு சென்றீர்கள்,?எங்கள்
ஆழ் மனதில் நெருப்பெழுதி எங்கு சென்றீர்கள்?.
உறவே எங்கு சென்றீர்கள்.

கார் மேகம் திரள் கரைக்கும்,
கண்ணீரால் இருள் சுரக்கும்,
மாரடித்து மாய உறவு மண்ணில் இல்லையே!
எங்கள் வேரெடுத்து வேக உள்ளம் வெளியில் இல்லையே!.

நீரடித்து நீர் என்றும் அழுவதில்லையே,
வீறெடுத்த நெஞ்சம் மண்ணில் வீழ்வதில்லையே, ஈக
போரெடுத்து ஈழ வாழ்வாய் இழைந்து கொள்ளுமே.
இந்த ஞாலம் அதை நீதி கொள்ள
ஈழம் மலர்ந்து மொள்ளுமே.

வான் கழுகு உமிழ்ந்த குண்டு,
வல்ல பகை பரிந்தெடுத்து,
பாவி அவன் போர்க்கலங்கள் உயிர்கள் காவுதே,வாதை,
வதை பதைத்து வாசல் எங்கும் சாவிரிக்குதே.

ஆர்த்த புலி நீர்ப்பதில்லை,
அகமும் அங்கு வேர்ப்பதில்லை,
வேர்க்க பகை நிலம் விதைத்து,
விழிகள் சொருகுமே.
நோற்றும் புலிகள் பாதை விரிய,விரிய,
ஈழம் மலருமே.பார் நிலமும் விரியுமே.

தேரெடுத்த பாதை நோகும்,
தேர்ந்த பகை வாகை வீழும்,
ஊர் தொடுத்த மாலை எல்லாம்,
உவகை கொள்ளுமே எங்கள் உறவழித்த,
பாதை எல்லாம் உதிர்ந்து போகுமே.பார்
உறவழித்த பாதை எல்லாம் உதிர்ந்து போகுமே.

கூவும் குயில் சோகம் ஓதும்,
கூட மயில் பாதம் நோகும்,
கூம்பும் குருவி கூட்டம் யாவும்,
நாட்டம் நீக்குமே,நாடு
விதிர்ந்தெழுந்த கோலம் கண்டு,
குவியம் கொள்ளுமே,ஊடி உதயம் கூட்டுமே.
இந்த பாதை சூட்டுமே,இனிய பாதை நீளுமே.
ஈழ மரபில் எல்லாம் வாதை நீங்கி,
உவகை சூடுமே,வல்ல உள்ளம் பெருகுமே.

வல்ல புலி வெல்லும் காலம் வலிமை சூழுமே,
தங்க ஈழ மலர் சூடி இந்த வையம் புலருமே,
பார்!
பனித்ததெல்லாம் பசுமை ஊட பவனியாகுமே,
உலக பவனியாகுமே. ஈழம் பவனியாகுமே.இழையும்
ஈழம் வளருமே,தமிழ் ஈழம் வளருமே.

அகிலத்தில் அங்க விற்பனை முகவர்

அங்கங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு,
ஆழ்குழிக்குள் ஆழ நெருப்பிட்டு,
அடையாளம் அகற்றப்பட்ட பாயிரம்,
தடை தடைத்த தரணியே,
தகத்தெடுத்து கண்டீரா?

தமிழ்,
என்இன மைந்தர்களின்,
யுகமேற்கா யுக்தியால் யுத்தம் என்ற சத்தத்தால்,
யூகிப்பிற்கே பீதியூட்டும் பீடமேற்ற,
பித்த புத்தனின் பிரம்மையான பீடத்திலே,
எத்தனின் ஏகாதிபத்திய ஏற்றமற்ற மாடத்திலே,

இந்த,
உலக உலா ஊடகம் ஊரித்த,
உறிஞ்ச உள்ளம் ஊனித்த மெளனம்,
தறைஞ்ச நெஞ்சகத்தில் விறைந்த கொடூரம்,
பறைய.உறவுகளிடம் ஊட,மறையாக என்றும்
மறையாக,உறையாமல் ஒவ்வொரு வினாடியும்,
மாறி,மாறி எங்கள் மனம் கரிக்கும்,

சினம் விரிக்கும்,சீந்தி,சீந்தி
சிந்திப்பே சிறகிழந்து சீரணிக்க சக்தியற்ற,
தாற்பாரியம்!
தரணியே நீயும் தரமேற்றாயோ?
எங்கள் ஆக்ஞைகளை உந்தன்
அகமாக ஏற்பாயோ?

தங்ககங்களில் இருந்து தாரை,தாரையாக,
தளம் தளற்றப்பட்ட தமிழனின்,
தகமையை இத்தால் உன் இதயம்,
இயங்க ஏற்பாயோ?

இதன் ஆதாரமாக,
அன்று இந்திய வார சஞ்சிகையில்,
இதழாசிரியரின் இயங்கதள நிகராசிரியரால்,
மருத்துவமனையின் மகிமை மேத்த
பிரபல்ய மருத்துவரின் ஆதார வாக்குமூலம்.
ஸ்ரீலங்காவில் இருந்தே,
தங்களின் ஆத்மார்த்த மருத்துவமனைக்கு
கண்கள் தானமாக கையகம் தந்ததில்
சிங்கள தேசமே சிகரம் சூட்டியதாக

ஆதார வைத்தியசாலையின்,
மேலான வைத்தியர் வைகை வள்ளலாக,
ஸ்ரீலங்காவை புகழ்ந்தார்,
புனைவான சேதியல்ல!
அங்க தானத்தின் அருமை,பெருமை விளக்கி
தங்கமான உள்ளம் சிங்களத்திற்கே என்று,
தகமைசாற்றி தகவலாய் தகைந்தது.

அன்று முதல் எமக்குள் உறைந்த இந்த,
தார்மீக வினாவிற்கு உடனடியாகவே உண்மையின்,
தேடலில் சில செய்திகள் ஆதாரமாக எம்மவர்
மத்தியில் ஊமையாகவே உளர்ந்தது,
ஆதாரம் இன்மையால் இது அருகற்றுப்போயினதோ?
அன்றி,இதன் சாரம் தகிக்கும் தகமையை,
வசதி கருதி மறந்து,மரத்து போகச்
செயலிழக்கவிட்டோமா?

சிங்கள தேசத்தில் இருந்து வங்காளதேசம் வரை
வகை,தொகையின்றி உடலதின் பாகங்கள்
உவகையில் அக்கரையான எத்தனை
வகை வாகைகள் சூழ்த்தான்?

எங்கள்,
தமிழீழத்தில்,
அன்றில் இருந்து இன்றுவரை
வகை,தொகையின்றி
காரணமின்றி,சந்தேகமென்ற போர்வையில்
கைதானோர், காணாமல் போனோர்
பட்டியலில்.,,,,,,,,,,,,,,
புரிகின்றாதா புவி அசைப்போரே?

பூமியில் புத்தன் போதித்த போதனையின் சாரம்.
ஆமியென்ற போர்வையில் ஸ்ரீலங்காவில்,
புத்தனின் பரிணாம,பரிமாண அவதாரம்.
கண்ட துண்டமாக அங்கம் பிளந்து அரிவாளால்,
அவர்தம் உயிர் உலர்ந்து ஊடுமுன்னே,
தாங்கும் எம் உறவின் உயிரெரிந்து,
எத்துணை வேதனையை அவர் வசம் வீச்சாக்கி
அத்தனை அவயங்களையும்,

வலிக்கும் இதயத்துடன்,
வலிமையான ஆதாரத்துடன்,
ஒலிக்கும் வேதனையின் ஓர்மத்தை,
சாறெடுத்து இன்று கோமகன் ஒருவர்.
கோர்த்தெடுத்து கோவையாக,
சான்றாக சாவிரித்த கோலமதை
ஞாலமெலாம் ஞானிக்க ஞானதான
ஞானத்தால் ஞாயிறாக்கி.,,,,,,,,.

