புதன், 11 பிப்ரவரி, 2015

அவி பாகமது!

அஞ்சா நெஞ்சக ஆளுமை ஒரு வகை
துஞ்சாத உள்ளகமும்
துயில் மறந்த தெள்ளகமுமாய்
பயில் நடை தெளித்த
பைந்தமிழர் பாதம் பட்ட இடமிது

இன்று
அறுவடையெலாம்
தறுதலையாக்கி
தண்ட பிரசண்டம் வீசிய
சண்டாளர்களின் காலடியில்
பசுமைகள் அழிந்தன.

அழிந்தனவைகள்
பின்பொரு காலம்
காலப் பரிமாணத்தால்
ஞாலத்தில் பரிவடிவம் பெறுதல்
இயற்கையின் நியதியாம்








சில
பரப்புக்கள் பாரில் விழைந்து
தளிர்த்து
கொழித்து விழித்தனவாய்
பதிவுகளில் பார்த்தேன்.
வரலாறும் அதை வையகப் பரப்பில்
விரித்தே பதித்துள்ளன.

வடிவங்கள் மாறலாம்
படிமானங்களும் பரிமாணம் மாறலாம்.
பசுமையாய் படிந்த விடி வானம் மாறதல்லவா?
சுமைகள்
சுமந்தவர்களின் சுழிகளிலிந்தே
சுழிகள் பிறக்கும்.






இது
வழி வழியாய் வந்த வரம்.
விழிகளை விற்று ஒரு சித்திரம்
கொள்வனவு செய உளம் ஒப்பார்.
வரும்
பழிகளை களைய விழி பார்ப்பார்.
ஒரு
மொழியான பார்வையில்.

அது தமிழர் தம் தாயகமாய்.






திங்கள், 2 பிப்ரவரி, 2015

போதை, நுகர்வு பாதிப்பு!



போதைப் பொருட் பாவனையின் தீமைகள்.
மனித குலம் தன் வாழ்வில் பெருந் தேடலாக கொள்வது வாழ்வின் முதல்படியாக உணவு மற்றும் உறையிடம் உடமைகள்.இவைகளே மனிதனின் முதல் அடிப்படை தேவையாகும்.
இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய பணமே அடிப்படை தேவையாகுகின்றது.
எந்த தொழில் செய்தாலும் அதன் மூலம் பெறும் பணத்தாலேயே அவ் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்றான்.
அது விவசாயமானாலும் விஞ்ஞானமானாலும் பணம் இதன் முக்கிய வரவாகும்.

ஒவ்வொரு மனித குலமும் ஏதோ ஒருவகையில் இத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆலாய்ப் பறப்பதும் அதற்காக சுலபமான மிகவும் இலகுவானதுமாகவும் விரைவில் பணத்தை உழைப்பதற்காகவும் எப்படி எப்படியோ முனைகின்றான்.

இந்த வகையில் மனிதன் ஒரு போதைக்குள் அகப்பட்டுக் கொள்கின்றான்.
மன அழுத்தம்,குடும்ப பாரம்,சமூக நிந்தனை,சமூக ஆளுமை இவைகளை எதிர் கொள்ள கல்வி மூலம் தன் தேவைகளை ஒரு வகையினர் பூர்த்தி செய்ய அவர்களிற்கும் ஒரு போதையை மனச் சுமையை குறைக்க ஒரு நுகர் பொருளாக பாவனைக்குட் படுத்தப் படுகின்றது.

மனித வாழ்வில் சிலர் தமதான மகிழ்வை,சோகத்தை,துயரத்தை ஏதோ ஒரு போதை மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை ஒரு சமூதாய பழக்கமாக கைக் கொள பழகிவிட்டான்.

இதற்கான புறச் சூழ் நிலை பலவிதமாகும்.
பொதுவாக போதைப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் தீதை பதிவாக்குவதற்காக மேலதிகமான காரணங்களை முன்னிலைப்படுத்தாமல் அதாவது போதைப் பொருட் பாவனைக்கான புறச் சூழலை பதியாமல் அதன் தீமைகளை பதிவெழுத முனைகின்றேன்.

எமது சூழலில் மிகவும் சாதாரணமாக கிடைக்கும் முதல் போதைப் பொருளாக கள் முதலிடம் பெறுகின்றது.இது இயற்கையாகவே
பனை மூலம் கிடைக்கின்றது.பனை மூலம் கிடைக்கும் இந்த கள் என்பதை தாண்டி வேறு விதமான மக்கள் நுகர்வு பொருளாக பனங்கட்டியை உற்பத்தி செய்வதற்கு பதிலாக விரைவில் பணம் பண்ண கள் முதல் விற்பனைப் பொருளாகின்றது.

நுகர்வோரின் கவனம் வெறும் போதையில் இருப்பதால் அதை தொழிலாக கொள்வோர் தங்களின் வருமானத்தை முதலில் விரைவாக பெற சில சமூக விரோத பாவனைகளை நுகர் பொருட்களாக்கி உலவ விட்டான்.

ஒவ்வொரு மனிதனும் தன் சமூக இழப்பை,எதிர்பார்ப்புகள் உடைந்த பொழுது ஏதோ ஒரு வகை போதையில் அதை மறக்க முனைகின்றான்.
இதில் படித்தவர்கள்,படியாதவர்கள் என்ற பேதமே இல்லை.
உடற் சோர்வென தொழிலாளியும்:,மன அழுத்தமென படித்தவர்களும் ஒரு காரணத்தை முன் வைத்து போதையை தன் சுமை போக்கியதாக கருதுகின்றனர்.அதன் மூலம் தன் சுமைகளில் இருந்து விலகியதாக ஒரு பொய்மையை கட்டி அதனில் மூழ்கி போய்விட போதை ஒரு கற்பக தருவாக இந்த போதை ஏற்றிகளிற்கு வரப் பிரசாதகின்றது.

ஆனால் இதன் பக்க விளைவுகள் தாக்கும் போது சிலர் வழித்துக் கொள்கிறார்கள்.சிலர் அதலேயே மூழ்கி விடுகிறார்கள்.அதாவது விரக்தியில் மாற்று வழியற்று இனி என்ன எனும் இயலாமைக்குள் தள்ளப்பட்டு முடிவில் இறப்பை ஏற்றுக்கொளும் தாழ் நிலைக்குள் வயப்படுகின்றனர்.

எந்த பிரச்சனையையும் நேரடியாக முகம் கொடுக்க தயங்கும் சிலரின் ஊக்கியதாக போதை ஒரு மூலப் பொருளாக பாடு பொருளாகின்றது.இதுவே உண்மையும் கூட.

இவ் வகையில் முதலில்
கள் விற்பனை சமூகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றது.

கள்ளால் ஏற்படும் தீமை
1.வயிற்றுப் புண் இதனால் குடலில் ஏற்படும் பாதிப்பு
2.பசியின்மை
3.நாளடைவில் பார்வையில் தாக்கும்
4வீணான குடும்ப பகை.
5.சமூகத்தினால் ஓரம் கட்டப்படுதல்
6.போதையில் பேசு பொருள் தெரியாமல் வாதப் பிரதிவாதத்தால் ஏற்படும் சண்டை
7.போதையில் ஏற்படும் சண்டையினால் ஆயுத பாவிப்பு
8.தொழிலிற்கு போவதில் ஒழுங்கின்மை.
9.வேலை வாய்ப்பை இழக்கும் புறத் தன்மை.
10.ஒழுக்கம் சீர்குலைய சமூகத்தில் பாலியல் வன் கொடுமைகளை புரிதல்.

இப்படியாக பல வகையில் போதைப் பாவனையால் தீமைகளே அதிகமாகும்.முக்கியமாக போதையினால் எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை.

சாராயம்!
இதில் ஆல்ககால் மேலதிகமாக இருப்பதால் விரைவில் போதை ஏற்படும் அதே வேளையில் குடலை எரித்து புண்ணாக்கி விடும்.பொதுவாகவே ஆல்ககோல்கள் ஈரலில் சமிபாடடைவதால் ஈரல் அவிந்து அழற்சியாகி இதை குடிப்போரை சாகடித்து விடும்..

கசிப்பு!
எக் காரணம் கொண்டும் நுகரவே கூடாத ஒரு எரி பொருளாகும்.இதை தயாரிப்பதற்கு பாவனைப்படுத்தும் பொருட்கள் சில:
தார்,துருப்பிடித்த இரும்பு,வாழைப்பழம்,இறந்த மிருகங்கள் உதாரணமாக ஓணான்,பல்லி,sprit எனப்படும் ஒரு எரிபொருள்.

இதைப பாவித்தால் உண்டாகும் உடன் பக்க விளைவுகள்.
குடல் அரிப்பு,ஈரல் எரிதல்,வயிற்றுக் குமட்டல் தாங்க முடியாத வயிற்றெரிவு என்பவைகளால் உடனடி மரணம்.
 

மேலும் புகைத்தல்!
புகைப்பதினால் புற்று நோய் ஏற்படுமென ஆராட்சிகள் வலியுறுத்துகின்றன.
மேலும் சிகரட் புகைப்பதால் சுற்றிலும் உள்ளவர்கட்கும் பாதிப்பு அவர்களும் சிகரட்டினால் வெளியேறும் புகையை சுவாசிப்பதானால் பாதிக்கப்படுகின்றார்கள்.

கஞ்சா!
இதை ஒருவித மருத்துவப் பொருளாக பாவனையில் அறிமுகமாகி இன்று நாளாந்தம் மக்களிடையே பரவியுள்ள ஒரு நுகர் பொருளாகி விட்டதென வரும் செய்திகாளால் அறிய முடிகின்றது.
இதுவும் ஒரு போதைப் பொருள்தான்.
இதை நுகர்வதால் ஏற்படும் தன்மைகள்.சுற்றிலும் இருப்பவர்களை இனம் காணமுடியாது.பறப்பது போல் உணர்வு ஏற்படும்.ஆதலால் செய்யக் கூடாத பல வினைகளை செய்யத் தூண்டும்.எதையும் பார தூரமாக எடுக்காமல் தானே ஒரு உலகம் என இயங்கச் செய்யும் இயல்புடையது.இதனால் ஏற்படும் பாதிப்பு பல வகையாகும்.

பவுடர் வகை சார்ந்த போதைப் பொருட்கள் பல உண்டு.
அவற்றை ஊசி மூலம் தன் உடம்பில் சுயமாகவே ஏற்றிக் கொள்வார்கள்.
சிகரட்டில் புகையிலையில் கலந்தும் புகைத்துக் கொள்வதும் உண்டு.

