சனி, 3 மார்ச், 2012

என் எண்ணக கனப்பு?


மெல்லவும்,சொல்லவும்
துணை வேண்டும்.
செல்லிடம் சேர நற்துணையும் வேண்டும்.
எங்கு தேட?
எதில் நாட?
எல்லாம் அரிதாரம் மூடிய அற்பனங்கள்.

ஆம்
சொல்ல முடியா வேதனை*
மெல்லவே முடியாத இழப்புக்கள்
செல்லெரிக்கும் நினைவுகள்
ஏன்
சொல்லரித்துப்போன துணைகள்
மலரும் நினைவுகளில்
மரித்துப்போன பல பயன் பாடுகள்
தரித்த இடம் தவறி
பாதை தவறிய பலா பலன்கள்

குறித்த இடத்தில் குவியம் மேய
தறித்துப்போன பல தடயங்கள்
வெறித்த பார்வையில் வேய்ந்ததான
குறிப்பிடவே தயக்கம் காட்டும் உணர்வுகள்
மதியிழப்பில் மானம் சூடிய உறவுகள்.

மாண்புகளை தொலைத்த
இல்லை
தொலைக்க வைத்த
நண்பர்கள் எனும் பெயரிலான
உறவுகள்
பண்புகளை பாழடித்த படித்த ஆனாலும்
படிப்பறிவற்ற பாளங்கள்.

சொல்லி ஆற்ற சொப்பனத்தில் மட்டுமே
வல்லினம் காண முடியும்.
பல்லி பலன் பார்க்கும்
பாழடைந்த சமூகத்தில்-நான்
பார்ப்பனரை வெறுக்கும்
நாத்திகனாம்.

கற்களிற்கு பாலாபிசேகம்
கனவில் கூட காட்டினால்
காயமாறும்.
கனவு நனவாகும் என
ஏற்றமிறைக்கும் இந்த
மாற்றமமைக்கா மானிடவர்க்கத்தில்-----???
என்
தாற்பாரியங்களை
அதனதன்
தோற்றங்களையும்,தேற்றங்களையும்
அதனூடான மாற்றங்களையும்
மறுதலிக்கும் இந்த
ஆற்றலற்ற சமூகம் என் உடன் பிறப்பு????

ஆதங்கம்
வெறும் வினாக்களையும்
வினையாற்றா
விகற்பங்களையுமே என்றும் சாரும்.
தூணகன்ற அத்திவாரமாய்
ஓரத்தில் நான்
ஓர்மங்களை கழுவேற்றி
பாரம் த(க)னைய பழுவேறுவேற்ற!
ஈரமில்லா இதயனாம்.
இழைக்கிறது இனம்???
இளைக்கின்றது மனமும்,மானமும்

வியாழன், 23 பிப்ரவரி, 2012


எழுதியதுவும்,உழுததுவும் போதும்.
இனி
விழுதுகள் தொடரெழுதட்டும்.
பழுதுகள் இல்லா பாட்டாக
பொழுதுகள் பொருதட்டும்.
மழுப்பல்கள் அகற்றி மாதோங்கும்
செழிப்புக்கள் பொழிந்து.

அற்ற உறவுகள் இனியும் வேர் கொளார்.
ஏன்
உற்ற உவப்பாக தேர் இழார்.
பற்றறுத்த போன பாதை தொழுபவர்
உற்றுப் பார்ப்பார் என இனியுமா இனியன கொள?
நெற்றிப் பொட்டில் நெறி வைத்து
வெற்றிப் புன்னகை ஈயாத
வெற்றுறவுகள் வேதினியில் எதை வேண்டுவார்?
இவை(வர்)கள்
அற்ற குளமாய் எமை தீண்டினாலும்.
நாம்
வற்றாத சுரபிகளாய் எம் வாசல் வேய்ந்தோம்.