இன்னமும்,
இந்த ஊன, ஈனர்களிற்கே உசாபோகும்,
சர்வம் இதை சலித்தே,
எங்கள் இனமதை,
ஆரியன் அழிப்பதன்,
ஓர் கல்லில் ஈர் மாங்காயென்ற,
ஓரங்கத்தை,அதன் சாரங்கத்தை,
ஆதங்கமாய் வினைப்பானா?இல்லை

அங்க,அவய சுரங்கம் அவனியிலே!
ஸ்ரீலங்காவில்தான் ,சிறப்பான கொள்வனவென
கொள்ளும் நிலை கொள்வாயா?
மேவி,
தமிழர் வதையா வாதையாக வரிப்பாயா?,
வகுப்பாயா?

ஜீவகாரூண்யம் ஜீவிக்கும் ஜீவனுள்ள உலகே!
ஜீவிதம் மரித்தபின்னே மாமிசம் புசிக்க,
விதி விதித்த வீரிய முறையே,
ஜீவத பூமியின் ஜீவிதங்களே,
ஜீவிதமாற்ற மார்க்கமின்றி
ஐம்பொறியின் கரும் பொறியில்,
ஐதடைத்து ஜடமாகும்,ஐக்கிய உறவுகளின்,,,,,,

தமிழீழத்,
தமிழின உறவுகளின் துயர் துடைக்க,
எங்கள் தடைதகர்த்து,தாயக தாகம்,
தடைக்க அரணாக நீ அறமாற்றமாட்டயோ?
எங்கள் ஐயமதை ஆதங்கமாக்கி ஓர்
தங்ககம் தமைய தார்மீக கைகொடைய்யா.
தவிக்கும் தமிழின விழி விரிய வீரியம் சுரவைய்யா.

செவ்வாய், 12 மே, 2009

திசையெல்லாம் தீயாய் எழு.


எனதான இந்த பாதுகாப்பான நிலையிருப்பு
என்முன்னே விரிந்திருக்கும் வலைவிரிப்பு,
எனக்கானதான இந்த நுகை தரிப்பு,
அதனால் நான் கொள்ளும் விகாரிப்பு,
ஆகையினால் என் அகம் கொலுவேற்றும் வசீகரிப்பு,
இத்தனையும் என் தேசத்துறவு எனக் களித்த பரிசளிப்பு,

வீடு,வாசல், பஞ்சணை மெத்தை,அது தரும்
பரித்துவமான தஞ்சணைகள்,வந்தனைகள்,
வாசல் நீ கீழிறங்க கால் ஏந்தும் சொகுசு மகிழூந்து,
மனையாள்,மக்கள் அவர் வசம் வரமாக மேலோங்கும் மனக்களிப்பு
இத்துணை மஞ்சங்களும், மங்களங்களும்,
உன் தேசத்துறவு உனக்களித்த மங்கலம்

உன் இன மாந்தர்களின்,
உனதான உறவுகளின், உயிர்ப்பிலும்
அவரான உணர்வுகளிலும்,ஊசலாடியதாக நீ உரைத்து,
கரைத்த பொய்யிலே புலர்ந்ததே
உனதான இந்த முகிழ் விரிப்பு,

உனதான
கடந்த காலங்களின் ஞாலங்களை
இன்றாவது உன் மனக்கண்ணில் குடியிருத்து,
கொஞ்சமேனும் நிதானமாக உன் மனசாட்சியுடன்
அகவுரை,

இது உனக்குள் நீயே நடத்தும் விசாரணை
இங்கு நீயே வழக்கறிஞன்,நீயே குற்றக்கூண்டின் குடியானவன்
நீயே சாட்சி,நீயே பிரதிவாதி,
ஏன்?
நீ தான் நீதிபதி.
எந்தவிதமான சஞ்சலங்களையும் சகமேற்றாமல்
சாகாவசமாய் உனதான விசாரணை உனக்குள் உருவாகட்டும்,
இப்போது கூறு,
நீ யார்?
உன் அடிவேர் எங்கு மையங்கொண்டது?
இன்றைய உந்தன் இடப்பெயர்வின் ஆழ வேர் எது?
உனதான தற்போதைய வாழ்வின் குவி மையம் யாது?
எங்கிருந்து இந்த சுகபோகம்?,
யாரை உன் சுட்டுவிரல் சுட்டி கட்டியங் கூட்டி
கனிமங் கொண்டது,இந்த சுக வாழ்வு?

உன் கையகம் கருக்கொண்ட களிப்பான,உவப்பான
உன் வரையில் சுவர்க்க வாழ்வின் சூத்திரம்,
இதனூடான பரிமாணம்.இன்றகற்றும் உனதான
ஒய்யாரவாழ்வு.

இத்தனையையும் உன், என் இனத்தின் குருதியில்
அவர்தம் தியாகத்தில்,வேள்வியில்,
வார்த்தைகளிற்குள் கட்டுப்படுத்த,ஒதுக்கமுடியாத
அடிப்படையின் அகத்தை நிதானமாக தரிசிக்க,
உனக்குள் குற்ற உணர்வு குமுறவில்லையா?
உனதான வேர்கள் அங்கு விழுதுகளுடன்,
எரிவது புரியவில்லையா?

இத்தனை சுகத்தை உன் வசம் வாசம் கொள,
இத்தனையையும் நீ அகமெரித்தாய்,
இன்று உன் இனம்
என் சனம்,உற்றார்,சுற்றம்,உறவு,சொந்தம்,பந்தம்
பாட்டன்,பூட்டி,
அன்பான தாத்தா,கொள்ளுப் பேரன்,பேத்தி
மாமா,மச்சாள்,மச்சான் அத்தான்,
இத்தனையையும் தகமாக தாங்கும் சமூகம்.

அத்தனையும் இன்று காமுக, அரக்க,இனவெறிக் கூட்டம்,கணை எறிந்து,
பாதுகாப்பென்ற பாதைவிரித்து அதற்குள் முகம் கொள்,
உனதான பாதுகாப்பு எமதானதென வழமைபோலவே பொய்யுரைத்து,
எந்த வக்கற்ற நிலைமையில் வேற்று வழியற்று இந்த
ஆரியத்தின் வலையத்தில் வாழ்வழிந்து போயினரே,
எங்களகத்து சொந்தங்கள்,தமிழினத்து சாகரங்கள்.

என் உணர்வுகள் ஊறி,என் மண்ணின் மகத்துவம்
சாற்றி,போற்றி என் முந்தையர்,தந்தையர் வாழ்ந்த
என்,உன் மண்
இன்று ஆக்கிரமிப்பு பயங்கரவாதியால்,
மகிந்தாவின் மனிதாபிமானம் அறவே அற்ற மெத்தனத்தால்,
கோர இனவெறியால்,கொலை நெஞ்சக கூத்தால்,

இத்தனை உறவுகளையும் அள்ளி துடைத்து,
சாவு விரித்து,எங்கள் சந்ததி அழித்து,இன்னமும்
சாந்தி கொள்ளாத இனவெறியன்,
மதி மயங்கிய மகிந்த சிந்தனையின் சாகித்தியம்.

