வெள்ளி, 10 ஏப்ரல், 2009

பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்

சிராய்ப்பு கொள உளம் கூடுமோ?
உராய்ப்பு கொண்ட களம் மீளுமோ?
வீராப்பு கொண்டே தளம் சூழவே,உன்
வாரய்ப்பாய் பலம் கூட்டுவாய்,அந்த
மராப்பாய் மனம் ஏகுமே,வளம்
கூராய்ப்பாய் குலவிக் கூவுமே.

வன்னியின் உறவு தினம் களச்சாவாய்,
அன்னியன் தரவு கனம் மனச் சாவாய்,புலம்
கன்னியாய் எண்ணி கண்ணீர் சாவாய்,உன்னி
குன்னிக் கூனி மனப் பாளம் வெடிக்கும்,வெந்து
மென்னி குறண்டு இனம் வரண்டு பலம் வெடிக்கும்.

விசக்குண்டு ஆங்கு வீசி விளரி இனம் சாக
மலக்குண்டு வீசி அன்று தோற்ற ஆரியம் இன்று
இலக்காய் எங்கள் இனம் மீதொரு இரசாயக்குண்டு
பரீட்சித்து பார்க்க தமிழர் வானரக் கூட்டம்தான்,
வரிகள் தந்த யதார்த்தம் இது.

வதைத்து இந்தியன் களமாக எங்களினத்தை
வாரி புதைத்து வகையாக தன் சூட்சுமத்தை சூசகமாய்
காரியமாக்க, தன் விஞ்ஞான வளமாக்க தமிழன் ஒத்திகை பாலம்.
எத்தனை உயிரை ஓரேயடியாக ஒதுக்கமுடியும் என்பதில்
அத்தனை லயிப்பு!

ஆக்கிரமிப்பின் வலி எமக்கு.
வலி மட்டும் என்றால் அது
வாகையான இருப்பெமக்கு,ஆனால்
அன்னைமண்ணில் அத்தனையும் பலியென்பதே
ஆதங்கமான கலி எமக்கு, ஆதாரமான புலிகளே
பலி என்பான் பாதக அரக்கர் இனம்.
பார் பதை,பதைத்து பலிக்கடாவாக
பாவியான இனம் அங்கு,பாதகர்களால்,
நரபலியான நாதியற்ற,பாதையற்ற பாவியர் தாம் எங்கும்.

பார் எங்கும் பரவிக் கிடக்கும் ஜனநாயக பாசறையே!
ஊர் பிரித்து,எம் உறவழித்து,விசவாய்வு விதந்தூட்டும்,இதயமற்றவர்களிற்காக,நீ
தாராளமாக தயவுகாட்டி ஏராளமாக எல்லாம் ஆ(ஏ)ற்றுகின்றாய்,எனில்
கார் ஆழமாக நாம் கருவி ஏந்துவதில் கருணையை எம்மில் நீ
பார் ஆக்கி பரிந்துரைக்கலாமா?

நாம் சுதந்தாரத்திற்காய் சுடு கருவி சூடும்
சுதந்திர, போராட்ட வீர்ர்களேயன்றி,பயங்கரவாதிகள் இல்லை.
எம் பாதை சமைத்து பாரில் பலமான பாலமமைக்க,
தோள் சுமக்கும் கருவிகளுடன்,தேசியக் கொடியுடனும்,
தேசம் சமைக்கும் எங்கள் தேசியத் தலைமையுடனும்.

தேகம் வீழ்ந்தாலும் சேதாரமாகாத தேசிய இனம்,
சூழசைத்து,,பாரம் சுமக்கும்,
புவனத்தில்!
பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்
பூமித் தளத்தில் பூங்காவியமாய் பூத்திருக்கும்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,


களம் கடந்த வன்முறை புலம் பெயர் நாட்டில்
தளம் திறந்து கொண்டதே,இதை மனம்
திறந்து ஏற்பதா?இல்லை,முளையிலேயே
உறந்தறுப்பதா?மாற்று வழி ஏது?ஆயின்
மார்க்கம் யாது?

யேர்மனியில் அராஜகம் கத்தியின் செருகலால்,
நுகம் கொண்டு,பிரான்சில்,லண்டனில்,
இன்று பூமிப்பந்தின் தொடக்கப் புள்ளியெனப்படும்,
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மையங்கொண்டதை,
அகம் எப்படி மையப்படுத்துவது?.

தளம் திறந்த தர்க்கர்க்கே தம் திறன் காட்டாமல்,
உளமுடைந்து,உணர்வடக்கி,சினம் செதுக்கி,சீற்றம்
ஆழப்புதைத்து, அருகி வந்த எம் மண்ணின் மைந்தர்களே,
பொறுத்தருள்க

பொருது களத்தில் மண் மைந்தர்கள் பொங்கி
உழுது, உருப்புடைத்து,உறையவைக்கும் ரணம்
சொடுக்க இங்கு ரசம் குன்றும் இந்த
ராட்சதர்களின் ரட்சகம்.சாரம்சயனிக்கும்.

புலம் பெயர் நாட்டில் எமதான
பலம் காட்டி எமை நாமே சுருக்காமல்,
இன்னமும் அகம் வேகம் கொள, அணியங்கள்
திண்மையாய் திறனாற்ற..உறுதி கொள்.

உளவுரணில் கைவைக்கும் இன்னோர் வகை
புலவுரண் இது,எமை பணியவைக்க இது ஒரு பாணி
களவுரணில் களம் காண முடியாதவர்களின் மனச்,
சிதைவின் மறுபக்கம்,

தோல்வி எங்கே புலத்திலும்,
தமைத் தழுவி, தகம் சுணைந்து, சுரம் குன்றி, யுக நகையாகி,
யுத்தம் களம் கழுவி,நழுவி, பழம் பாலாகி பணிந்திடும்
பாரில் ஈழநகை புரிந்திடும் என்பதான தகளிப்பு.

புலத்திலும், தமிழீழப் புலிக்கொடி புன்னகை பூச்சூடுவதை,
வலத்திலும், தன் ஆக்கிரமிப்பின் அடையாளம் புதைவதை,
கல(க்)கத்தில் ஊட்டி எம் களப்பணியை கரைப்பதில்,
நுகத்தில் எம் நுதனங்கள் நுகப்பதை,நீண்ட முடியாத,
இனவாதிகளின் இள(ழ)க்கமான இதயவலிகள் இவை.

போர்களத்தின் கோரமுகம் உலகாட்சி கொள்வதை,
தருக்கர்களின், சாரமுகம் சாட்சியாய் சர்வமாவதை,
அரக்கர்களின் அட்டூழியங்களின் அரக்கத்தனம்,
பூமித்தளத்தின் புலமெலாம் புணர்வதை,
அகம் கொள்ளமுடியாத ஆற்றாமையின் தாளுமை.

முகங்கொள்க
தமிழ் மணங் கொண்டவரே.
தளராதீர்,தகவும் முகம் கொள்வீர்,
உலாவரும் உறுதுணை கொள்வீர்.

விழ,விழ எழும் வீரியம் நுகம் கொள்க.
விழாத நகை கொள்ளும் முகம் கொள்க,
தளராத தலைவனின் தகம் கொள்க,தானைத்
தலைவனின் தர முயற்றும் தாகம் கொள்க.

இன்று, நீ ஏற்ற இகழ்ச்சியின்அனுபவம்,
உணர்வுள்ளம் கொண்ட தமிழீழத் தமிழர்களின்
உளவுரணின் இன்னுமோர் நீட்சி.
ஒன்றுமட்டும் உறுதி கொள்.
சுய இரக்கம் மட்டும் சுரக்காதே,சுகிக்காதே,
எவரும் எமக்கான அனுதாபம் ஆற்றவில்லையே
என்பதான ஆதங்கம் அரற்றாதே.அகட்டாதே..

விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,
திரிந்திருக்கும் உறவிருக்கும்,
பரிந்திருக்கும்,எமைப் புரிந்திருக்கும்
பூபாளம் கூட பூப்படைந்திருக்கும்.ஆதலால்
ஏற்ற துறை தேர்ந்தெடுப்போம்,உற்ற
துணையாயிருப்போம்,

அற்ற உறவெல்லாம்
அடைத்து உரிதான உளம் வேணுவோம்.
விரிவான,பரிவான பகலவன் பாகம் சூடுவோம்.
தெரிவான ஈழ நகை சூட,உரிமையான திறன்
சுரப்போம்,உளவுரண் பேணி,
உரிமைப்போர் தினமெடுப்போம்,தீண்டாத,
பரிதி பணிமுடிப்போம்.

சனி, 4 ஏப்ரல், 2009

puthuvai

puthuvai

Thalai Nimirvu Part-2 (DVD Cliz) : Eelaman.net

Thalai Nimirvu Part-2 (DVD Cliz) : Eelaman.net

மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்


மக்களை கேடயங்களாக்கி மறமாற்றார்,அவர்
மானிட கவசமாகி மக்களை காத்து நிறைவார்.
மாமனித சுவாசமே, மகத்தான திறத்தாலே
மனித மன்றில் முடிசூடி மாவீரம் மலர்ப்போரே!

உருவாக்குவதை அருகாக்குவான் ஆக்கிரமிப்பு அந்நியன்
கருச்சிதைவாக்கி உளச் சிதைவை உருவாக்குவான்,முனைய
வெருகச் சிதை மூட்டி,வெங்களத்தில் சங்கறுத்து,
மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்,
ஒன்றிணைத்து, சிரம் கொள்,ஒழுங்கமைப்பான்
ஓங்கார போரொலிக்க தமிழர்,ஓளடதத் தலைவன்.
புனித வலயங்கள் புனையும்
கரிகாலச் சிற்பிகள்,பரி பாலனின் வித்தகர்கள்.

மரியும் மகிந்தாவே!
புரியும் உனக்கு ஆயினும்,
புத்த மத மற்ற பித்த புத்தி
வரிந்து கொண்டு வன்புணர்வு கொளும் உன்
வக்கிரப் புத்தி உளம் கொள உனை விடா?
எனில் அது ஆரிய அழிவுப் பத்தி.

மனிதாபிமானமென்றும்,மகிந்தாவின்,
மாபெரும் வெற்றியென்றும்,
மனிதப் புதைகுழி புதைத்து,
புனிதப் போரென்றும், மனித பேரவலம் விதைத்து,
புத்தனின் தத்துவப் புதல்வரென்று,புலமெலாம்
புலம்பும்,உன் பித்த புத்தி,

எந்த கள யதார்த்தங்களையும் வரையும்
ஊடகங்களையும்,அதன் சார் புத்தி ஜீவிகளையும்,
களையும்?,
உனதான வெந்தணல் புத்தி,
எந்த நிலை வரைய இறுகப் பூண்டிருந்தாயோ?
அந்த வலை அறுத்து, நிலை தறித்து,
வளம் கொள்வோம்,உனை பூண்டாக்கி,

உலகப் போர் பூண கிட்லர்க்கு ஓர் கோயபல்ஸ்,
இதே மார்க்கம் நாண உனக்கு ஓர் கோத்தபாயா?
அதே கிட்லரின் ஆதார்ச
சேனைக்கொரு பிறீட்றிட்ஸ் பவுலோஸ்
சேதாரம் கொள உனக்கு சரத்பொன்சேகா ஆக?
சரித்திரம் உளம் நீ கொண்டிருந்தால்
தரித்திரம் உன் வளம் கண்டிரா?