எனவே!
எழுதியதுவும்,
உழுததுவும் போதும்-இனி
விழுதுகள் தொடரட்டும்.
வீரியம் சொரிய--

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒளி முகம் சொரிய வழியது காட்டு.

மறைமுகம் காட்டும்
திரு முகங்கள் மலர.
திருமறை ஓதிடவா?
சிறை முகம் காட்டும் சிதைவுகள் பறக்க
முறை முகம் ஏற்றிடவா?
புற முகம் நீங்கி அக முகம் காட்ட
நியமதை விளங்கிடடா -நீ
புயமதை ஒதுக்கி பயமதை மேயும்
கயமையை விட்டிடடா -அதில்
ஒருமையை மேவி பெருமையை வடிக்க
திருவுளம் ஏற்றிடடா -வெறும்
பணமதே வாழ்வென பயனது எழுதும்
பாகத்தை அறுத்திடடா -பலன்
கடமையை கவ்வ காதறு தோறும்
உடமையை பெற்றிடடா.உன்
உரிமையை வென்றிடவா!!__

புரிவது உனக்கு தெரிவதில் இல்லை-இந்த
ஊனத்தை உடைத்திட வா -என்றும்
பதிவதில் பொழியும் பாகத்தை விளங்க
மதியதை மொழிய வா.அதில்
பல ரக ராகம் பசுமையாய் விளங்கும்
பாவத்தை புரிந்திட வா .

புரிவதில் உனக்கும் தெரிவது வேண்டும்.
பரிவது வேண்டாமே.ஏகி
ஏற்றிட வரியும் வகையது புரிந்து
திறனது ஒளிர்ந்திட வா.நீ திரிமுகம் நீக்கி
திடமுடன் திறனேற்றி வா.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பிரபஞ்சமே ஒரு பிரமிப்பு.


பட்டம் விடும் பாரம்பாரியம் அல்ல
பொங்கலின் தாற்பாரியம் பரிகாரமும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செயா
எந்த வளவும் ஏந்தாது.
நல்ல விளைவு ...

வீட்டுத் தோட்டம் செய்தவன் நகிலட்டும்
விவசாயியின் வீர்யத்தை.
இதன் பரிமாணத்தை ஆதலால் கிடைத்த பவுசை.
நன்றிக் கடனாற்றும் நயனம் சூடுவதே
பொங்கலின் சிறப்பாம்சம்.
ஆயின்!
வயிற்றை நிரப்ப வாய்க்காலில் தனை முகிழ்த்த
விவசாயிக்கு நாம் செய்த நன்னெறிக் கடன் யாதோ?

மலரும் நினைவுகளா?
எப்படி உய்யும் எம் மரபு??--
வேண்டாம் இனியும் ---

கடற்கரை காற்றும்
கலம் கொளா பட்டத்தின் பறப்பும்.
இள வயதின் கோலங்கள்.
உண்மை.
அது -
ஒரு பரவசக் காலம்.

விடுப்புப் பார்ப்பதுவும் விண்ணை முட்டும்
விண்ணும் விழி பரவும் வியப்பும்.
காற் சட்டையுடன் மூத்திரம் போனதுவும்
மேற் சட்டையில்லாமல் மேதினியில் ஆடியதுவும்
ஆக
பருவத்தே ஆன பழுப்பும்
காலங்கள் ஒவ்வொரு விளையாட்டையும் நிர்ணயிக்கும்.

உழவுனிற்கு நாம் என்றாவது
உளப் பூர்வமாக ஏதாவது ஆற்றினோமா?
களங்களும்,களனிகளும் கால்படாமல் போயிருந்தால்
உண்ண உணவிற்கு உலர்வுற்று
காட்டுவாசியாய் கலமேந்தியிருக்கும் கணம்.

இயற்கையில் மனிதம் படைத்த மனிதன்
ஈவுகளற்றி ஈடற்ற விளை நிலமாய்
ஈர உளம் கொண்ட கற்பகமல்லவா விவசாயி
இக் கணமென்ன எக்கணமும் ஊடும் நன்றிகள்
இகமியங்கும் இவர்களால் இயற்கைக்கும் எம் நன்றிகள்.

