வெள்ளி, 8 நவம்பர், 2013

உலைக்கள வியாசா?

உலைக் கள வியாசனை தேடுகின்றேன்.
அவன் தந்த உறுதியை நாடுகின்றேன்.
நிலைக் களத்தில் நிதம் நியம் எழுதியவன்.அவன்
வலைத் தளத்தில் என் வயம் நாடும்.

திணைக் களமெல்லாம் தீர்ந்தே போயினவோ?
திண்ணைப் பேச்சை திசையாலேயே வெறுத்து
உண்மைத் தன்மையை உறுதியாய் படைத்த எம் தேசத்து
அரசபைக் கவிஞன்?
என்னானான்?

தலைக் கனம் சிறிதேனும் இலா தவக் கவிஞன்.
தலைமையின்: திசையில்
விசைகூட்டிய வீரியன்
மலைபோல வெற்றி குவிய மனமிசைத்து கவி எழுதிய
காலக் கவிஞன்.
என்னானான்?
எங்குள்ளான்?

ஏங்கும் என் மனம்போல் எத்தனை பேரின்
இதயக் கூட்டில் குடியிருக்கும் தாயகக் கவிஞன்.
புதுவையே
எங்குளாய்?
எப்படியுள்ளாய்?
மாவீர நாள் நெருங்கும்போதெல்லாம்
புதுப் பொலிவுடன் பொங்கும் உனதான கவி கேட்க
ஆவும் எம் மனம் அறியாயோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்