வரிசையாக உன் வாசலில் எந்த
சிங்கள சிப்பாயும்,ஏன்,
உன் வா(ச)ல் ந(ய)க்கும்
ஒட்டுக்குழுக்களும் கூட
வரிந்து உன் வளம் சேர்க்கார்,காண்பாய் நீ
எரித்து உன் நினைவை கனவாக்கும் கரிகாலன் பேரொளி
சரித்து, வரித்து ஈழ எல்லையாக்கி தமிழ் வாசல்
தெளிப்பார் வாகையாகி உன் வாசல் பிரிப்பார்.

இன்றைய வன்னி நிலை நாளை உன்
வாசல் செழி(றி)க்கும்,யார் கண்டார்?
உன் இனமே உனை சகதியாக்கி,
மகிந்த சிந்தனையின் சித்த ஆர்த்தம் கேட்கும்.

அந்தோ நினதான
புதைந்த சித்தம் யாக்க புவியில் சிங்கதேசம்
சிந்(த்)தை கொளா?

அன்று
செங்கொடி சங்கொலிக்க செவ்வானம் விதைந்துரைக்க
செழுமை காணும் உலகத் தமிழினம்.அந்த
சிலிர்ப்புடன் எம் சிந்தையான சிகப்பு ஈழம்.

தகமையான தமிழீழம்,

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

www.seithy.com

www.seithy.com

செவ்வாய், 31 மார்ச், 2009

எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.


உபத்திரவம் ஈய்ந்தவர்கள்,உவாதையால் உழன்றிருக்க
உத்திரவாதம் உய்த்தவர்கள் உவகையால் நிறைத்திருக்க
பத்திரமாய் எங்கள் தாயுமானவர்கள்,மனம் பாகாய் பசிந்திருக்க
சித்திரமாய் சிந்தை கொள் சித்தம் சிறந்திருக்கும்.எங்கள்
ஈழம் தகைந்திருக்கும்.

இரவு,பகலென்றில்லாமல் இழவு தரிக்க வைத்த ஈனர்
இதய நோயால் இடர்கள் இரைக்க வைத்த பேயர்.
தரவு,மரபு தெரியாத் தண்டனையாய் தகைத்த ஊனர்
உறவழித்து,இனமழித்து,உற்ற சுகம் துய்ப்பாரா?,உறுக்கும்
ஈழ நகை தவிர்ப்பாரா?

ஓராயிரம் எறிகணைகள் ஓய்வின்றி ஓட்டிய இருளர்,
ஓராயிரம் இன,சனங்களை தயவின்றி சாய்த்த மிருகர்,
பாயிரம் பாடிடவா பார்த்திருப்பார் எங்கள் வீர்ர்?ஆரியர்
பாடை ஏற்றி எங்கள் வன்னியிலே புதைத்திருப்போம்.உதய
ஈழம் அங்கே தகைத்திருப்போம்

துவண்டிருக்கும் சொந்தம் சுவாசம் மீட்டிருக்க,
வண்டிருக்கும் மலர் வசந்தம் பூண்டிருக்க,
செண்டிருக்கும் மன சந்தம் அகண்டிருக்கும்.
கண்டிருக்கும் மான உயர் மகிழ்விருக்க,
கொண்டிருக்க கோலம் தளிர்ந்திருக்கும்.


ஈட்டிருக்கும் இகம் பார்த்திருக்கும்,சுக
ஏட்டிருக்கும் பாட்டிருக்கும் லயம் சேர்ந்திருக்க,
மாய்ந்திருக்க பகை ஆக்கிரமிப்பின் சுருதி துவண்டிருக்கும்.
சாய்ந்திருக்க சுழல் ஓய்ந்திருக்கும்,எந்த வையகமும்,
சார்ந்திருக்க எங்கள் தேசம் கொடி யாத்திருக்கும்.

தேர்ந்திருப்பான் சூரிய ஒளி சூட்சுமம் தூய்த்த,
எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
வீசி வரும் சுகந்த காற்றெடுத்து உகந்த ஊர்தெளித்த,
தாகத்திற்கும்,ஈற்றெடுத்த ஈழத்திற்கும் உயிர் தந்த மொழியானவன்.
தமிழீழ விழியானவன்.

ஞாயிறு, 29 மார்ச், 2009

பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்


விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விதிமுறைகள் ஏதும் இந்த புவனத்தில் இல்லை,மாற்றம் உண்டாக்கும் ஒவ்வொரு மாறுதலுமே இந்த பூமியை அடுத்த கட்டத்திற்கு மென்மையாக இட்டுச்செல்கின்றது.அது விஞ்ஞானமாகவோ,அன்றி மெஞ்ஞானமோ?எதுவாகிலும் பரிணாம வளர்ச்சி என்பது இப்படியான விமர்சனம் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு இவ்வகை விமர்சனம் ஓர் அடிப்படையை இட்டு வைக்கின்றது.

ஆயினும் தற்போதைய இக் காலகட்டத்தில் இந்த விமர்சனம் ஆக்க பூர்வமற்றதாகவே உள்ளது.சில சமயங்களில் இவ் விமர்சனம் இருப்பதையும் கெடுத்த கதையாக மாற்றும் அபாயமும் இதில் அமைந்திருப்பதை அவதானமாக பரிசீலிக்க வேண்டிய நுட்பம் அவசியமாகின்றது.சிலர் இதை மாற்றுக் கருத்து என்ற போர்வையில் ஊடறுத்து,ஏற்கக்கூடியதான கருத்தாக்க முனைவதை தற்போதைய கால கட்டம் உணர்த்தி நிற்கின்றது. இந்த கைங்காரியத்தை ஒட்டுக்குழுக்கள்தான் முன் நின்று தடத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.