உழவர் திருநாள் பெரு நாளாக என்றும் ஓங்கட்டும்.
ஊனக உள்ளங்கள் தவிர்த்து.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

value="http://videozer.com/embed/9x85ggbk" >

வியாழன், 12 ஜனவரி, 2012

இழையும் ஆதங்கம்.


என்று பூர்த்தியாகும் என
என்றும் எழும் கேள்விக்கு

நன்றான பதில் நவில நாநிலத்தில்
நம்மவர்கள் யாருமே இல்லையா?

குன்றாக நிமிர்வெழுதும் குவியமிது
கூடவே மன்றமாய் எம் மதியர்கள்
நின்று கூடுவர்.
நிலையெழுதுவர் என்ற ஏக்கமது குலவ
தலை கொள்ளும் தளைகளாய் தரணியில்
ஒன்று கூடி வடமிழுப்போம்.
ஒய்யாரமாய் இதை நிறைவு கொள்வோம்.
சித்திரைக்குள் என சிலிர்க்கும் நனவுகளுடன்...

நண்பர்களே!
அன்பர்களே நினைவில் கொள்ளுங்கள்
நிதி வேண்டும் இன்னமும் 14 இலட்சமென்பதை
இலட்சியமாய் இதயத்தில் கொள்வதுமட்டுமல்ல

ஈதலாக ஈயணும்.ஈசனாக மாறணும்.
ஈடில்லா இலட்சியமாய் இவ் வருடமே முடிக்கணும்.

ஆயத்தமாகுங்கள் இறுதிக் கட்ட நிதி நல்க.
காரணங்கள் தேடி ரணங்கள் சூடாமல்
தோரணங்கள் கட்ட தோழர்களையும் இணையுங்கள்.
சோர்வகற்றி இலங்குங்கள்.
சேருமிடம் சேர.

திங்கள், 2 ஜனவரி, 2012

எழுதவா?_


எழுது
ஏதாவது
இல்லை எதையாவது???
எண்ணங்கள் எழுகின்றது.

எழுதவா?
விடவா?
வைகறையிலும் வானம்-
இருள் மொள்ளும் போதினிலும் எழும்
எண்ணங்களை என் செய?

யாருக்காகவும் பதியும் பதிவல்லை-
ஒரு வகையில் என் மன,மான திருப்திக்காகவா?
அல்லது எதையாவது சுட்டி என் எண்ணங்களை ஈடேற்றவா?

ஏதும் இல்லை என எனை நானே ஏ(ன்) மாற்றவா?
இல்லை பொழுது போக்கவா?

ஆதங்கம் சார்ந்த அங்கலாய்ப்பா?
தங்ககங்கள் தேடும் சந்தமா?
தங்காதவரை தடுத்திடும் தளமாக்கவா?
அங்கமதை அர்ப்பணிப்புடன் அளித்திட ஏங்கும்
பங்கமிலா பரிதவிப்பா?

புரிந்தவர்கள் பதிவெழுதுவார்.அஃதற்றோர்
அப்படியே விழி பிதுங்க நான்-
எதை எழுத?எதை விட?

எனினும் எழுதுவேன் என்கின்ற
தெளிவினில் என் தேடல்கள் தொடர எழுதுவேன்.
எது தேவையோ?
எதில் தேடலோ
என்ன தேடலோ?

அதையெலாம் எழுதுவேன்.என்
எதிர்பார்ப்பு தொடர --??!!
தொடரும் தொடரெழுத எழுதுவோம்
என எனையாரும் பிறழாதகற்றும் வரை.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பிரான்சில் தலைவரின் ஒளிப்படத்துடன் கூடிய தபால் தலை வெளியீடு.