பாசக்கயிறு எறிந்து என் பாச உறவுகளை,
பாவி எமனவன் கொல்லவில்லை,மாறாக
ஆவி கலங்க எறிகணை ஏகத்துக்கும் வீசி,
கொத்தாணிக்குண்டெறிந்து,இரசாயனக் குண்டு போட்டு,
ஆட்டிலெறி எனும் அரக்க குண்டடித்து,
நேரகாலமின்றி,வயது வித்தியாசமான்றி,
உணவை,மருந்தை பொறியாக்கி,
தாகமகற்றும் தண்ணீரை விசமாக்கி,
குற்றுயிராக,கொலையுதிராக,கொன்றான்,
இன்றும் கொன்றும் குவிக்கின்றான்,

என் இனமோ இன்றோ,நாளையோ,முற்றாக முளையழித்து
குவித்துவிடுவான் கொலைக்களத்தில்,
வன்னியின் இன்றைய வசந்தமே இந்த அவலத்தால்
முகங்கொள்கின்ற உண்மை நீ அறியாயோ?,

இத்தனையும் நீ அறிந்தே இருப்பாய்,
பாயென்ன?
இருக்கின்றாய்,
ஆயின் நீ என்ன அறம் ஆற்றுகின்றாய்?
உன் பரம்பரையின் பாரம்பரியத்தை
புறந்தள்ளி,புறம் கூறி
ஒளிந்திங்கே வேற்று முகம் காட்டி, ஒரம்கட்டுகின்றாய்,
ஒதுங்கியே நின்று வேடிக்கை வேறு பார்க்கின்றாய்,
சமயத்தில் முதலைக்கண்ணீரும்,மதில் மேல் பூனையாக,
சந்தர்ப்பவாதியாகி சதிர்முகம் கொள்கின்றாய்.
சில சந்தர்ப்பத்தில் சர்ப்பமாகி,மூசி விதி
வழியென விகல்பம் வீச்சுகின்றாய்,

போதும் உந்த போலிமுகம்,அரிதாரவேடம்,
முகத்திற்கஞ்சி வேசையாடலை அறவே தவிர்,
அறமாய் விரி.
ஆக்சையான வசீகரம் உன்னை வளம் கவளட்டும்.
ஆனதான அவலத்தின் வலமுன்னை வலையட்டும்.

இப்போ!
உனதான ஊனமாகாத இனமான,உறுதியான உயிர்ப்பான
சிந்தனையின் வீச்சுன்னை சிறப்பித்திருக்கும்,

மேலும்!
மேன்மையான,களநிலைக்குள் கனதியாக நுழைந்ததனை,
விசாலமாக உன்னில் விளைக்கின்றேன்.
வெஞ்சமரில் என் இனம் அழியவில்லை,
ஆயின்!
வீர அஞ்சலியை நானும் வியாபமாய்,
ஆற்றியிருப்பேன்,அவர் வீரியத்தை,
வாஞ்சையாய், சிலாகித்து,
இன்னமும் ஆன நிதியோ,நீதியான, மாற்றமற்ற எனதான
அதியுச்ச பங்களிப்பை என்றும்போல் இன்றும்…….

என் சுதந்திர போராளிகளின்பால் அன்றும் போல் இன்றும்,
அவர்தம் வீரத்தில், ஈகத்தில்,யுக்தியில்,
யுத்தகாண்டத்தின் தாற்பாரியத்தில்,மதியூக
தலைவனின் உபாயத்தில்,தரமான போர் வியூகத்தில்
மறவர்களின் தீ வியூகத்தில் அவர்தம் வீரியத்தில்
ஒப்பீடற்ற தியாகத்தில்,
அவர்களின் ஆற்றலின் அகம்பற்றியே என்றும்,
நிலை பிறழாமல் நிதானம் ஆற்றுகின்றேன்.

ஆனால்!
இப்போது வன்னி முகம் கொள்ளும் தாண்டவ,அகோர தளத்தை,
ஆங்கெரிந்து போகும் என் இனத்தின் அவலத்தை,
இந்த அவனியின் முகத்தில் ஒப்பேற்றி,
சர்வத்தின் முகம் நோக்கி நாம் கேட்கும் நீதியின்பால்,

இந்த அநியாயம்!
அவலம் யுத்தமல்ல,
தமிழர் இன அழிப்பு,முற்று முழுதான தமிழின அழிப்பு.
ஆதலால்!
ஆரியத்தின் அகோர வதைமுகத்தை இனம் காட்டி,
தினமங்கு சாவிரிக்கும் பாயாக என் இனம் சரிவதை,
நிறுத்த நீதி கேட்கும் எம் புலம் பெயர் உறவுகளின்,
தர்மத்தின்பாலான கவனயீர்ப்பு போராட்ட களத்தில்,
உன்னை கணமேனும் காணவில்லையே?

கயமாற்றும் உன் முகம் திருத்தி
கணமேனும் தாமதியாமல் அறம் கேட்டேகும்
என் அன்னை மண்ணின் துயர் துடைக்க உன்
ஆதார்ச கரத்தையும் அவனி வசமாக்கு,

உனதான குடும்பத்துடன்,குழந்தை குட்டிகள் ஈறாக
உன் உற்றம்,உனதான நண்பர் வலயம்,
மேலும் உன்னுடன் ஊடும் மற்றும்
மனிதாபிமனங்களுடன்.

அன்றும் சரி,இன்றும் சரி
எம் தேசமெரிவதை தடுத்து, தம் தேகமெரித்து
போராடும் என் இன சோதரர்களின் கரம்பற்றி நீ நிதியாக
ஒரு சதமேனும் சுரக்காத உன் அகக் கதவை என்னால்
மறக்கமுடியவில்லை.ஏன்?
மன்னிக்கவும் முடியவில்லை.

ஆயினும்!
உன்னை நீயே சிலாகித்து உனதான உரமான பங்களிப்பை
காத்திரமாய் கனதியாய் ஆற்று,
உன் மனையாளுடனும்,
உன் சந்ததி சுரக்க சிறப்பித்த உனதான
சந்தங்களுடன் உடனே நீ வீதி வந்து
வலிதான உன் வலம் சுரத்து,
மீண்டும் உனை உரிமையுடன்,கனதியுடன்,
கரம் கோர்த்து,

வாஞ்சையாக உன் உணர்விற்கு!
மேலதிகமான ஓர் ஆழ அறிவுரை,
நீ விழுதாக புல வாழ்வில் புணர்ந்திருக்கின்றாய்,
நன்றாக புரிந்து கொள்,
உன் இடை,அடையாளம் தான் புலவாழ்வின் குடியுரிமை,
உன் தாற்காலிக எந்த அடையாளத்தாலும்,
உன் இன சந்தங்களையோ,சொந்தங்களையோ,
சொற்பமேனும் மாற்றமுடியாது,மதிகொள்

இந்த நாட்டவனைப் பொறுத்தவரை மட்டுமல்ல,
உன்னைப் பொறுக்கியவரையும் நீ குடியிருக்கும் இந்த வாடகை வீடு
உன் சொந்தவீடாகாது,
இந்த இனம் என்றுமே உன் அக இனமாகாது.
இங்கு இவர்களின் மனதில் நாம் என்றுமே அகதிகள்தான்,
விரைவில் அகற்றப்படவேண்டிய கழிவுகள்தான்,

இந்த சுடும் உண்மையை நீ தினசரி உன் வாழ்வாக
உள் வாங்கி இருப்பாய்,
இல்லை என்றால் உன் அகம் இழைந்து கூறு.
எப்படி?
உன்னால் உனக்கு நீயே பொய்யுரைக்க முடியும்?
ஏனெனில் இதுதான் யதார்த்தம், நான் தினசரி,
ஏன்? என்போன்ற எத்தனையோபேர்
முகம் கொளும் மறுக்கமுடியாத,
உளம் சுடும் உண்மை இது,

ஆகவே,
உனதான உன் சொந்த தாயகத்தின் விடுதலைக்கு,
தயக்கமில்லாத ஒப்புவமையற்ற,
ஓளவியம் ஓம்பு,
உன் சந்ததிகளிற்கு சந்தேகமற்ற உண்மை உரற்று,
நாம் யார்?
எம் செளகரிய வாழ்வின் சகம் இயற்று.

சாவகமாக!
சாதூரியமாக,
எம் இன விடுதலையின்,மகத்துவத்தின் காத்திரத்தை,
தமிழீழம் மலரவேண்டிய கால நித்தியத்தை,
எமதான தாய் மொழியின் தாற்பாரியத்தை,
சாந்தமாக,நெஞ்சில் ஊற,
அந்த விடுதலையின் விவேகத்தை,
காலம் எமக்களித்த காத்திர தகமையை,

கரும் புலிகளின் உன்னத தியாகத்தை,
உவமைகளிற்கப்பாற்பட்ட காவியத்தை
வான் புலிகளின் வைராக்கியத்தின் வாகையை,
வலிமையாக நீ உரத்து உரை,
விடுதலையின் வாசம் வாசல் பரப்பு,

அதை இந்த வீதி வந்து விதந்துரை,
வன்னி வாசல் வந்த சோகம் சொல்லு,
வாகை கொள வீரர் வகுக்கும் பாதை கூறு.
இன்றும் நீ இந்த வைய நிலையை உன் வசமேற்ற
மறுத்தால்,விழுதாக நீ இங்கல்ல
எங்குமே இந்த வையகத்தில்,
உன் விழுதுகள் வீர விழுதெறியா,
விசமிகளாக உன்
வாசல் வரும்.
அன்பான,ஆதங்கமான,ஆதாரமான
எச்சரிக்கை,
திரும்பிப் பார் அதையும் விரும்பிப்பார்,
உண்மையிலே நீ உன் அம்மாவின்
அன்பான ஆளுமையில்
ஓர் பருக்கை பழஞ்சோறு பருகியிருந்தால்,
அந்த பாசம் நெகிழும்,
எம் ஈழவாசல் விரியும்.

உன் முற்றத்தில் நீ ஓய்வெடுத்த,
அந்த ரகம் சொரியும்.அந்த ராகம் சொரிக்கும்.
ஆங்கு உன் முகம் தரித்த,
முற்றம் புரியும்,அந்த வாசம் நைந்த நேயம்
நெருக்குருக்கும் உன்னை நிதம் செருக்கும்.

அந்த மண்ணை,
அதன் சுவாசத்தை சுவாசிக்க இன்று நீ,
வீதி வந்து போராடாவிட்டால்,
நீ போதிக்க அந்த விதிதான் வீதி வரும்.

பாசமுள்ள உன் தேசத்து பிரிய உறவே!
இனியும் நீ புறமோந்தால்,
உன்னையும் இத் தேசம் புறமோதும்,
எங்கள் மண்ணின் ஈரம் கலந்த அந்த,
சுவாசம் எனக்குமட்டுமல்ல,
எனக்காக,உனக்காக,எம்தாய்மண்ணிற்காக
எதை,எதையெலாம் இழக்கக்கூடாதோ,
அதையெலாம் இழந்து,
எதை எம் தேசியக் கனவாக விரித்து,
எங்களக வித்தகர்கள்,எம் தேசப் புதல்வர்களின்
யாசகங்கள்,வேள்விகள்,

அத்தனையையும்,
அருகற்று அகன்றெங்கும் போகாது
இளமைக்கால கனவுகளை எம் தேசத்திற்காகவே புறந்தள்ளி,
தாயக மலர்விற்காக,
வேதவாக்காக,எங்களிற்காக,
எம் இன விடியலிற்காக,
தமிழீழ மலர்விற்காக,தம்மையே,
ஆகுதியாக்கிய வீர மண்ணின் மைந்தர்களின்,
ஈகக் கனவை நனவாக்க எந்த இழப்புக்களையும்,
அகமேந்தி, இந்த யுகத்தில் எம் திடமான
தேசியத் தலைமையின் அணிவலைந்து,
ஆக்ரோசமாக போராடும் எம்
தலைவன் குழாமை பலப்படுத்துவோம்.

உன் வலிமையான,திடமான,உரமான,
ஊக்கமான,சிறப்பான பங்களிப்பை
உவப்பாக உளம்மொண்டு வீதி
இறங்கி போரடும் எங்களுடன் உன்
கரங்களை எங்களுடன் பிணைத்துக கொள்.

இன்னல் தீர்க்க இதுதான்,
எங்களது உறுதியான,இறுதியான,
இகமேகி,உரமாக்கி,
உலகவலங்கள் உள்வாங்க,உரிமையாக,
ஊர் திரண்டு,வீதி முடக்கி,
தேர் இழுப்போம்,

இந்த வையகத்தை எங்கள் வசமாக்க,
எங்களக வலி உணர்த்தி,
நீதி கேட்போம்,எங்கள் வாசல் வதைக்கும்,
பகையின்,
அநீதி சாற்றி,எங்கள் தேசவிடுதலையின்,
அத்தியாவசியம் அவனி வசப்படுத்தி,
நித்தியமாய் நிலைக்க தீர்வான தீர்வாய்,
திசைகொட்ட திசைவான தீந்தமிழீழத்தின்
அவசியத்தையும்,அதனூடான அத்தியாவசியத்தையும்,
அவனி வலங்கொள்ள வலிமை சூழ்த்தும்,

எம் இளையவர்களின் ஈகைக் கரங்களை,
ஊக்கத்துடன் உற்சாகப்படுத்தி,ஊசலாடாகாத,
உந்து சக்தி அவர் வசம் வலப்படுத்தி,
உரிமைப் போரை உரிமையாய் தலங்கொள,
தார்மீக தரமாற்றுவோம்,வந்து உன்
வலிமை உணர்த்து என் வையக உறவே.

ஞாயிறு, 10 மே, 2009

ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெருப்பு.



எங்களின் சர்வ சப்த நாடிகளும்,
உணர்வில் எஞ்சியிருந்த உயிர்த் துடிப்புக்களும்,
வாஞ்சை மீறி வதை முகமேற்றதே,
அஞ்சி,எங்களகம் ஆறாத்துயரால் வடியுதே.

சிங்கள கிராகிதர்களின் ஓங்காள எறிகணையால்,
எங்களக உறவெல்லாம்,குறியின்றி கொன்றொழித்து,
தன் களம் வென்றதாக இன அழிப்பை ஏற்றுபவன்.
எண்ணிக்கையில் அடங்காத என் இனத்தை சாக்காடேக்கி,
உடல் ரணம் உற்றவரின் இலக்களவு தெரியாத,

சவக் களம் ஆக்கியவன்,சர்வமாய் பொழிந்தங்கே,
என் இனத்தை இலக்கின்றி எண்ணிக்கையற்று,
கொலைத்தெடுத்து,உலைக்களம் ஆற்றுபவன்,
பயங்கரவாதியான ஆரியத்தின் படுதலத்தால்,
பாழடைந்து போயினவோ?எல்லாம்
தாழடைத்து ஏகினவோ?தமிழினமே அழிந்ததுவோ?

குண்டடித்து கொன்றான்,கொலை வலயமாக்கி,
வான் வல்லூறாய் வகை,தொகையின்றி கொன்றான்,
சகட்டுமேனிக்கெல்லாம் பல் குழல் எறிகணையால்,
பரந்தெங்கும் கொன்றான்.பாவி அவன் ஆக்கிர இனவழிப்பின்,
உச்சக்கட்ட கொடூரமாக உடலெரித்து,மூச்சடக்கி,
பிராணவாயுவின் பிரம்மம் களித்து விசவாய்வெறிந்தும்,
கொன்றான்.