தேன் தடவிய விசத்தை எம்மோடு ஒட்டி உறவாடி,பரிதாபம் எனகின்ற முகத்திரையையின் போர்வையில்,அனுதாபம் என்கின்ற பார்வையில் அணுகமுனைவதை பல சந்தர்ப்பங்கள் காட்டி நிற்கின்றன. உதாரணமாக,எமது ஒலி,ஒளி பரப்பு நிகழ்வுகளில்,மற்றும் ஊடகங்களில் எமது விடுதலைசார்ந்த போராட்டங்களின் யதார்த்த நிலைப்பாடுகளில்,ஆக்கிரமிப்பு ராணுவம் எமது மண்ணில் ஏற்படுத்தும் அவலங்களின் நிலைப்பாடுகளை,மனிதத்தன்மைக்குஅப்பாற்பட்ட அழிவுகளை, சர்வதேச உலகிற்கு,எமதான மக்களின் பார்வைக்கு கொண்டு வரும் இந்த மனிதாபிமான நிகழ்வுகளில்,தமது பொய்யான முகம் தரித்து,போலியான உரையாடல்களை முன் வைத்து,எமதான பார்வையில்,செயலில்,நீதியான உணர்வில் ஒரு தேக்கத்தை,முடக்கத்தை உண்டாக்க முனைகின்றனர்
.இந்த இழிவான செயலை இந்த வட்டுடை தரித்த,கோடரிக் கொம்புகள்தான்,தமதான முட்டாள் தனமான ஊடுருவல்கள் மூலம் தங்களை தாங்களே இனம் காட்டி,எமதான உணர்வுகளை முடமாக்குவதாக எண்ணி எங்கள் இனமான தன்மையை,அதனூடான பங்களிப்புக் களை ,கொச்சைப்படுத் முனைவதை எம்மில் சிலர் புரிந்து கொள்ள முனைய வேண்டும்,இது காலமறிந்து,இந்த ஞாலத்தில் எமதான விடுதலையின் வீச்சை முன் நகர்த்த இப்படியான தடைக்கற்களை இனம் பிரித்து அறிவதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்,அது மட்டுமில்லை இவர்களை அந்த தடத்திலேயே களைந்தெறிய ஆவன செய்ய வும் வேண்டும்.

இதன் மூலம் நாம் எங்களை மேலும்,இன்னமும் வீச்சாக்கி செயற்படுத்தலை,முனைப்பாக்க உளவுரணை இன்னமும் செறிவாக்கி, மென்மேலும் எமதான புலம் பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய,எமதுமக்களின்தேவையைகளத்தில்அதீதமாகபூரணமாக்கவேண்டிய,ஊர்வலங்கள்,கண்டனப் பேரணிகள்,கவனயீர்ப்புப் போராட்டங்கள்,இன்னமும் விடுதலையை வீச்சாக்கி காலப் பணியாற்றவோமாக. அத்துடன் வன்னியில் இத்தகைய இழப்புக்களிலும்,தமதான உளவுரணின் ரதத்திலே மட்டுமே தங்கி வாழும் எம் இன மக்களில் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய,வணங்கா மண் போன்ற சேவைகளை புலத்தில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எமது தாயகம் நோக்கி செலுத்தக்கூடிய மிகவும் தேவையான,சேவைகளை ஆற்ற எம்மை நாமே பூரணமாக உள் வாங்குவோம்.

களமும்,புலமும் இந்த கட்டுமானப்பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க வீச்சமுறும் எங்கள் விடுதலையின் நெருப்பு,இது போன்ற ஓர் காலம்,எமதான விடுதலையின் பேரொளியை சுமந்து வருங்காலம் கனிந்துள்ளது. இனியும் காலத்தை தாமதப்படுத்தாமல் களப் போராளிகளின் கரங்களையும்,எமது தேசியத் தலைமையையும் ஆழக் கரங்கொண்டு,அகமாக சிரமேற்றுவோம், புலத்தில் தமிழினத்தின் தேசியக்கொடியையும்,தமிழினத்தின் தேசியத் தலைவனின் ஓளிப் படங்களையும் தோளிலே தாங்கி எமதான தேசியக் கடமையை,எமதான திறன் கொள்,உளவுரணால் நிறைவாக்குவோம்.அது நிதி சார்ந்ததாகவும்,நீதி சார்ந்ததாகவும் மிளிரட்டும்.அதன் பேரிகையால்தான் எமது விடுதலை எமதாகும்.

இந்த கருவிகள் எம் வசமாக புல் உருவிகள் ஆங்கே களையப்பட்டு,நல் விதைகள் ஆங்கே உரிமம் கொள் நிலை பேணும்,எம்நிலை சாரும்.பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம் ஆகவே,மாற்றுக்கருத்து,வேற்றுப்பார்வை எனும் கோதாக்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒரே அணியில் எமது நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் இனவாத சிங்கள இராணுவத்தையும்,பேரினவாத அரசியந்திரத்தையும்,அவர் தம் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தி சர்வதேசமும் எமதான விடுதலையை அங்கீகரிக்க வேண்டி,புலத்தில் ஒன்று சேர்ந்து வளமான செயல்பாடுகளை ஆற்றுவோம்.தற்போதைக்கு எந்தவிதமான அர்த்தமற்ற விமர்சனங்களையும்,மாற்றுக்கருத்தென்ற முட்டாள்தனமான வாதங்களையும் புறந்தள்ளி,நியாயமான எமதான விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து,எங்கள் விடுதலையின் வீரியத்தை,உறுதியாக்கி,ஆனதான பங்களிப்பை தளமாக்கி,களத்தை விரிவுறச் செய்து எமதான இலட்சியத்தை அடைவதற்காக முழுமையாக பங்காற்றுவோம்.வெறும் சொற்கட்டுக்களை புறந்தள்ளி,தேசக்கடமையை விரிவாக்கி,நிறைவாக்குவோம்.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

சனி, 28 மார்ச், 2009

விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?