பொதுவாக இந்த வகை போதைப் பொருட்களால் ஏற்படுவது தீமைகளே தவிர வேறில்லை.
1.தன் நிலை மறத்தல்
2.எனவே பயமின்றி எத்தகைய இழி செயலையும் செய்யத் தூண்டும்.
3.பல பாலியல் வன் புணர்வுகளும்,கொலை,கொள்ளை,திருட்டு என்பனவும் போதைப் பொருளின் பாவனையால் ஏற்படுவதே தற்போதைய சமூகத்தில் நடக்கும் பல இன்னல்களிற்கு காரணமாகும்.
4.ஒழுக்கம் என்பதை முற்றிலும் நிராரிக்கும் தன்மை இந்த போதைப் பொருளிற்கு உண்டென்றால் அது மிகையாகாது.
5.எவரையும் மதிக்காமல் தான் தோன்றித் தனமாக நடக்கச் செய்யம் நச்சுத் தன்மை கொண்டதே போதைப் பொருட்களின் மூலத் தன்மையாகும்.

போதைப் பயன்பாடுகளை இல்லாதெழிக்க சிறந்த மார்க்கம்.
அது பற்றிய சரியான விழிப்புணர்வூட்டுதல்.
எமது ஊரில் விளையாட்டாக ஒரு பொழுது போக்காக கருதியே கள்ளுக் குடித்தல்,பீடி,சிகரட் புகைத்தல் என இப் பழக்கத்திற்கு அடிகோலுகின்றார்கள்.நாளடைவில் இதுவே பெரும் பழக்கமாகி அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள்.இப் பழக்கம் எமது ஊரில் என்றில்லை பொதுவாக எல்லா தேசங்களிலும் இதுவே நடைமுறையாகும்..

எனவே இந்த நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்தலை நிறுத்த மாற்று யோசனைகளையும்,வழி முறையையும் சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

சமூகத்தில் இளைய தலைமுறைகளிடம் மனம் விட்டு கலந்துரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கான வழிமுறைகளை கைக் கொள்வதால் சீரழியும் இளைய தலைமுறைகளை இப் பழக்கத்திலிருந்து மீட்கலாம் என்பது தெளிவாகும்.

போதை அது எதனால் வந்தாலும் அதை நாடாமல் மனிதனாக வாழும் சிறந்த வழிகளாக வாசித்தல்,எப் பிரச்சனையையும் மனம் விட்டு உரையாடல்.நக்கல்,கிண்டல்,அவமானப்படுத்துதல் உதாசீனம் செய்தல்,மற்றவர் மனம் புண்படும்படி நடத்தல்,புரிந்துணர்வில்லாமை,விட்டுக் கொடுக்காமை,ஒருங்கு சேர முடியாமல் பழி வாங்கல்.இப்படியான சமூக ஒழுங்கற்ற பழக்கங்களை ஒழித்தாலே பெரும்பாலும் போதைப் பொருள் நாடும் மனங்களை வெல்லலாம்.

இதில் வெட்கத்திற்குரிய செயலாக வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்விற்கும் போதைப் பொருளை நாடுதல் கிட்டத்தட்ட ஒரு பண்பாடகவே மாறியது காலத்தின் கோலமல்ல.நாமாகவே இதை நீட்சியடைய வைத்துவிட்டோம்.
பியர்,சாரயம் இல்லா நிகழ்வு ஒரு அர்த்தமற்ற நிகழ்வாக சமூகத்தில் புரையோடியிருப்பதே வேதனையாகும்.

புரிந்து நடப்போமே.
போதைப் பொருள் பாவனையை அறவே தீண்டாமல் ஒரு புதிய சமூதாயத்தை உருவாக்க இளையோர்கள் நிச்சயம் உழைத்தால் இத் தீய பழக்கத்தை நம் சமுதாயத்திலிருந்து நீக்கலாம்:
செய்வார்கள் செய்யவேண்டும் எனும் ஆதங்கத்துடன்.

நன்றி.






 

புதன், 26 நவம்பர், 2014

புற முதுகெழுதும் நண்ப!

முகநூல் பக்கத்தில்
தலை காட்டும் எனதான சில நண்பர்களே!
ஒரே ஒரு வினா?
நான்
HI என சுட்டினால்-அதாவது
உம்மை நோக்கி இந்த
இரண்டெழுத்தை அழுத்தினால்
உடனே
முகநூலை விட்டே ஓடும்
ம(த)ர்மம்
யாதோ?

புரியும் உனக்கு பதில் தெரியணும் எனக்கு!
சாட்சி மனதில் இருந்தால்
இதில் காட்சி கொடு
மேற் சுட்டிய சில நண்பர்களே!

திங்கள், 24 நவம்பர், 2014

கனதி காணும் காலம்!

 நினைத்துப் பார்க்க!
காலம் சென்ற மாஐி ஐனாதிபதி J.R.யெயவர்த்தனாவினால் அமுலாக்கப்பட்ட ஐனாதிபதி ஆட்சி முறையை ஒரு முடிவிற்கு கொண்டு வருவேன் என களத்திலிறங்கிஅதையே தமதான ஆட்சியில் தொடர்ந்து கடைப்பிடித்த மாஐி சந்திரிகா---தற்போதைய மகிந்தா வரை இந்த ஐனாதிபதி ஆட்சி முறையை களையாதது ஏன்?