இன்னவகை ஏதும் உண்டோ? அத்தனையும் தனதளமாக்கி,
இன்னாவகையாலெல்லாம் எந்தன் உறவழித்தான்.
சர்வதேசமெலாம் சாதகமாக சிங்கள வசமானான்,அதன்
சாதகத்தால் சிங்களவன் சாக்காடாக்கி,
எங்கள் சாத்வீக நிலமழித்தான்,இனமழித்து,
தங்கள் வசமிழக்க வைக்க,
இந்தியனே வன் துணையானான்,

எங்கள் வல்லமையை கொல்வதாவே,
வன்ம முகமேற்றான்,வதைபட்டு கொன்றொழிப்பதென்னவோ!
தமிழின சமூகத்தை மட்டுமே,வயதெல்லையற்ற
குஞ்சுகள் முதல் குமர் ஈறாக முதியோர் வரைதான்,
மாற்றீடில்லாததால் மருந்து முதல் உணவுவரை,
தடையாகப் போட்டான்,எவற்றிற்கும்,
வசியாத தமிழுணர்வால் எதையும் வன்னி தகமேற்றி நின்றார்,

தருணம் தன் வசமாகாததால் தமிழகத்தில் தேர்தல்.
வருணம் பூசும் வர்மம் வாசல் தேடி வருவதால்,
வரும் தேதிக்குமுன் தன் வசமுள்ள கருவிகளால்,
எம் களமெல்லாம் கருக்கொண்டு,
கொலைப் பட்டறையாய் கொலுவாக்கி வதைத்தான்,

ஈழ நெஞ்சகங்களை,
உதிற்றி,உடல் சிதறிக் கருக்கி,
ஊனங்களாக்கி,
இன்னமும் எத்தனை உயிர்களை காவு நாம் கொடுப்பது,
புத்த நரபலிக்கு,

சொன்னான் இன்றொருத்தன்,
நம்பிக்கை துரோகத்து தாரகன்,
தரமேதுமற்ற பாதகன்!
சிங்களவனின் சிகம் துடைத்து,அங்கவனின் அங்கம்
ஆராதித்து,அரங்கேற்றும் தன் சுய பாலங்களின்,
சூத்திரன்,வல்ல தமிழினத்தின்,
வரலாறு கூட மதிப்பழியா பழியன்
பாடை வெகுவிரைவில் பாதமேற்றும் பரதேசியவன்.

தரமற்ற தானத்தில் இருந்து,
அறமற்ற வாய்ச்சொல் அரற்றினான்,இன்று
வன்னியில் உள்ளவர்கள் யாபேரும்,
போராளிக்குடும்ப அங்கத்தவர்கள் என்றும்,மீதம்
மாவீரக் குடும்ப உறுப்பினர்களும் என்றும்,

முதலில் இந்த மூதேவிக்கு ''மா'_
என்ற சொல்லை உச்சரிக்க ஏதும் தகுதி உண்டா?
நிற்க!
இத்தகு வார்த்தை பிரயோகம் மூலம் இவன்
மூசிப்பது யாதெனில் வன்னிவாழ் மக்களெல்லாம்
வதைமுகம் பூசி வாரிக் கொல்லவே இந்த வார்த்தை பதகளிப்பு
இதன் மூலம் தன் எதிர்கால காத்திர முன்னெடுப்பு,

எப்படி வரத்தைப் பெற்றானோ?
அப்படியே இவன் ஆயுள்,
ஆக!
பிரதியுபகாரம் ஒன்றுள்ளதல்லவா?
அதன் பிரதி விரைவாகும் எங்கள் இன விடுதலைக்காய்.

TR_Song

TR_Song

சனி, 9 மே, 2009

திரை மூடிய உரை உரத்தது.


ஈனத் தரம் தந்த சுரம்,
இன்றுடன் இல்லையாயிற்று,அந்தோ
இந்த இழிநிலை சூட்டியவன்,
எத்தரம் கோணியிருந்தான்?

புத்தனது சூத்திரத்தின் பூத்துருசாதி,
எத்தனாக எங்கள் இளந்திரையை,
எட்டப்பனாகவா ஆக்கிவைக்க ஏற்ற
பாத்திரம் புரிந்திரு புலம் பெயர் உறவே.

ஆற்றல்கள் அழியவில்லை இதை
ஆதங்கமாய் என்றும் பூண்டிருப்பாய்.
அது ஆதவன் பிரபாவின் ஆய்வு தளம் ஆங்கு
அவனாற்றா அணுகுமுறையா அரங்கேறும்?
புவனத்தில் புரியாத புதிர் ஒளிப்பான் என்றும்,
புரியாத நேரத்தில் அவன் ஒளிர்வான்,

மாற்றங்கள் கள ஆற்றல்கள் கைவரும்,கலை
தோற்றங்கள் தோயும்வரை தோன்றிருப்பான்,
தோய்வென்ற,தொய்வுகள் அவனாற்றான்- ஆயின்,
ஆரியன் வசம் சாவிரிக்க சூரியன் வகுத்திருப்பான்.
ஆகு தளம் அறியாமல் வால் பிடிக்கும் சில கூலிப்படை,
குறிக்கொள்ளும் குரல் பிரியும்.

சந்தேகனே!
எம் இனச் சந்தேகனே!
உன் தேகம் உறுக் கொளும் நோயறிவாயா?ஆயின்
உன் தேசம் தறுக் கொளும் நாவறிவாயா?

பாரினிலே எம் பணியினை செம்மையாக்கி,
வெம்மை கொள்ள,
தாரணியில் தன் அணியால் தரமாக்கும்.
தரம் கொள்வான் எங்கள் தகமவன்.

பற்ற!
உன்னகம் பற்ற,
உன் உளம் ஏற்றும் வளம் ஊறிஞ்சி ஊனமாக்கும்,
ஊதாரிகளின் நாரித்தனம் வற்றி வாஞ்சை கொள்ள,
கைத்தலம் பற்றி அவன் கை தருவான் காலம்
ஏற்ற பணி சீரஞ்சீவிதமாக்கியே!
சீர் தருவான் சீராளன்,
இகம் இயங்க தமிழீழம்.

வெள்ளி, 8 மே, 2009

பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்


குருதி உறைந்த தேசம் தங்கள்
உறுதி உழைந்தே உலவுமா?ஊனம்
சொருகி களைந்து உருகுமா?
பருதி உறைந்தே பரவும்,இந்த
மருவும் நிலையே மருவும்.ஈனம்
அருக உயிராய் இயங்கும்.

இரத்தம் ஈயா எந்த போரும்,
இரக்கும் நிலையே சாரும்.
சுரக்கும் இந்த சுயமே ஈழம்,
மரத்தும் மரபாய் மாய்க்கும்.
கருத்துப் போகா காயம் கொண்ட
கனலாய் சீறிக் கீறும்,இது
உளத்தில் என்றும் உறுத்தும் தளைவே
உறுதியாய் களத்தில் தோற்றும்,
கனதி மேவி கடனாய் தீர்க்கும்,

இந்த,
உரத்தை எங்கும் ஊனமூட்டா,
கனத்தல் என்றும் வேண்டும்,கரி
காலன் இயக்கும் காலம் என்றே,
கருவில் சுமக்க வேண்டும்.இந்த
பரத்தில் உரக்க வேண்டும்.

வீரியப் பேறு கொண்டே வீரன்
இறுக்கும் களமாய் விரியும்,
இந்த,
ஆரியத்தின் இறுதி மூச்சை அழிக்கும்,
பாரிய களமே திறக்கும்,
பார்!
இந்த விஸ்வரூபம் கொளவே வீரியன்
விரித்த வலையில் வீழும்,
பகையோ!
விதையும் நிலையே யாக்கும் இனி
பிரபாகரமது ஆற்றும்,பிரம்ம
சூத்திரம் சூட்டிய புலிகள்,
தீயாய் பகையை தீய்க்கும்.

சாலச் சிறக்கும் ஞாலம் இதனை
யாக்கும் காலம் கண்ணில்,
ஆத்ம காலம்
சுரக்கும் சாரம் தாக சன்னதி
வந்தே தேற்றும்.

பரக்க ஈழம் தேய்க்க வந்த ஈன
ஆரியம் அகலும்,பாரே
இறுகப் பற்றும் ஞானம் விதைந்தே
ஈழ முற்றம் சிலிர்க்கும்..
தமிழ் ஈழம் சிறப்பாய் சிலிர்க்கும்.