எமதான உறவுகளும்,உற்றார்,சுற்றம் எல்லோருமே தினம்,தினம் ஆக்கிரமிப்பாளனின் எறிகணையால் நிதமும் இறந்தும்,படுகாயமுற்று,எவ்வித முதலுதவிகளுமற்று,மருந்து,சிகிச்சை,ஆதார்ச மருத்துவம்,உணவு,தங்ககம்,உடை,ஒரு குடில்கூட அற்ற எவ்வித உதவிகளுமற்று,அநாதையாக,அனுசரணைக்க எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்று வாழ்வா,சாவா,என்ற எதுவித தெரிவுமற்ற கொடுமையான,வார்த்தைகளிற்குள் வசப்படுத்தமுடியாத கொடூரமான வாழ்வை எந்தவிதமான பற்றுக்களிற்கும் உட்படுத்தமுடியாத விலங்கைவிடவும் அவல வாழ்விலும்,தங்கள் வலிமையை,அதனூடான போராட்டத்தின் வலுவில் தங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை துணைபோகும் வரலாற்றுப் பணியில் தம்மை ஈடுபடுத்தி,களம் காணும் வல்லமையை புலம் பெயர்ந்து வாழும் நாம் இன்னமும் வீச்சாக எமதான அதி உச்ச பங்களிப்பால் மேம்படுத்தவேண்டிய,முக்கியமான,அதிமுக்கியமாக கவனிக்கப்படவேண்டிய காலக்கடமைக்கு உட்பட்டுள்ளோம்.இது தவிர்க்கவோ,அன்றி ஒத்தி வைக்கவோ முடியாத அறமாகும்.ஆயின் இதில் எத்தனை வீதமான புலம் பெயர் சமூகம் தன் கரங்களை களம் நோக்கி நீட்டியுள்ளது என்பதை கவலையுடன்தான் நோக்க வேண்டியுள்ளது.உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.இங்கு ஜேர்மனியை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டால் புலம் பெயர் தமிழர் ஏறக்குறைய 80,000பேராவது இருக்கும்.இந்த தொகையில் சர்வதேசம் நோக்கி எமதான இந்த அவல நிலையை ஆர்ப்பாட்டங்கள்,கவனயீர்ப்பு போராட்டம் மூலம் பங்கு எத்தனை வீதம்? ஒரு 20%கூட இல்லை என்பது வேதனையளிப்பதாகவே உள்ள இந்த நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாக இல்லை.ஏன் இன்னமும் விழிப்பணர்ச்சியற்று இருக்கின்றார்கள்.சரி மறு வளமாக நிதிப்பங்களிப்பை நோக்கின் கடைசி வேலை செய்யும் மக்கள் தொகையை 40000பேர் என எடுத்துக்கொண்டாலும் இவர்கள் தமதான நிதிப்பங்களிப்பை முழுமையாக ஆற்றி இருந்தால்,இப்படியே உலகம் முழுதும் புலம் பெயர் சமூகம் தங்கள் ஆழுமையான, முழுமையான பங்களிப்பை காலக் கனிவான கடந்த கால எல்லையில் ஆற்றியிருந்தால்,அதாவது வலிமையே வாழ்வு தரும் என்றபேரிகை மூலம் தலைவன் இட்ட வேண்டுகோளுடன் இயைந்திருந்தால்,இன்று நிலையே வேறு.சரி இப்போ, என்ன இந்த நிலையிலும்,, ஏதாவது சாட்டுக்கூறி தனதான தேசியப் பணியை ஒத்தி வைக்கும்,அல்லது மறுப்பளித்து ஏதாவது காரணம் கூறி ஏய்த்து திரிவதை விட்டு சீரிய காலக்கடமையாற்றி எமதான தேசியத்தையும்,இனத்தையும்,மண்ணையும், மீட்பதற்காய் களம் காணும் எமது தேசிய வீர்ர்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரியத்தலைவன்,தேசியத்தலைவன் இவர்களிற்கு நாம் எமதான நேரிய,சீரிய,வினைத்திறன் மிக்க பங்களிப்பால் கரம்பற்றி எமதான வரலாற்றுப்பங்களிப்பை நிறைவாக்கி,நமதான மண்ணைமீட்கும் எமதான விடுதலை வீரர்களை இன்னமும் உரமேற்றி ,,விடுதலை காண விரைந்து செயலாற்றுவோமாக.புலம் பெயர் தமிழ் சமூகமாகிய நாம் 100%பங்களிப்பை(,சரி
ஊது குழல்களை நான் இங்கு இம்மியேனும் குறியிடவரவில்லை,)அதாவது உண்மையான, ஆழுமையான, அகங்கொண்டோர்கள்,இங்கு நிதியென வரும் போது,தங்களை தாங்களே புறமாக்கும் யுக்திகளை புறந்தள்ளி நீதியான பங்களிப்பை திறனாற்றவேண்டியது காலக் கட்டாயம் ஆகின்றது,இன்னமும் சொல்லப் போனால்,வட்டிக்கும்,சீட்டுக்கும்,ஊதாரி செலவிற்கும் பணம் உள்ள சிலர் பங்களிப்பு எனும் பாரிய பொறுப்பை புரிந்துணர்வின்றி புறந்தள்ளுவதை விட்டு யாக வேள்விக்கு நெய் ஊற்றவேண்டியது தார்மீகம் என்பது எனது அடிப்படை,அகங்கொள் விதியாகும்.
அதாவது தேசியத்தை யாசகமாய் யாசிக்கும் தமிழீழ உணர்வு கொண்டோர்கள் சிலர் வெறும் நா வழி பங்காற்றுகின்றார்களே தவிர செயலில் எதையும் 1%கூட நிதியாக தமதான பங்காக ஒப்பேற்றவில்லை என்பது நான் நடைமுறையில் கண்ட
நிஜமாமும்.இவர்கள் இன்னமும் தம் மீதும்,தமிழினத்தின் மீதும்,ஏன் தன் நம்பிக்கையற்ற மாந்தராகவே உள்ளனர்,மேலும் சிலர் தன் வீடு பற்றியெரியும்போதே தவிக்கின்றனர்,எம் விடுதலை வீரத்தை,அவர் தம் ஈகத்தை
கொச்சைப்படுத்தி தம்மை தானே இழிவாக்கத்திற்கு, உட்படுத்தி,உபத்திரப்படுத்து
கின்றனர்,மற்றவர்கட்கும் தன் மாந்தை புத்தியை காட்டி,மற்றவர்களையும்,அதாவது
உண்மையில் உழைப்பவர்களையும் உள,புற உழைச்சல்களிற்கு உட்படுத்தி,உளவுரணை குலைக்கும் இழிவுத்தன்மையில் தம்மையறிந்தும்,அறியாமலும் முட்டாள்தனமாக முனைந்ததை எனதான சொந்த அனுபவத்தில் கண்டு அறியாமையை நீக்கியுள்ளேன்,எனவே கைகூடும் எங்கள் விடுதலையின் அகங்களில் கை வைப்பவரை அடையாளம் கண்டு,ஒன்றில் களையெடுங்கள் அல்லது புறந்தள்ளி எமதான விடுதலை போரை நிமிர்வாக்குவோம்.
எமதான விசாலமான நெஞ்சகத்தால் தங்ககமாக்கி தரணியில் எம் தேசம் மலர தானைத்தலைவனின் பாதையில் அணி திரண்டு,செயலாக்கி செம்மையாய் படைப்போம் தமிழீழம்.
இது இறுதிப் போரடா தமிழா
உள உறுதி பேணடா தமிழா
இகத்தில் ஈழ மலர்வடா தமிழா,நீ
இசைந்து இயங்கடா தமிழா,
இன்னல் களையும் வீரப் போர்,
இனிய மலர்வாகும் தமிழா,உன்
நிதியை ஆற்றடா தமிழா,நிலை
தனையை மாற்றுவான் தலைவன்,உன்
உரிமையை போற்றடா தமிழா,உளம்
உவகையாக்குவான் மறவன் எங்கள் தலைவன்
உன் நிறத்தை மாற்றுவான் தலைவன் நிச
முகத்தை மீட்டுவான் அவன் தகைகள்
நிழல் வாழ்க்கை தூற்றுவான் பகலன்,நிறை
வாழ்க்கை நீட்டுவான் நிறைவன்,எங்கள்
தலைவன் தானைத் தலைவன்
தமிழீழத் தலைவன் தார்மீகத் தலைவன்
தேசியக் கொடி தகைந்த தலைவன்