1.சந்திரிகா நேற்று இறக்கி வைத்த செய்தி தன்னிடம் மூன்றில் இரண்டு அதிகாரம் இல்லையென்பதுவும்,மேலும் எதிர்க் கட்சிகளும் அங்கீகரிக்கவில்லை எனவே தன்னால் இந்த மமதை பிடித்த ஆட்சி முறையை விலக்கும் திட்டம் அமுலாக்க முடியவில்லை.

 2.ஐயா மகிந்த ஆட்சிபீடம் ஏற முன் வழி மொழிந்ததுவும்
ஐனாதிபதி ஆட்சி முறையை அகற்றுவதாகும்.ஆயினும் அவர் அதை நடைமுறைப்படுத்தவே விரும்பவில்லை.ஐயாவிடம் மூன்றில் இரண்டை விட மேலதிக பாரளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இவ் நடை முறையில் கை வைக்க முற்று முழுமையாகவே ஆட்சிபீட ஆசை விடவில்லை.

3.நேற்றைய பொழுது மகியின் கட்சி செயலாளரும்,பிரதம வகி பாகம் வகித்த (கட்சியின் செயலாளர்)அமைச்சர் மைத்திரிபாலா.ஏலவே போட்ட திட்டப்படி கட்சி மாறி ஒரு பொதுவேட்பாளராக தன்னை அடையாளம் காட்டியதுவும்,அத்தோடு 100நாட்களில் இந்த ஐனாதிபதி ஆட்சிக்கு ஆப்பு வைப்பதாக கூறியுள்ளார்.தான் ஐனாதிபதியாக வெற்றி பெறும் நிலைமை வந்தால்.அதாவது வருவார் எனும் பாரிய நம்பிக்கை(மூலம்--பல ஐ.தே.க +சந்திரிகா அம்மையார் பின்ணணியில் அமெரிக்க அதரவு இன்ன பிற இத்தியாதி அணைக்கும் கரங்களின் அனுசரணை காசு+துட்டு+,மணி,மணி)

4.மேற்படி ஆட்சி கட்டிலில் தூய இன்பம் கண்டவர்களின் சுகத்தை தான்இழப்பாரா?அதாவது் தான ஐனாதிபதி ஆகிய பின் இவ் ஆட்சி முறையை இல்லாதொழித்த பின் அதிகாரம் நாட்டின் பிரதமர் கையில் வீழும்.அதுதானே நடைமுறை.அப்போது ஐனாதிபதி ஆனவர் வெறும் டம்மி தேவை ஏற்படின் அவசர காலத்தில் அதிகாரத்தை கையிலெடுக்கும் ஒரு பிரகிருதியாகவே இருப்பர்.
(யோக்கராகவும் வைக்கலாம்)





ஆக!
வரும் தேர்தலில் வெற்றியீட்டினால் இப்படியான ஒரு ஏதுமற்ற பதவியில் தற்போதைய பொது போட்டியாளர் இருக்க ஆவல்படுவாரா?.
இது யதார்த்ம்தானா?
பதவி கிடைத்த பின் யாபேர்க்கும் இவர் "பெக்கே" காட்ட மாட்டாரா?என்ன நிச்சயம்?எத்தனையோ ஒப்பந்தங்களை குப்பையில் போட்ட வரலாறு படைத்ததுதான் பேரினவாதத்தின் நிலைப்பாடு.
ஆயின் ????
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மு.கு.
எவர் வந்தாலும் ஈழத் தமிழினம் பற்றி அக்கறை காட்டப்படப் போவதில்லை யாராயிருந்தாலும்.
ஆயின் தமிழரின் வகி பாகம்+அவி பாகம் யாது?என்பதை ஒரு மூலையில் முடுக்கி விடாமல் கவனத்தில் கொள்க!
கார்த்திகை மாதத்தில்
எனக்கும்
காரியமில்லாத இந்த
களவேலை.
இனி
கரிகால சந்ததி பதில் வரையட்டுமே.

புதன், 12 நவம்பர், 2014

மன்னிக்குமா தமிழினம்?

நீதிக்கு தலைவணங்கும்
நியாயவாதியாக
மகிந்த சிந்தனை
வகுத்ததெல்லாம்
(அ)நியாயங்களை அழித்ததே ஆகும்.

அரச கட்டில் தரும் சுகம்-இனி
எந்த ஆயுளிலும்
மகிந்தருக்கு கிடைக்காது.
நீதியரசர்களை
நிந்தித்தே நீதி வாங்கு(பவர்)

இனி
சாவரும் போதும்
சாக்காட்டிலிருந்தும்
சனாதிபதியாக சாப விமோசனம் பெறுவார்.
இவர்தான்
இலங்கையின்
நியமான
நீதியரசர்..

ஆனாலும்
தமிழர் தம் வாக்குடிவங்கியில்
பசிலிற்கு ஏனோ ஒரு மோப்பம்:
எனினும் ஈழத் தமிழர்
ஏப்பமாய் விடுவர்-அது
தமிழின ரத்த வடுவாய்.
படுவான்கரை முதல்
முள்ளி வாய்க்கால் வரை--






சிந்திய குருதிகள்
கூனிக் குறுகுமா?
காலம் என்னய்யா பதில் கூ(று)தும்?