என்னே ஒரு அற்புதமான சேதி.
மனதில் ஒரு வகை இறுக்கம் தளர்ந்தான,
ஆத்ம திருப்பதி.
பேரிருள் ஒன்றில் ஏதோ ஒரு பொறி தென்படுவதாக
ஆதார்ச நிகழ்வது.

ஆம்!
இன்று பிரான்சு எனும் ஐரோப்பிய நாடானது
தமிழினத்தின் பெருந்தலைவனாம் மேதகு பிரபாகரனது
போர் முகம் ஒளிர
அவர் தம்
ஒளித்தடத்துடன்
தமிழீழத்தின் வரைபடம் முதல்-
அதன் தேசியத் தன்மைகளான-
தேசியப் பூவாம் கார்த்திகைப் பூவையும்,
தமிழீழ தேசியகொடியையும்,
தபால் தலைகளாக வெளியிட்டு எமது பெருந்தலைவனையும்
அதன் தார்மீக போராட்டத்தையும் கெளரவப்படுத்தி எமது தார்மீக போராட்டத்தை,
ஏற்றுக் கொள்ளக் கூடிய புறச் சூழலை உருவாவதற்கான
வெளிப்பாடாக என் கருத்து இங்கு பதிவாகின்றது.

பிரான்சின் தபால் துறை அமைச்சு இந்த தபால் தலைகளை இன்று அதிகார பூர்வமாக வெளியிட்டு வைத்தது.இந்த பெரு நிகழ்வு எம்
விடுதலைக்கு தாயக உறவுகள் இதுவரை சிந்திய குருதிக்கு கிடைத்த ஒரு சிறு
தார்மீக வெற்றியாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ததானது எம்
முன்னேற்றத்தின் பல தடைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இதனால் பல தடங்கலுடன் கூடிய போராட்ட பின்னடைவை 2009 வைகாசியில் தேசிய ஆயுதப் போராட்டம்
மெளனிக்க வைக்கும் வரை அகோரமான தன்மையை ஏற்படுத்தியது இங்கு பலராலும்
நினைவுகொள்ள வேண்டிய நிகழ்வாகும்.

ஒன்றை இழப்பதால்தான் இன்னொன்றை பெறமுடியும் என்கின்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பு இது.

எனவே இப்படியான புறச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட அதாவது வெளியிடப்பட்ட தபால் தலைகளை தமிழர்கள் தமதான தபால் மற்றும் பொதிகளை பட்டுவாடா செய்வதற்கு பிரயோகிப்பதன் மூலம் எமது போராட்டத்தின் மறுபக்கத்தை உலக சமூகத்தில் மிக சுலபமாக சென்றடைய வழி வகுக்கும்.

ஆவன செய்ய வேண்டியது பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் ஆற்ற வேண்டிய பெரும் பணியிது.

நன்றி.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011


எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு
இன்று அகவை ஒன்று கூட
அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.
வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.
என் மனம் யாகிக்கும்
புவனத்தின் மெளவலில்
இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!
விடியலில் வீதி திறக்கும்.
ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்
அகம் சொரியாது.

தாளில்லா தடயம்
பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.
ஈழப் பெரு வீச்சே!
நீ ஏற்றிய புரட்சி வரிகளில்
ஈழம் நிமிர்வெய்தும்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மாதினி வேதனை°

ஊர் உலவ மனமேவி
உற்சாகம் பொங்க மனை ஏவி
தற்காப்பு கலசம் களைய
எக்காப்பு பூண்டேன்?

ஈசன் என்பார்.
ஈதலும் என்பார்.
நாக்கில் நாவூற
நாயகன் என்பார்
உறவாடி கெடுத்து என் உயிர்மைமை கொன்ற
இந்த
உடன் பிறப்பை என்னென்பேன்?

ஓதுகின்றார்
கந்த புராணாம்
ஓதுவதோ
எந்தன் புராணம்
சீந்த வழியின்றி என்
சீதளம்
புதைத்த


இந்த காந்தளர்கள் போதும் என்
"கா"
மலர்கள் கொள?
வேண்டாம்


இந்த
வைதினில்
விழுப் புண் ஏந்திய
மாததர்கள் தவிர
உடன் பிறப் எல்லாம்
உதிர்ந்துபோகட்டும்-

வல்ல பகை எதிர்த்த
புலமைகள் ஊர்வர
செல்லட்டும் -இந்த
செவிட்டு முண்டங்கள்._

தொடருவேன்
என்

புதன், 27 ஜூலை, 2011

எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,
தொழுதெழுதி தோழமை சூட்டி,
விழுது பற்றி விவேகம் பாராட்டி,
பழுதகற்றிய எம் பத்மர்களை-
இருதயத்தில் பூட்டி,
இருளேந்தா மலர் கொட்டி,
தருணங்கள் வினாடியாக தாள் பணிந்து,
என் இருதயச் சக்கரத்தில் நாளும் நினைவேந்தி,
நாத் தழுதழுக்க நினைவே பாரமாகும்
அவர் தம் ஈகங்களின் அடிச்சுவட்டில்.
ஆண்டோ இரண்டாக அவர்
தியாகங்களின் யாகங்களை
யாக்கையோடு யான் நினைக்கும்
திக்குகள் என் திடமாக!
எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.
சங்கேதமேதுமின்றி அது சாளரம் திறக்கும்.
பங்கமேது இல்லாததாய் அது பாசுரம் பாடும்.
அங்கம்,
அந்த அங்கம் அது போதும் எனக்கு -என்
ஆக்கம் தேக்கமது தவிர்க்கும்.
பூக்கும், அது-
பூக்கும் தொடர் பூபாளம் இசைக்கும்.
உனக்கும் அந்த நெருக்கம் உளமாலை சூடும்.அதை
வனப்பம் ஏற்று வாசல் வசந்தம் ஊ(கூ)டும்.

சிந்தனை செய்யென்றால் நிந்தனை செய்வோரே!
வந்தனை வாசம் பெற வாயிலை திறக்காரே!
நிந்தன் நியம் நியமம் ஊற சுய ஊக்கம் ஆய்ந்தீரா?
பந்தமது பரப்பெழுத பண்பலை வாசித்தீரா?

சொந்தமது சொத்தல்ல என்று சித்தமது நிறைத்தீரா?
மந்தமான மனக் கணக்கில் மணிக்கணக்கில் சீராய்ந்தீரா? -
உந்தனது குணக் குன்றில் என்ன வன(ள)ம் யாசித்தீர்?
மைந்தன் -எங்கள் வைகுந்தன்-
எம் மண்ணென்ற மாதவத்தை மறந்தீரோ -நாளை
உன் மண்ணே உனை மற(று)க்கும் யாதகத்தை மறுதலிப்பீரா?.

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.
விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்
மொழியின்றி வாழ்வாரா?
உணர்வதை பேண,
உன்னை தானும் புரிந்து கொள்ள-
மொழியின்றி வேற்று வழியுண்டா?

தாய் மொழி தாய்ப் பாலிற்கு அடுத்த மொழி.
சேய் அதை செம்மலாய் புரிந்திடா விடின்,
செவிலி மொழியா வழி காட்டும்?-கற்க
உவப்புணர்ந்து, உணர்வு செறிந்து ,சிந்தனை செய்ய!
அதை சிராக்கி தாயூட்ட தாய் மொழி தவிர,
மாற்று வழி ஏதும்உண்டா?

தாய் நாடிழந்தோம்,தேசமெலாம்,புல​ம்பெயர்ந்தோம்.
ஊரிழந்துஉறவிழந்து,பூமிப்பர​ப்பில்
சிதறுண்டோம்.
அவரவர் நாட்டில் அந்தந்த மொழி பேச -நாம்
எந்த மொழி கொண்டு எம் உறவு பேண?

எம் உறவை பேணவும்,உணர்வைபுரிந்தெழவும​்-
தாய் மொழியே தாரக மந்திரம்.
புரிந்தெழுவோம்.
விழி இழந்தால் வாழ்வுண்டென்பேன்.
எம்
மொழி இழந்தால்,
தாய் மொழி இழந்தால் தேசியம் மட்டுமல்ல
எம் தேசமே அழியும்.
விழி இழந்தால் வாழலாம்-எம்
மொழியிழந்தால் வாழ்வில்லை காணீ
புன்னை மரக் குயில்களாக,
புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்,
தின்னக் கொடுத்தோம்.திமிரெடுத்த
சிங்களத்தின் கொடுங்கரத்தில்.

என்ன பிறவிக் கடனிது?
ஏனிந்த அவலத் தொடரது?
தின்னத் தின்ன சின்னத்தனம்.
சிரசெரித்த கோழைத்தனம்.

வண்ணக் கலவை குழைத்த-எங்கள்
வைடூரியங்கள்-எல்லாம்
பண்ணை பிறழ்ந்த பரிதாபம்.
எண்ணக் கிடங்கில் எத்தனை நாள்?

நினைவழித்த நாட்களாய்-இனி
நிதம் கலைந்து போகுமா?
நினைவெழுதும் நாளின்றி-நெஞ்சம்
கனம் கலைத்து காயுமோ?

தொலை தூரம் தெரியாத சொப்பனமாய்-
வலையிறுத்து வஞ்சக பாழகர்கள்-எங்கள்
விலையற்ற வித்தகங்களை எந்த
வினையாற்ற அழித்தார்?

வலி, புரியவைக்க முடியாத வலி.
பலி, பகைக்கு பகை தெரியா பலி.
நலி ,நகையிழந்த நம் செஞ்சோலை நலித்த,
கலி, காலமிழந்த கலி வலியேற்றி -இனி
எந்த வதைமுகம் காட்டும்?

அஞ்சலிக்க மட்டுமல்ல இவ்வாக்கம்.
செஞ்சோலை பாலகரின் நினைவு நெகிழ்வாக,
கொஞ்சி விளையாடும் கொற்றங்களிற்கு தங்க
தலைவன் சமைத்த சபை பற்றி பண்ணாட,
நினைவுகள் தெறிக்க,உள்ளம் பற்றும் கனல் சுமந்தும்
ஈகையின்
இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர்
நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர் பாதமான பாதை அழிக்க,
உம்மைபுடம்
போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!-

நீவிர்
தொட்ட
பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு
எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,உருமறைத்து,
உளம்
செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க
கரும்புலியமான கார்த்திகர்களே!

இன்று !
உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர்
தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த
பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்செருக்காய்
குடியிருந்த
பெருநாளா?
அஃதன்றி-அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை
தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய்
நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?
எத்திரு
நாளென எண்ணி உனை எழுதுவேன்?

செத்திருந்த தமிழினத்தை
உயிர்த்தெழ வைத்த வேதியர்
நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர்
பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்மெட்டுக்கள்
என்றும்அணைந்து விடா
கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம்
வரைபுகள் வகையெழுதும்.

தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய
போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி
சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-
இன்று ஓர் பாரிய
இடைவெளியில்-

ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,
சந்தடியகற்றி
சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும்
நாளுடன் -
உன் செந்தமிழாணை கலந்து.

பொதுமை வேணி நீர் ஏந்திய
சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,
தமிழுணர்வின்,
இல்லை தாயக
விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,

ஏன்!
எல்லாவற்றிற்கும்
மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட
வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும்
இடிபடாமல் விடுதலை

உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய்

என்றும் எம் நினைவில்.
சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல
சங்கதிகளுடன்சஞ்சரிக்கும் நாள் கூடும்.

வலைப்பதிவு காப்பகம்