தமிழ் தேசியம் ஆக்கிய தலைவன்,

வெள்ளி, 27 மார்ச், 2009

களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்



செருக்களமாடுவதுவும்,
செந் தமிழ்ஈழம் மீட்க,
மருக்களமின்றி மடிவதுவும்,
மா வீர்ர் நிலையென்றால்,


தருக்களமாடி வரும்,
தமிழீழ விடுதலைப் புலிகட்கு,
உற்ற நிதி அளிப்பதுவும்,
உரத்த பங்கு ஆற்றுவதுவும்,
புலம் பெயர் தமிழீழ மக்களது
ஊக்க உணர்வன்றோ!,உந்து சக்தி நாமன்றோ!,

காத்து,
துயர் தீர்த்து,
நீர்க்க பகை விரட்டி,
பூக்க உளம்தழுவ, நாம்,,,அவர்
கரம் பற்றும் கருவிக்காய்,களமாடும்
உள(ண)ர்விற்காய்,தமிழர்
புனர் வாழ்விற்காய்,கிட்டு மருத்துவ நிதிக்காய்,
நடமாடும் திலீபன் மருத்துவ காப்பகத்திற்காய்,
செஞ் சோலையின் உயிர் நிலைக்காய்,

உரமேற்ற வழி சமைப்பதுவும்,
உயர்ந்த நிலையாக்குவதுவும்,
உயிராக்கி பணி ஏந்துவதுவும்,
உரிமையான, எமதான களப்பணியன்றோ?

உயர்வான இந் நிலையை,
உதவும் இந்த கருமத்தை,உடன் கடனாற்றாமல்,
உதாசீனம் செய்து விட்டால்,என்றோ
ஓர் நாள் நாம் ஏகமாக புலம்ப நாள் ஒன்று கூடிடும்.
ஆதலால்
தொலை நோக்கு நிலையெடுப்போம்,
தொலையாத பணி முடிப்போம்.