புல வாழ் மக்களின் ஊர் சமூகத் தொடர்பு ஒரு பார்வை





எமதூரவர்கள் மட்டுமல்ல பொதுவாகவே ஈழத் தமிழர்கள் இலங்கையின்
போர்ச் சூழலால் புலம் பெயர் வாழ்வை மேற்கொண்டுள்ளனர்.இது கடந்த காலம்.
இங்கு நான் பதிய விழையும் சாரம்.
அப்படி புலத்தில் வாழும் எத்தனைபேர் ஊரையும்,தான் வாழ்ந்த சமூகத்தையும் உள்ளார நேசிக்கிறார்கள் என்பதுடன் ஊர் சார் கால நடைமுறை.முன்னேற்றத்திற்கு பொதுவாக என்ன செய்ய விழைகிறார்கள்?

நாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்து கல்வி கற்று சமூகப் பிரக்ஞையுடனும் சீரான ஒரு ஒற்றுமையான பரவலான விழிப்புணர்வுடனும் வாழ்ந்து அரசியல் மற்றும் பிற காரணங்களால் பல ரணங்களை சுமந்தும்,வெளியில் ஆற்றுகைப்படுத்த முடியாத வடுக்களை ஏந்தியும் சிலர் மிகச் சுலபமாகவும்,பலர் பல இடர்களிற்கு மத்தியிலும் புலம் பெயர்ந்து சில காலம் புல வாழ்வில் எதையெல்லாம் சகிக்க முடியாதோ அத்தனையையும் சகித்தும்,பின் சுகித்தும் தற்போது ஓரளவு அல்ல பேரளவில் தம்மை நிலைநிறுத்தி நன்றாக வாழ்கிறார்கள்.
இந்த முன்னேற்றமும்,தமதான இருத்தலும் நாட்டிற்கு நாடு வேறுபடும் அனுபவங்களால் நிர்ணயிக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது.
அதற்காக இவர்கள் கொடுத்த விலையும்,நிலையும் இங்கு பதிவிற்கப்பாற்பட்டது.

இதுபற்றிய மேலதிக பதிவுகள் தேவையற்றது.
விடயமானது தற்போது புல வாழ் மக்கள் தமதான உறவுகளுடனும்,உற்றாருடனும்,சமூகத்துடனும் எப்படியான பிணைச்சலை,உறவை வலுப்படுத்தியுள்ளார்கள் என்பதுடன், சமூகத்தின் பொது நலத் திட்டத்தில் எந்தளவு ஆர்வமும்,அக்கறையும் கொண்டுள்ளார்கள் எனப் பார்ப்பதே இந்த பதிவின் நோக்கமாகும்.

நான் இதை இங்கு பதிவதால் யாரையும் குறை கூறவோ,அன்றி மேம்படுத்துவதோ எனதான நோக்கம் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்தி தொடரலாமென ஆழமாக நம்புகின்றேன்.
இந்த பதிவில் பொது வாழ்வு சார் எதிர்பாபு்பு நிறையவே அடங்கியுள்ளது.அதன் காரணமாகவே இந்த பதிவு.

இது ஒரு மன ஆதங்கம்,அனுதினமும் எனக்குள் ஆழமாகப் புதைந்து அடிக்கடி நினைவில் வந்து இவர்கள் ஏன் இப்படி? என வலிமையான வினாக்களால் குத்தும்போது எனக்கு நானே சில சமயம் சமாதானம் சொல்வதும்,சில சமயம் வஞ்சினம் வந்து ருத்திரம் கொள்ள வைத்ததும் உண்டு என்றால் அது மிகையாகாது.

.இங்கு நான் பதிவது எனது சொந்த அனுபவத்தாலும், சுற்றத்தாரகிய புல உறவுகளிடம் இருந்து அறிந்ததுவும்,தெரிந்ததுவுமான நியங்களே தவிர கற்பனையாக ஏதும் இல்லை.

1.புல வாழ் மக்கள் ஏன் தமது உறவுகளுடனும், உற்றாரிடமும் வைத்துள்ள தொடர்பை ஊர் எனும் எல்லைக்குள் தொடுகைப்படுத்தவில்லை?

2.இதன் மூலம் எமது ஊரிற்கு ஏதாவது நற்காரியம் செய்யலாம் என தானகவே நினைப்பதும் இல்லை.எண்ணியதுவும் இல்லை.

3.பொதுவான வேலைப்பாடெனில் கோயிலை மட்டும் முன்னிலைப்படுத்தும் மடமை ஏன்?

4.ஏனைய ஊரவர்களைப் பாருங்கள் என நான் ஒருபோதும் ஒத்துப் பார்க்க சொல்லமாட்டேன்.நாமாகவே சிந்தித்து எமது ஊரிற்கு நிச்சயமாகவும்,நியாயமாகவும் எது முக்கியமான தேவை என சுயமாக சிந்தித்து ஊரவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அதேவேளை தத்தமது நாட்டில் வசிக்கும் எமதூரவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு கலந்தாலோசிப்பை நடாத்தி ஆவன ஏதும் செய்ய எவராவது முன் வராதது ஏன்?