வியாழன், 7 மே, 2009

இறுதி யுத்தம்

இறுதி யுத்தம்

ஈழதேசம்.கொம் - panadesan peeddi

ஈழதேசம்.கொம் - panadesan peeddi

உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்


செல்வி ஜெயலலிதா.
பொதுச் செயலாளர்
தலைமையகம்,
அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக்க கழகம்
சென்னை,

புலம் பெயர் தமிழீழத் தமிழர்கள்.
சுட்காட்,
ஜேர்மனி,
07.05.2009

அதி மேன்மைக்குரிய செல்வி ஜெயலலிதா அவர்கட்கு!
புலம் பெயர்ந்து தற்போது ஜேர்மன் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழனாகிய நாங்கள்,
தங்களின் தாய்மை பொங்கும் உரையினால்,
நிச்சயமாக இந்த துயரஅவலத்தின் மத்தியிலும் துயருறும் எங்கள் ஈழத்தமிழர்களிற்காக,மிகவும் பொறுப்புடனும்,ஜீவகாருண்யத்தின் பிரதிபலிப்பாகவும்,தங்களின் ஆழ் மனதில் ஊற்றெடுத்து,ஊனப்பட்டிருக்கும் எங்கள் மக்களிற்கான உங்கள் தார்மீகக்குரல் ஓங்கி அடிநாதமாக ஒலித்து,
தாய்நிலத்திலும்,புலம்பெயர்ந்து வாழும் எங்களின் இன்னல்களிற்கு ஓர் ஆத்மார்த்த ஓர் ஆறுதலை எங்களகம், ஆழமாக தழுவி, இத்துணை பெருந்துயர் மத்தியிலும் எந்த வார்த்தைகளிற்கும் அப்பாற்பட்ட ஆதங்கத்தை எமக்குள் ஊடுருவி ஆயாசம் உரைத்து ஆரத் தழுவி நிற்கின்றது.
ஆழ்மனமோ இன்னமும் மேலதிகமான உங்கள் செயற்பாட்டை ஏகமாவே ஏந்தி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.

நிலை அறிந்து ஆற்றும் இந்த மெத்தபெரிய உதவி உங்களகமாக விரைவில் அரங்கேறும் என்பதான ஆத்ம எதிர்பார்ப்புக்களுடன்,
உங்களையும் உங்கள் சார் இதயகட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்,தற்போது நடைபெறும் தேர்தலில் நிச்சயமாக மிகப் பெருவெற்றியீட்டி மத்தியில் உங்கள் இரட்டை இலை இலைச்சினையின் தார்மீக ஆதரவுடன் அரசோச்சும் இந்த ஆத்மார்த் காட்சி விரைவில் அரங்கேறும்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழீழத்தமிழர்களின் ஏகோபித்த வாழ்த்துக்களும்,
எங்கள் தொப்பிள் கொடி உறவாம் தாய்த்தமிழகத்து உறவுகளின் ஒருமித்த ஆதரவுகளும் உங்களிற்கு இந்த பெருவெற்றியை ஈட்டித்தரும்.
இது வெறும் எதிர்பார்ப்பல்ல.யதார்த்தம் சுட்டி நிற்கும் தார்மீகம்.

உங்களக மென்மையான,வியாபித்த வார்த்தைகள்,என்றும் ஈழத்தை ஜெபிக்கும் ஒவ்வொரு புலம் பெயர் மக்கள் எண்ணத்திலும்,தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும்,எல்லாவற்றையும் மேவி தாயகத்தில் இடர்படும் தமிழர் மனதிலும் உங்களின் இந்த உரையே தாரகமந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

ஆகவே ஒட்டு மொத்த தமிழர்களது ஆத்மீக ஆதரவும்,ஆசியும் உங்களை செம்மையாகவே இத் தேர்தலில் அளப்பெரிய வெற்றியை உங்கள் கைகளில் அள்ளித் தரும்.எங்களது இதயக்கனியாம் புரட்சித் தலைவரின் பாசறையில் இருந்து,அவரது கொள்கையில் பெரும் பற்றுக்கொண்டு,ஈகையாக நீங்கள் முன்னெடுக்கும் புரட்சிகரமான,உறுதியான,செயற்பாடுகள் வலிமையான,வாகைகொள,புலம் பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்களாகிய ஜேர்மன் வாழ் தமிழர்கள் தங்கள் கரங்களை மிகவும் ஆழமாக பற்றி வாழ்த்துகின்றோம்.

நீங்கள் எவ்வளவு கொள்கைப்பற்றில் உறுதி கொண்டுள்ளீர்களோ,அதேபோல் இழைந்த வார்த்தைகளை உறுதியாக கடைப்பிடித்து அரங்கேற்றும் வலிமை உள்ளவராகவே நாம் கூட கடந்த காலங்களில் உங்கள் செயற்பாடாக அனுபவித்துள்ளோம்,எனவே உங்களின் வாக்குத் தவறாவலிமை வலிமையாக எம் வாசல் வரும்.இந்த நம்பிக்கையின் ஆழத்தில் நாம் அச்சமின்றி எமை உறுதிப்படுத்தி வாழ்கின்றோம்.

தமிழகத்தின் பெரும் புரட்சித் தலைவியே!
நீங்கள் ஆத்மார்த்தமாக ஆற்றவிருக்கும் இந்த அரிய பெரும் சேவையினால் உலகத்தமிழர்களின் மத்தியில் அழியாப் புகழுடனும்,தமிழர் பெருந்துயராற்றிய பெருஞ் செல்வி எனும் வாக்குத் தவறா வலிமைகொள் பெண்ணினத்தின் பெருந்தகையாக வரலாற்றில் என்றும் வசந்தமாக வாழ்வீர்கள் எனும் பெரும் பேற்றின் மூலமாக நீங்கள் திகழ எங்கள் ஆக்ஞையை உங்கள் வசமாக்கி வரும் வசந்தத்திற்காக காத்திருக்கும்,

இன்னல்களில் வாழ்ந்து,இம்சையில் நொந்து,எங்கள் வம்சம் இழந்து,வளம்,வாரிசு,இன்னபிற இழக்கக்கூடாதொலாம் இழந்து,வலிமை மட்டும் இழக்காத,உளவுரணை தக்கவைத்து,உவகை இனியாவது எங்கள் இனமாக்கட்டும் என்றதான வகை எம் வாகைசூட,பூச்சூடும் உங்கள் புன்னகையிலான மென்னகை எங்கள் வளம் வார்க்க பார்த்து பவ்வியமாக,

இத்துடன் இத்தணை எதிர்பார்ப்புக்ளுடனும்,மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் வசமாக்கி
பூக்கும் ஈழம் எனபதான பூரிப்பு அக மேக,

நட்பாற்றும் நன்றியுடன்,
ஜேர்மன்,
சுட்காட் வாழ் ஈழ நேசிப்பு யாக நெஞ்சங்கள்.

மீண்டும் உங்கள் கட்சியின் வெற்றிக்கான வாழ்த்துக்களுடன் தொடர விழையும்,
வாஞ்சையாற்றும் நெஞ்சகங்கள்.

புதன், 6 மே, 2009

வேதினியில் வேகாத வெங்களம்


ஈழத்தின் அழுகுரல் கேட்கின்றதா?அந்த
ஈனர்கள் கொடும் செயல் புரிகின்றதா?
மானர்கள் வாழ்விடம் மரித்ததய்யா!அங்கு
ஊனர்கள் ஊழியமே கருக்குதய்யா!ஈழம்
கருகுதய்யா!
ஊனமாயங்கு வடியுதய்யா! வனையுதய்யா.

வாழ்வளித்த வன்னி நிலம் வளம் அழித்து,
வாயார விருந்தளித்த விதம் மலித்து,
வீணர்கள் படை ஆற்றும் கொடுந்துயரம்,
வித்தகத்தில் விதந்துரையா பெருந்துயரம்.
பெருந்துயரம்,பெருந்துயரம்.

வந்தாரை உளமார வரவேற்று,
மந்தாரை பூவாக மனம் உவந்து,
மமதைகள் உலவாத பெரு மனமே இன்று
வலி வதை பட்டங்கு படுங்கோரம்,
மலிவானதே,
சாக்காடு விரித்தங்கே சதிராடுதே.
சரீரங்கள் சதை பிளந்து விதி பேணுதே,
விதி பேணுதே,மனம் நாணுதே.

பால்குடி மாறாத பாலகர்கள்,
பாலங்கு சுரக்காத மாரப்புக்கள்,
ஆதங்கம் ஆசுவாச மனம் சுரக்க,
அன்றாடம் உணவிறகாய் அவர் பரக்க,
ஏனென்று கேளாத ஏகாந்தமாய்,
ஏனிந்த தரணியும் பாராமுகம்?
பாராமுகம்,ஆறாமுகம்.

வகுந்தெடுத்தால் அடங்காது அவர் துன்பம்.
வகுந்தெங்கும் தினம் அவர் அகம் வாட்டும்.
அகம் வாட்டும் நுகம் நோகும்.
பாரெடுத்து பகிர்ந்துருகும் பாசமனம்.
போரெடுத்து புவியிலே அறம் கேட்கும்.
எங்கள் அறம் கேட்கும்.
அதன் தரம் யாக்கும்.

கார் கொள் மேகத் திரள் கலைந்து விடும்,
கனிவாக அது கூடிக் களமியக்கும்,
வேரெடுத்த புலிமனம் வேதனையாற்றும்.
போதினிலே வலி சூழ் தளம் பிறளும்.
தளம் பிறளும்,எங்கள் களம் உலவும்.

பார்! விரைவில் பவனியே பதில் பகரும் அந்த
பாதையிலே தமிழீழம் பவனி வரும்.
பவனி வரும்.
ஈழம் அவனி வரும்.

திங்கள், 4 மே, 2009

எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்



கண்முன்னே களமாற்றும் இவ் ஒளிப்படம்
கனவாக இருக்கக் கூடாதா?
எண்ணங்கள்,நினைவுகள்,
என்னை எரித்து,அகமெரித்து,
நினைவுச் சுழல் எனை
நிலை தடுமாற வைக்க,விரிந்து நிஜமாற்றும்,இந்த
நினைவழியாக் காட்சி,

வன்னியில் வரிந்து,நின்று,நிதம் கோரமுகம் காட்டும்,
அன்னியனின் அரக்கத்தனத்தின் அழியாத,
ஆக்கிர,உக்கிர, வெறிப்பாட்டில்,
வெந்த என் சொந்தங்களின் சொரூப முகம்,

ஆம்,
கிஞ்சித்தேனும், ஈரமில்லா, இந்தியனின்
இரசாயன கந்தகத்தின்,
ஒத்திகைக்கு வித்தகம் காட்ட ஈழத்
தமிழனின் இன் முகம்.
இத்திசையில் இம்சையாய்,ஊனம் வடிய,

என் உறவின் இந்த
வேதனையை ரசிக்கவா?
இந்த காந்தியக் கூட்டம்,எங்கள்
வேதனைக் கூட்டில்,
தன் விஷ வாய்வை எம் விடியல் தவி(க)ர்க்க
வீசிக் கூத்தாடியதா?

உதட்டில் என்ன உத்சாயனம் உதித்தாலும், இந்த
உடலெல்லாம் உரித்த ரணத்திற்கு நீ எந்த
ரட்சத்தை எங்கள் ஆகுதி ஆக்குவாய்?
உன் மெத்தனமான,
அரக்கத்தனமெல்லாம் நீ
ஊட்டிய ராமாயணத்திலும்,மகாபாரதத்திலும்,
வெறும் ரசனையாய்,ரசித்ததை,வெறும்
உவமானமாய் உற்றாரை நகைத்ததை,அத்தனையையும்

இன்று எம் உறவில் ஊனமாய்க் கொடுத்ததை,
அதனூடாய் எம் இனத்தை இம்சையாய், நீ
வதைப்பதை,
இன்னமும் எத்தனை காலமென நீ நீட்சிப்பாய்?
காப்பான் கடவுள் என காலத்தை
ஒத்தி வையோம்,
ரட்சிப்பான்,அதனூடாய் உனை தண்டிப்பான் என,
கோயில் குளம் ஊடமாட்டோம்,நேர்த்திக்கடன்
நெருடமாட்டோம்.

எந்த தண்டனையை நீ ஈந்தாயோ?அதன் பிரதி பலன்தான்
எங்களெம் பிரபாகரம்கள் உன்னை,
உனதானூடான சிப்பாய்,
கலங்களை,நாளும்,பொழுதும் நயந்தெடுத்து,
களத்தில் கனதியாய்,
களையெடுத்து,சினை நறுக்கி,சீந்த
யாருமற்ற களப்பிரதேசத்தில்,
காணவும் கிடையாமல்,பெறுமதியற்று
தின்னும் உன் நாதி களைந்து,

நாதியற்றுப் போனதை நாழிகைகள்,நாட்களாக
நகர்த்த உன் நரகர பேளைகள்
தாட்ட உன் சடலத்தின் எண்ணிக்கைகள்,

காணாமல் போனோர் பட்டியலில் உங்கள்
அடையாளங்களும்,
கருக் கொள்ளும் கட்டியல் எப்போதோ தயார்,

ஏனெனில் உங்கள்,
கள யதார்த்தம் அதுதான்,
காலப் பிரளயம் விரைவில் இந்த சங்கதி சாற்றும்,
கானல் வார்த்தை இல்லை கால யதார்த்தம்,

கரிகாலன் ஆற்றும் கால உலாவிது,
ஏந்த இந்திய அரக்கர்,நரகர் கைகூட
உன் கரம்பற்றி கூப்பாது.

காரணம்,
காலவெள்ளத்தில் கரையும் கந்தகப் பொடியின்
கரைசலில் உன் உடல்
ஊனம் நீர்த்து,
சாணம் தெளித்து,சாக்காடாற்றாது, சங்கமிக்க
சகாக்களற்று சாக்கடையாகும்.

தர்ம யுத்தத்தின் சாகர சங்கல்பம்,
சாவெழுதி,ஆகுதியாகி,எம் அறம் காக்கும்,
காவியப் பர்வதங்களின்,
பாமாலை சங்கமம்,
ஒப்பாரி ஏகாத ஓர்மங்கள்,
தப்பாத முகாரி ஒலிக்கும் சந்ததிகளின்,

சப்த நாரி ஒழித்து,
பூபாளம் ரீங்காரிக்க தங்களை,
அனல் பாதமாக்கும்,
ஆங்கார சொரூபங்கள்,

பூம்புனல் மேவும் இனி எங்கள்
வயல் பரப்பெங்கும்
பூங் கோதி அமைக்க பூத்த இவ் யாகங்கள்
புவியில் ஈழம் சூடும்,
மகோன்னத மகோற்சவம்,
மாண்பாய் விரிய பூம்பாவாய்,

புவியில் தமிழீழம் காத்திரமாய் புன்னகைக்கும்.
எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
ஆணை.

ஞாயிறு, 3 மே, 2009

வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.


குருதியின் சுவடுகளற்ற
குரு சேத்திரம் ஏதும் உண்டா?
பருதியில் இந்த சுருதியின் மையமே
இரத்தக் குறிதான்,

இதில் இருந்து நா(நீ)ண்ட விட்டம்,
அதனூடான ஆரை,
ஆக்கிரமிப்பின் ஆதாரம்,எல்லாமே
சுருதியாக சுவண்டிழுத்த குருதியின்
சாரத்தின் சதைப்பிண்டம்தான் இன்றாகிய உலகப் பந்தின்
உறு மையம்.

சிந்தனை சீந்தும் வரலாற்றுப் பதிவுகளும்,
கட்டியம் கூறி தரிப்பது இந்த உண்மையைத்தான்,
எந்த தேச நிர்மாணிப்புக்களும்,
உதயமான புதிய தேசங்களும்,
உறிஞ்சிக் கொண்டதெல்லாம் மானிடத்தின்
உடல்களையும்,அதன் உறுப்பினர்களையும்,

எல்லா சொந்த,பந்தங்களையும்,
ஏகமாக,தன் வாழ்வின்,அதன் வளத்தின்,
தனதான சந்ததிகளின் தனத்திற்குமாக,
இந்த இகம் இழந்தது என்னவோ?
வகை,தொகையற்ற மனித வளங்களைத்தான்,
மனித உயிர்களைத்தான்,

இவ்வளவு களைவுகளிலும்,
களை கட்டி நிற்பதுவும்,களை
சார்ந்த களஞ்சியமாய்,இன்றிந்த
உலகின் விஞ்ஞான சாம்ராட்சியம்.

ஒவ்வொரு வல்லாட்சியும்,
தன் வல்லமைக்காக வளைத்துப் போட,
வதை கொண்டதெல்லாம்,
வலிமையில்லா வகை இனங்கள்,அதன்
தரை,கடல் மார்க்க
மார்க்கங்கள் ஊடான
வல் வளைப்பால் வனைந்து,தார்மீகமற்ற
தண்டனைகளால்,தரணியில் ஆக்கி வைத்த

வகைகளின் சாராம்தான்,
இன்றுதித்த சனநாயகம்,அதனூடான
மனித உரிமைமைகள்,மனு தர்மம்,
இன்று உலகில் தன்னை வல்லரசாக்கி
வலம் வரும்
அமெரிக்கா செய்யாத
அட்டூழியமா?

குடியேறி
வந்தமர்ந்த குடி,
அன்றைய அமெரிக்காவின்,
வளமான குடியாம்
பழங்குடி செழுமையான,செவ்விந்திய இனமதை,
இல்லாதொழித்து அன்று
இகத்தில்,
அவர் பரம்பரை தவிர்த்த கோர இனவழிப்பு,

அகிலத்தில் இன்று தன்னை வல்லரசென்று,
வரம் ஏற்றும் யாகம் எலாம்,
மனித குலத்தின் மண்டையோட்டில் வலம்
வந்த பின்னான உதிப்புக்கள்,
இதில் உதிரியானது போக,
உறுதியானது நிலைகொண்டது
பலம் பெற்ற அவர்கள் வலம் கொண்டார்கள்.

இதை உளம் கொள்ள,
உறுதி வலம் கொய்ய,
ஊனமற்ற பா(தா)கை வகுத்து,
ஈனமற்ற ஈழம் காண்போம்.

எல்லாள வளம் குவிப்போம்,
சொல்லாளா தகம் தகைத்து,
வல்லாள கரம் நிறைத்து,
வரலாற்று நாயகர்களின்,
தரமேற்ற நாம் தகைவோம்.

வல்லமையாய்
ஈழ,
வாகை நாம் நூற்போம்.
கல்லறை மேனியரின் கனவுலகை,
மில்லரின் மிதமான ஆகுதி மேலொரு,
நித்திய வாழ்வரின்,நிசமான முகம் தரித்து
சத்தியமாய் ஈழம்,இந்த


சந்ததியில் நாம் சமைப்போம்.

நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?

பாரெலாம் உன் முகம் பூத்தபோது,
நம்பிக்கை கீற்றொன்று உதயமென,
ஆதங்கம் மனச்சொரிய உளம் தளைந்தது,
வெள்ளை மாளிகையில் கறுப்பு தங்கமென,
கடிதான அடிமை சங்கிலியின் கனம் புரிந்து,
மனம் ஒன்று மாளிகையில் வாசம் புரிய,
மனிதம் மீண்டும் துளிர்க்குமென மயிலிறகாய்,
உளம் தடவி,உறவுகள் ஈனமகன்ற ஊக்கம்.
தடவி உற்சாகமாய் உனை பவனி பதவி நீ ஏற்றபோது,
பவ்வியமாகவே பகடற்று பாரேற்றது.

ஆயின்,
உன் புதல்விகளுடனும்,
புளகாங்கிதம் சுரக்கும் உனதான மனைவியுடனும்,
புடை சூழ நீ மெருகேற்றும்,
படோடபம் ஊட்டும் உன் பொழுது போல்,
நீ உலவுவது சாலச் சிறக்கட்டும்,

ஆனால் ஞாலத்தில் ஓர் மூலையில் மனிதம்
இழந்து,மானம் அகன்று,மதி பிறழ்ந்து,
உற்றம்,ஊர்,சுற்றம், இத்தனையும்,
தழைத்த ஆதார குடும்பம் உறைந்து,
உணர்வெலாம்,சூடிழந்து,உவகை என்றால்,
என்பதன் அறிபொருள் அகன்று,


அன்றுதான் பூமியில்,
தனதான பிரசன்னத்தைக் கூட
குவியம் கொளவிடாமல்,
பிரசவ பலி சுமந்த பத்தினியையும்,
அதன் பிரதியீடான புதல்வர்களையும்,
உலகப் பயங்கரவாதியாய் மகிந்தா,
பல் குழல் எறிகணையால் பரலோகம் அனுப்பி,
பவனி வலம்கொள்வதை,
எந்த வதை மறந்து உனதான பணி மறந்தாய்.

ஐயா!
அகத்தின் வலிகளை எப்படி,
உன் மனத்திரை ஆக்குவேன்,ஆனாலும் என்ன?
அவனியெலாம் ஆழக் காலூன்றி,அகலக் குரலெழுப்பி,
அத்தனை விபரங்களையும்,விரல் நுனி ஆதாரமாய்,
இத் தரணியெலாம் முன் வைத்தது,
நிச்சயமாய் உன் முகவரியில் முகம் கொண்டிருந்ததை,
அலட்சியம் ஆற்றாமல்,ஆவன ஆற்றவேண்டும்,

கல்வியில் நீ ஏற்றமிகு ஆற்றல் உள்ளவனாம்,
அறிந்தவர்கள்,
ஆர்ப்பாரிப்பாக,அகம் நிறைத்து,உரைத்தார்கள்,
நன்று!
மனமிகு களிப்பு உன் அகமேக,
இத்தனை ஆற்றல் உள்ளவனே!

இத்தரணியில்,
தமிழீழம் ஒன்றொரு நாடிருந்த வரலாறு கற்றிருப்பாய்,
கற்றதை நீ ஆதாரமாய் உன் அகமேற்றிருப்பாய்,

அதன் பின்னான,
அத்தனை வரலாறும்.
உன் வெள்ளை மாளிகையின் மனக் கதவிகளிற்குள்,
மையங்கொண்டுள்ளதை,
மனிதாபிமான,சனநாயகத்தை,
தைரியமாய்,அவசியமான, ஆதார்சத்தை,
வீற்றிருக்கும் உன் வெண்சாமரத்தின் வலிமை மொண்டு

இத்துணை அல்லல்படும்,ஆதார சுருதி,
அறமறுந்து,வார்தைதகளிற்கு அப்பாற்பட்ட
ஈழத் தமிழின கதி நினைந்து,
காரியமாற்றுவாயா?

இல்லை மீண்டும்,
உன் வெற்றி குதூகலிப்பில்,
ஈழவல் வேதனை,
கரைத்து உன் குரல் வளையை,குதம் மாற்றி
எல்லாம் வழமையென்று ஏகாந்திருப்பாயா?

நீதியால் ஒரு நிலையை எய்தய்யா,
எங்கள் மீதுள்ள தடையையென்றாலும்,
தகர்த்தெறிந்து எங்கள் தகமையை,

உன் அகம் கொள்ளய்யா!
அது போதும் மற்றெல்லலாம் எம் மாண்பு கொள்
நிலம் கொள் உறவுகளும்,
தளம் ஊ(கா)க்கும் எம் புல உறவுகளும்,
பூவினுமினிய பூங்கரம் கோர்த்தெடுத்து,

பூக்க வைப்போம்,
எங்களகம் கொள்
தாய்த்தமிழீழத்தை.

வலைப்பதிவு காப்பகம்