முழங்கிடும் சங்க நாதம்,
முடிவின்றி போரொலியாய்,
விளங்கிடவா வழி செய்வோம்?,அன்றி
துலங்கிடும் தமிழீழம்,தூய்மையாய் தளைந்திட
இனியொரு விதி செய்வோம்,
எம் இனமான பணி முடிப்போம்


(09.01.2000)

வியாழன், 26 மார்ச், 2009

நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து

விடுதலையின் வேள்வி கீதம் முழங்கும் போது,
வித்தகர்கள் நித்தமும் பேரிகையாய் முழக்கும் போது,
வீர மறவர் ஈகம் உனை சூழவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

பெருந் தலைமை புலம் நோக்கி திரும்பும் போதும்,
பெருந்துயரம் எமை இழந்து தனிக்கும் போதும்,
விடுதலையின் வேட்கை உனக்குள் விரியவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

மறவர் எங்கள் வீரர் வினையாற்றலை,
பகையும் விலகி விழிக்கும் போது,
விடுதலையின் தாகம் உனை சூழவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

அண்ணன் பார்வை அனலாய் பொழியும் போது,
கரும்புலிகள் ஈகம் தணலாய் எரிக்கும் போது,
விடுதலையின் வேகம் உன்னை செதுக்கவில்லையா?
வித்தாகி எறிந்த விதை உன்னில் விளையவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

அலைகளாய் அணிகள் ஆர்ப் பாரிக்கும்போது,
ஆக்கிரமிப்பு வெறியர் கூட்டம் கரியும் போது,
மீளும் நிலங்கள் எங்கள் வசமாகும்போது,
மீட்டு விடுதலை வேங்கை வீரம் மிளிரும் போதும்,
விடுதலையின் ஊட்டம் உன்னில் ஊறவில்லையா?
விதி மாற்றி புது பறநானூறு படைத்த வீரம்,புதிய
விதிகள் விரித்த போதும்,
சுதந்திரத்தின் சுகானுபவம் உனை சுமக்கவில்லையா?
வெற்றி எம் வசம்,தமிழீழ தேசம் எம் வசம்.

வான் படையின் வலிமை தன்னை வனைக்கும் போதும்,
தான் படையை தர்மப்பதல்வர் தறித்த போதும்,
வனமுக எதிரியை வதைத்துலர்த்தும் போதும்,
வளமான வீரியம் உன்னகத்தில்,
விரியவில்லையா ?விடுதலையின்
விம்பம் உனக்குள் விதையவில்லையா?


ஆயின்,நீ

எமது தமிழினத்தின் அசல் வித்தல்ல,நீயோ
விச விந்து,ஈழத்தில் உதிர்ந்த உசாத்து.

புதன், 25 மார்ச், 2009

சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்


நெஞ்சகத்து கூட்டினுள்ளே செல்லரிக்கும் நிகழ்வு (இழவு)தந்து
எந்தகத்து கூட்டுக்குள்ளே போனீர்?எங்கள்
தங்ககத்தை தாண்டி எங்கு போனீர்?

தஞ்சமென்று போவதெந்த வலையத்தில்?,நீவர்
நெஞ்செரிந்து போனதெந்த நிலையத்தில்?
சொந்தமிங்கு கரியுதே கனத்தையில்,,இந்த
வெம்மை என்று தீருமெந்த அமைதியில்?


நிர்கதியாய் நிற்பதுவா விதியாய்?இந்த
நினைவழியா நாட்கள் என்ன சதியா?
ஊர் அழித்து போனதென்ன மதியா?எங்கள்
சீர் மக்கள் ஆனாரோ சீந்தான கதியாய்?

பூக்களைப் போல அல்ல நிந்தன் வாசம்,எந்த
புரிந்துணர்வில் பிரிந்ததுங்கள் தேகம்?
பாக்களிலே படிந்திராத பாசம்,உம்மை
பரிந்துணர்ந்து கொண்டதெங்கள் தேசம்.

வேரறுந்து போவதென்ன மோசம்?இங்கு
பாரினிலே வந்ததெங்கள் சோகம்.
ஊரெழுதி நிதம் தோறும் வாடும்,உங்கள்
பேரெழுதி எங்கள் நெஞ்சம் வேகும்.

வேகும் நிலை மாறும்,எந்த
வேதனையும் இனிமேல் சாகும்,தங்க
வேதம் தாங்கி தரமாகும்,இந்த
நெய்தல் கொள நிலம் நிரலாகும்.


உங்கள் ஆகுதிகள் களமாக்கும்,
எங்கள் தங்ககங்கள் தரமாகும்,
நிந்தன் நினைவுகளால்,நிசமாகும்,
கனலும் தாகங்களால்,நிலையாக்கி உரமாக்கும்,
உங்கள் யாகத்திற்கு சமர்ப்பணமாகும்,

தமிழீழ மலர்வால்,உயர்வான தலைவனால்.
சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்,
தமிழீழ தேசியம்,அது
தமிழீழத் தேசியக்கொடியின் தகவான இசைவாகும்
….

திங்கள், 23 மார்ச், 2009

தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்


மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்,சிங்கள
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்
தன் மானம் சிறக்கும்,எம் மானம் பெருகும்
எங்கள் ஈழம் மலரும்,தமிழ் ஈழம் மலரும்.

சினத்தை வெல்லுங்கள் சிந்தை சிறக்கும்
சிறக்கும் சிந்தையால் சீர் வழி திறக்கும்
திறக்கும் வழியால் தீரம் வளரும்
வளரும் தீரத்தால் வீரம் பெருகும்,எங்கள்
மானம் மெருகும்,தமிழ் மானம் மிளிரும்

குணத்தை தீற்றுங்கள் பண்பாட்டின் வழியே,சீர் கெட்ட
நிலையை மாற்றுங்கள் போரின் வழியே
நிரலாய் செல்லுங்கள் தகையும் தாகமே,
நிறைவாய் வெல்லலாம் அண்ணன் அணியே,
எங்கள் அண்ணன் வழியே,எங்கள் அண்ணன் மொழியே
மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்,எங்கள் மானம் சிறக்கும்


நீத்து, நிலை பேணுங்கள் நியாயம் நமதே,உற்று
உள உரண் பேணுங்கள், பாதை தெளிவே,எங்கள்
பாதை தெளிவே.
தெளிவுற ஆளுங்கள் எங்கள் தேர்வு ஒன்றே,
தீர்வு யாவும் மாற்றலாம் ஆக்கம் நமதே,தமிழ் ஈழம் நமதே.