இவ் வகையான வினாக்களிற்கு தொக்கி நிற்கும் ஒரே விடை.
பணம்,துட்டு,காசு,மணி,மணி தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது.
இதுதான் யதார்த்தமும் ஆகும்.

ஆம்!
இங்கு வாழும் எம் ஊரவர்களிற்கு பணமே முக்கியம்.

தண்ணியடிப்பதற்கும்,சிகரட் புகைப்பதற்கும என அனாவசியச் செலவுகள் செய்வதற்கும் பின் நிற்காதவர்கள்.
ஊரில் ஒரு கட்டுமானத்தை முன்னெடுப்பதெனில் முன்வைக்கும்
முதற் கேள்வி
உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை?

இவர்கள் தண்ணியடிப்பதோ,மற்றும் ஆடம்பர வாழ்வு வாழ்வதோ எனதான விமர்சனம் இல்லை.அது அவரவர் விருப்பம்.அல்லது தெரிவு.
எனினும் இப்படியான
இந்த செலவில் 1வீதத்தை மாதமாதம் கொடுத்துதவினால் இந்தளவில் எவ்வளவோ கட்டுமானத்தை பூர்த்தி செய்திருக்கலாம்.

அஃதன்று
1.ஏன் செய்யணும்?
2.எதற்க்கா செய்யணும்?
3.யாருக்காக செய்யணும்?
4.வேறு வேலையில்லை.
5.எனக்கு மனம் இருக்கு மச்சி ஆனால் மனுசி ----இப்படி சிலர்
6.ஆமாண்ணை ஆனால் இவர்தான் இப்படி சிலரின் மனைவிமார்.
7.உங்கட ஊரிற்கு ஏன் செய்யணும்?எங்கட ஊரிற்கே செய்யல்லை இப்படி(கணவன்,மனைவி  அயலூரில் திருமணம் செய்த குடும்பம்)
8.எங்களிற்கே வழியில்லை இஞ்சை இவர் வேறை
9.எனக்கு சரியான விருப்பமடா –ஆனால்—பொறு,பொறு எப்படியும் ஏதாவது செய்வன்.இப்படியே காலத்தை கடத்தும் சிலர்.
10.நான் எப்படியும் வருகின்ற மாதம் 50அல்லது 80ஆயிரம் கட்டாயம் அனுப்புவேன்.(சொன்னவர் வருடம் இரண்டாகியும் ஒரு சத நிதியுதவியும் செய்யவில்லை.
11.“நீ ஓரு 1000-யூரோ கடனாக தா“ நான் அடுத்த மாதம் கட்டாயம் தருவேன் என என்னிடமே கடன் கேட்டு எனக்கே மாதா காட்ட என ஒருவர்.
12.உந்த சிறிய ஊரிற்கு உதெல்லாம் தேவையா?(அப்படி பார்த்தால் இந்த சிறிய ஊரில் படிப்பறிவே தேவையில்லை என சொல்லாமல் விட்டானே ஒருவன்)
இப்படி நீட்சியடையும் ஊரகர்கள் என்ன மனதில் வைத்திருக்கிறார்கள் என்றால் பதில் பல வகை. 
ஒரு சனசமூக நிலையம் கட்டுவதற்கு பட்ட இடர் ஒரு சுகானுபவம்.
இந்த இடத்தில் நிச்சயமாக இதை பதிந்தே ஆகணும்.
அதாவது சனசமூகநிலைய கட்டுமானத்திற்கு நிதி தந்துதவிய அனைத்து உறவுகளிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.
ஆனால் அதற்கான நிதியை பெற கால தாமதமும்,பல விமர்சனங்களும்,புற முதுகு காட்டலும் நடந்ததுதான்.ஆயினும் எண்ணம் இனிதே ஈடேறியது.

சனசமூக கட்டுமானத்திற்கு நிதி தந்த ஊரவர்களில் பலர் இந்தப் பணியிலிருந்து ஒதுங்கியிருப்பதன் மூலம் வெளிப்படுத்தும் சேதி கவலையளிப்பதாகவே உள்ளது.
ஒரு ஓர்மம் கூட இல்லை.ஏதோ தங்களது பணத்தை விரயமாக்குவதாக அவர்களுக்குள் அர்த்தமற்ற எண்ணம்.
ஊர் கூடித் தேரிழுக்க பின் நிற்பது சாதாகமான சூழல் இல்லை.இந்த ஒரு நல் வாய்ப்பை கைகழுவி விட்டவர்கள் நிச்சயமாக காலம் கடந்து வருத்தம் தெரிவிப்பார்கள் இது கால நியதி.

ஏலவே மனமொத்து தன் மனக் கதவை திறப்பார்கள் எனும் பாரிய நம்பிக்கை எனும் எதிர்பார்ப்பு சூழவே இந்த பதிவை நோக்ககிறேன்.இப் பதிவை எப்படியாவது இவர்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டிய காலத் தேவையுள்ளது.இதை ஒவ்வொருத்தரும் கருத்தில் எடுத்து ஆகவேண்டியதை செய்வதே சாலச் சிறப்பாகும்.
இது எனது தாழ்மையான கருத்து.

மீண்டும்!
எமதூரகத்திற்கே அத்தியாவசியமான பாலர் பாடசாலையை கட்டிமுடிக்க வேண்டி அதற்கான நிலம்,வரைபடம்,அனுமதி இத்தியாதி இத்தியாதி என பல விடயங்களை ஒப்பேற்றிகொண்டு மீண்டும் எமதூரகர்களின் கரங்களை பற்ற கையை நீட்டினால் எவருமே அல்ல நன்றாக அறிந்தவர்களும்,பன்முகத்துடன் பழகியவர்களும் வன் முகத்துடன் விலகிச் செல்லும் இழி நிலையை காண்கிறேன்.

முகநூலில் ஒரு கலோ என சாட் அடித்தால் மறுகணம் மூடப்படும் முகநூல் தொடர்பு .நினைக்கவே எரிச்சலையும்,வெறுப்பையும் உண்டாக்கும் இந் நிலை ஏன்?

பணமன்றி வேறென்ன?நிதிதான் வேண்டும் என்றில்லை கருத்துக்கள் தமதான பங்களிப்பாக ஒரு கருத்தைக் கூட சொல்ல விருப்பகற்றும் புற நிலை தேவையா?
பலர் இங்கு  பதில் தருவதாக இல்லை.
விரல் விட்டு எண்ணினால் நிதிக்கான பங்களிப்பை உடனடியாக இல்லாவிட்டாலும் தந்துதவிய மிக,மிகச் சிலரே.. அவர்களின் இந்த ஈடுபாட்டிற்கு எனதான நன்றிகள்

புல வாழ் மக்களிடம் உள்ள இன்னுமொரு நிலைப்பாடு.தாம் அனுபவிக்காத எந்த ஒரு இலக்கையும் மதிக்காதிருத்தல் அப்படியான ஒரு சுயநலம்.
நமதூரில் மட்டுமல்ல உலகத்திலேயே பரவியிருக்கும் ஒரு வித வியாதி.
இந்த பரந்த யுகத்தில் பொதுமை நிலைவேண்டி சாதிக்கப்பட்டவைகள் ஏராளம்.அரசாங்க,மற்றும் தனியார் நிறுவனங்களில் கையேந்தும் நிலை தேவைதானா?தற்போது சகலரும் அனுபவிக்கும் சூழலை நோக்கினால் நாம் அனுதினமும் நுகரும் பல விடயஙஇகளை சுட்டலாம் உதாரணமாக மரங்களை்,பயன் தரும் பல மரங்களை தனதான சுய நலனிற்காகவே என ஒவ்வொருத்தரும் நினைத்திருந்தால் நாட்டில் எவருமே மரம் நட்டிருக்க மாட்டான்.தாமாகவே ஒரு பாடசாலையையும்,ஆலயம்,மற்றும் பிற பொது பாவனைக்கான இடத்தையும் அமைத்திருக்கமாட்டார்கள்.
பொதுவுடமை உணர்வு என்பது நிச்சயமாக ஊரவர்களை விட புல வாழ் மக்களிடம் அரிது.இது மகா யார்த்தம்.ஏனெனில் பல தேவைகளை இலவசமாகவே அனுபவிக்கும் தன்மை.உ+ம் நீச்சல் களம்,பாடசாலை,நூலகம்.இவை எவற்றிற்குமே புல வாழ் உறவுகள் எவ்வித நிதியும் கொடுத்ததும் இல்லை.அப்படி கொடுகஇக முனைவதும் இல்லை.ஆதலால் இதன் அருமைகள் தெரியாது.
சும்மாவா சொன்னார்கள் „சும்மா இருக்க சோறு வரும் வாடா சித்தா காலாட்டா“
இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ?நிச்சயமாக புல வாழ் அனைத்து மக்களிற்கும் பொருந்தும்.இதுதான் யதார்த்தமும் கூட.
யோசித்துப் பாருங்கள்.இவ்வளவு ஊரக மக்கள் புலத்தில் இருந்து கொண்டும் சனசமூக நிலையம்  அமைக்க ஆண்டு இரண்டு தேவையா? அன்றி எமதான தொடர்பாலோ நிதிகோரலோதேவையா?இந்த உணர்வு மேலோங்கியிருந்திருந்தால் நமது ஊர் இன்று எங்கோ ஒரு உயரத்தில் இருந்திருக்கும்.இதுபற்றி சற்றேனும் இனியாவது சிந்திப்பார்களா?சிந்திக்கணும் அதுதான் எனதான நோக்கமும் ஆகும்.எதையும்..தாமாகவே உணரும் தகமையை குப்பைத் தொட்டிலில் போட்டுவிட்டு,தேவையான போது ஒத்திக் கொள்ளும் மாற்றான் மனப் பான்மை.

தாமகவே உணராத எதுவுமே யாரும் தீத்தியும் உணரார்கள்.இதற்கு மனதில் மாற்றம் தேவை.அது மொழி உணர்வுபோல,நாடு தழுவிய உணர்வுபோல,தேசிய உணர்வுபோல ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும்.அது தான் சார்ந்து வாழும் சமூகத் தன்மையுடன் ஒத்திருத்தலால் மட்டுமே ஒப்புவமையன்றி திகழும்.முக்கியமாக கல்வியுடன் சமூக அரசியலும் தேவை.இவை தத்தமது சுய தேடலாலும்,அந்த உணர்வுகளாலும் மட்டுமே மேலும் ஊக்குவிக்க முடியும்.

