நெருப்பெரிந்த நிலம் இன்று முதல் மீண்டும் கொழுந்தெரித்துப் போகுமென்று ஒரு போகம். இந்த பெரும்பான்மை சிங்களத்திடம் ஆதலால் பல கலை பாட திடல் விடுமுறையில்
பயம்! பயம்? பலமகற்ற பல நாடுகளின் நிழலில் வந்த நியம் ஆதலால் பலமற்ற சமூகத்திடமும் பயம் தலம் பற்றி நாளை ஒரு கலம் சூடும் காலமது வந்திடுமென்றே பயம்.
சிரிப்பதா- அழுவதா? உரிமைப் போரது ஓயாது எனும் வெப்பகக் காற்றில் என்றும் ஓயாது தமிழினம் எனும் பெரு விருப்பகத்தில் சிங்கள வெங்களத்தை நினைக்க சிரிப்பதா- அழுவதா?
கங்குல்கள்! என்றுமே அணைந்தபோகாது எனும் யதார்த்தைத்தை பேணாத பேரினவாதம் அங்குலமாக எதையுமே அழிக்க முடியாது எனும் யதார்த்தத்தை எண்ண சிரிப்பதா அழுவதா? இல்லை சினப்பதா?
சினைகள் பற்றியதே எம் தேசியம் சிதைக்க முடியாததே எம் தாயகம் பனைகளாக நிமிர்ந்த யாசகம்-இதில் யாப்பதே எம் நாயகம்.
மாவீர நாளிற்கான சிறப்பது -எம் நாயகர்களே உங்களது நிழலிற்கே பயந்தோடும் சிங்களம். அந்த வெங்களத்தில் சந்தித்ததை என்றுமே மறக்காது. ஆதலால் கூறுகின்றேன். உங்களது நியம் எங்களைவிட இவர்களிற்கே நினைவு கூறும் நாளாகும் இந்த மாவீர வாரம்.
இதுவே எமது தீபாவளி இங்கு புத்தாடைகள் இல்லாமல் உங்களின் புனிதங்கள் மேல் ஒரு சத்திய வேள்வி எம் ரத்தத்தில் ராகமாக எழுதும் தீப வழிபாடு.
மனக் கோட்டிற்குள் ஒரு சித்தரம் வரைந்த சரிதர்களே! விரிவடைந்தே பரிவாகும் ஒரு கனவு நாளிற்குள் உங்களின் பாங்குகளுடன் எங்கள் பற்றுதலும் தேற்றதுலுடனான தோற்றுவாய்கள்.
மாவீரம் என்றுமே மாசடையாது- என மானிடத்தில் ஒரு "மா" காவியம் தந்த காத்திரர்களே! எமதான புனித வணக்கங்கள் பனி படர் தேசத்தில் வாழ்ந்தாலும் புனிதமானதே எம் தேசியமும் தேசமும் என நாளும் உரைக்கும் ஞாலத்தின் தேசத்தின் குரலாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக