ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பிரபஞ்சமே ஒரு பிரமிப்பு.


பட்டம் விடும் பாரம்பாரியம் அல்ல
பொங்கலின் தாற்பாரியம் பரிகாரமும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செயா
எந்த வளவும் ஏந்தாது.
நல்ல விளைவு ...

வீட்டுத் தோட்டம் செய்தவன் நகிலட்டும்
விவசாயியின் வீர்யத்தை.
இதன் பரிமாணத்தை ஆதலால் கிடைத்த பவுசை.
நன்றிக் கடனாற்றும் நயனம் சூடுவதே
பொங்கலின் சிறப்பாம்சம்.
ஆயின்!
வயிற்றை நிரப்ப வாய்க்காலில் தனை முகிழ்த்த
விவசாயிக்கு நாம் செய்த நன்னெறிக் கடன் யாதோ?

மலரும் நினைவுகளா?
எப்படி உய்யும் எம் மரபு??--
வேண்டாம் இனியும் ---

கடற்கரை காற்றும்
கலம் கொளா பட்டத்தின் பறப்பும்.
இள வயதின் கோலங்கள்.
உண்மை.
அது -
ஒரு பரவசக் காலம்.

விடுப்புப் பார்ப்பதுவும் விண்ணை முட்டும்
விண்ணும் விழி பரவும் வியப்பும்.
காற் சட்டையுடன் மூத்திரம் போனதுவும்
மேற் சட்டையில்லாமல் மேதினியில் ஆடியதுவும்
ஆக
பருவத்தே ஆன பழுப்பும்
காலங்கள் ஒவ்வொரு விளையாட்டையும் நிர்ணயிக்கும்.

உழவுனிற்கு நாம் என்றாவது
உளப் பூர்வமாக ஏதாவது ஆற்றினோமா?
களங்களும்,களனிகளும் கால்படாமல் போயிருந்தால்
உண்ண உணவிற்கு உலர்வுற்று
காட்டுவாசியாய் கலமேந்தியிருக்கும் கணம்.

இயற்கையில் மனிதம் படைத்த மனிதன்
ஈவுகளற்றி ஈடற்ற விளை நிலமாய்
ஈர உளம் கொண்ட கற்பகமல்லவா விவசாயி
இக் கணமென்ன எக்கணமும் ஊடும் நன்றிகள்
இகமியங்கும் இவர்களால் இயற்கைக்கும் எம் நன்றிகள்.

உழவர் திருநாள் பெரு நாளாக என்றும் ஓங்கட்டும்.
ஊனக உள்ளங்கள் தவிர்த்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்