தமிழீழ!
கொடியை ஏந்துங்கள் மக்கள் நிரையே
அடியை அகற்றும் புலிவீரம் தன்னிலே
வெல்வோம் வெல்வோம் என்று வேகம் கொள்ளவே
கொள்வோம்,கொள்வோம் எங்கள் ஈழமண்ணையே
தமிழ் ஈழ மண்ணையே,தமிழ் எங்கள் அன்னையே,
ஈழம் எங்கள் நிலையே,வென்று செல்வோம் நிறைவே.
தமிழ் ஈழம் நமதே.

தும்பையூரான்
23.03.2009

மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட


தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ்
தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன்
சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை
நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சுவாசிப்போம்.

தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம்
வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம்
வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள்
தேச விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம்.

வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம்
வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ்
மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால்
முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம்

கந்தக காற்றினி தேசத்தில் வீசாது,
பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது.
மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி
பூந்தளிர் பாலகர் பூம்புனல் பாடிட,
பூத்திடும் ஈழமலர் புன்னகை வீசிடும்.


தூற்றிடும் பகை எமை வாழ்த்திட வாழ்வோம்,
போற்றிடும் வகை புதுச் சாரலாய் சொரிந்திட,
மாற்றிடப் புகல் வாழ்வினை மாற்றுவோம்.
தோற்றிய தமிழீழ மண்ணிலே புலர்வோம்.

முப்படையும் அணி வகுத்து நடந்திட
முத்தமிழும் இசை இயங்கி வாழ்த்திட
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
மாவீரத் தானை தலைவன் கொடி ஏற்றிட
பாரிலே பூத்த தமிழன்னை சலங்கையிட,அந்த
பூரிப்பிலே எங்கள் தாகம் தணியுமே.
மாவீரக் கனவே கயலாய் ஒளிருமே.
22.03.2009
தும்பையூரான்.

சனி, 21 மார்ச், 2009

பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?


விதை, விதைத்த மாவீர்ர் விருட்சங்களாய், இன்று
வன்னியிலே திரண்டிருந்தார் வெளிச்சங்களாய்
பதை பதைத்து ஆக்கிரமிப்பு படை மிரண்டது,அங்கு
விதையிழந்த நிலங்களெல்லாம் வசமாகுது எங்கள்
சுவாசமானது.

அலையடித்த நிலையினிற்கே அழிந்து போனவன்,ஒரு
புயலடித்து களம் சுரைக்க என்ன ஆகுவான்?
நெருப்பெரிந்த தேசமடா எங்கள் தேசம்,பெரும்
நெருப்பினிலே வளர்ந்தவனே எங்கள் தலைவன்,
தமிழீழத்தலைவன்

பெருமையிலே ஒருக்களித்து போகாதவன்,எந்த
கருமையிலும் நிலைகுலைந்து ஓயாதவன்
ஒளிக்கதிராய் எங்களின வழியானவன்,என்றும்
ஒரு கருத்தே உலகெறிந்து உயிரானவன்,எங்கள்
உதிரானவன்.

நெக்குருகி,நிலைதவறி போனவனில்லை,என்றும்
நொருங்கிப் போகா மக்களவன் காவலின் எல்லை
ஊனுருக்கி,உயிரெறிந்து எல்லை மீட்டவர்,அவர்
தானுருகி தமிழீழத்திற்காய் தனையெரித்தவர்,எங்கள்
நிலை யாத்தவர்.

வேளை வரும் போதினிலே வேதனையில்லை,அந்த
ஒலை எமதாகும் வரை ஓய்வேயில்லை,சித்த
வேதனையும் எங்கள் வசம் வாசம் பேசுமே,சுரந்த
சுகந்தமான சேதி வர சோகம் ஓயுமே,எங்கள்
தாகம் தீருமே,தமிழீழ தாகம் தீருமே.

மீட்டெடுத்த மானம் என்றும் விலை போகுமா?மண்ணில்
பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
ஊட்டி வைத்த தலைவன் அவன் வீரம் ஏந்துவோம்,இசை
பாட்டெடுத்து வானுயர புகழ் நாட்டுவோம்,
தமிழீழ கொடி ஏற்றுவோம்.

.தும்பையூரான் 21.03.2009

புதன், 18 மார்ச், 2009

பொங்குமோ உளம் திரிந்து?


ஏங்கும் மனதாலும்
தாங்கும் செயலாலும்
தூங்கும் நிலை மறந்து
தூயதான விடியலிற்காய்
தூய்மைகள் அங்கே வியூகமாய்

பொங்கும் நாள் தேடி
பூம்புனல் தானாகி
எங்கும் மங்களமாய்
எங்கள் மண் எமதாக்க
துய்ப்பதற்காய் சுதந்திரத்தை
தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர்
களம் காண நோக்குகையில்,

புலம் பெயர்ந்து நிலம் நோக்கும்
பலம் வேர்க்க உளம் நோகும்
இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும்
இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே
ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க
மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக
இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே
இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.

தும்பையூரான்
இடுகையிட்டது
14.01.2009
தளம்,களம்

வலைப்பதிவு காப்பகம்