நானும் என் பிள்ளைகளும் போதும் என ஒரு வட்டத்திற்கள் வாழும் பேதமை.இந் நிலை அற்றுப்போகணும். எவ்விதமான பொது வேலைத் திட்டங்களையும் உள் வாங்க மன விருப்பின்றி இருப்பவர்கள் திருந்துவார்களா?

ஐயா!குற்றம் குறை கூற விடுங்கள் சும்மா பிச்சு உதறுவார்கள்.

திருந்தணும் எமதூரக உறவுப் பாலத்திற்கு வலுச் சேர்க்கணும்.ஆவன செய்ய எப்படியும் முயற்சிக்கணும்.முடியும் எனும் நல் நம்பிக்கை ஒன்று மட்டுமே என்னையும் இதுபோன்ற காரியத்தில் இன்னமும் தீர்க்கமாக இலங்கவும்,இயங்கவும் செய்கின்றது.

மேலும் இது எமதூரவர்களிற்கான கோரிக்கை!அல்லது எதிர்பார்ப்பு.
எமது ஊரவர்களும் வேறு நாட்டிலிருந்து வரும் எமதூரவர்களுடன் தொடர்பை பேணுவதில் அக்கறையின்றியே இருக்கிறார்கள்.இதற்கு ஒரு சனசமூக நிலைய நிர்வாகத்தின் அணுகு முறையும் மேலும் மேம்பட வேண்டும்.
பொதுவான நிலைப்பாடு!
1.சங்கடம்(ஈகோ)
2.எப்படி அணுகுவது என்பதில் தயக்கம்.
3.இவர் என்ன நினைப்பாரோ எனும் மனச் சிக்கல்.இதுவும் ஒருவகை ஈகோ.
4.அவருடன் கதைக்கத்தான் வேண்டுமா?(அறிமுகமற்ற புறச்சூழல்)
5.கேட்டால்,கதை்தால் ஏதாவது ஆகுமா? அஃதன்றேல் தன்மானம் கரைந்து காற்றில் போய்விடும் என்கிற அதீத கற்பனை.

எனதான கருத்து யாதெனில்.
இரு பக்கமும் உள்ள ஈகோ எனும் வாளை தூக்கி எறியுங்கள்.
கதையுங்கள்,மனம் விட்டு கதையுங்கள்.அப்போதே ஒரு வழி திறக்கும்.
பொது அமைப்பில் பங்கெடுக்க வெளிக்கிட்டால் மான,அவமானங்களை பெரிது படுத்தக்கூடாது.உ+ம் உங்க ஊர்க் கோயில்களில் நடக்காதா கூத்தா?
இது புலம் பெயர் நாட்டிலும் தாராளமாகவே உண்டு.யாரும்,எதையும் பெரிதுபடுத்துவதில்லை.படிப்பறிவற்ற சில பேர்களைத் தவிர இவர்களை யாரும் பெரிதாக இல்லை பொருட்டாகவே கருதுவதில்லை.(விதிவிலக்குகள் எங்கும் உண்டு)
இந்த நிலை எல்லா இடமும் உண்டு.ஆகவே ஊரகர்களும் சரி,புல வாழ் மக்களும் சரி ஊருக்குள் உலவும் போதாவது மனம் விட்டு கதையுங்கள்.அது மட்டுமல்ல உங்களின் அனு,தின பார்ப்பனவாகிய முகநூலிலும்தான்
ஊர் போய் உங்கடை ஆடம்பரம் எனும் பெயரில் அசிங்கம் பண்ணாதீர்கள்.

ஒரு சிலர்க்கு உள்ள பிரச்சனை யாதெனில் என்னை ஒத்த வயதினர்க்கு அதாவது தமதான வயதொத்த நண்பர்கள் இல்லாமையே.எனக்கும் அப்போது இந்த பிரச்சனை இருந்தது.இப்போது அறவே இல்லை.காரணம் எமதூரக இளைய சமூதாயத்துடனான அறிமுகம்.தொடர்பாடல் தொடர்ந்தும் தொடர்புகளை கனதியாக பேணுதல்.கருத்துக்களை மனம் விட்டு கதைத்தல்,காரியங்களிற்கு நிதி மட்டுமல்ல ஆலோசனைகள் வழங்கல் .(தமது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்கணும் எனும் கட்டாயம் இல்லை என்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்).

உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஏதுமே இல்லை.
அதற்கு பின்வரும் சிறப்புக்கள் தேவை.
1.புரிந்துணர்தல்
2.விட்டுக் கொடுத்தல்
3.மற்றவர்களின் உணர்வுகளிற்கும்,கருத்துக்களிற்கும் மதிப்பளித்தல்.
4.உரிய நேரத்தில் உரியதை நேர்மையாக உரையாடி தீர்வு காணல்
5.ஈகோ“ எனும் உந்தும் ஆயுதத்தை அறவே தவிர்த்தல்.
6.முக்கியமாக புறம் பேசுதல்.முதுகுப்பின் முறைத்தல் ஆகியனவற்றை தவிர்த்தல்
7.கிண்டலடிப்பதில் உள்ள ஒரு அதீத குரூர திருப்தி (கட்டாயம் உதறப்பட வேண்டிய நிலைப் பாடிது)

ஆக!
மனம் வைப்பார்களா சகலரும்?
வெறும் நம்பிக்கையில் எந்த நாற்றையும் நடமுடியாது.
முடிவாக!உளப் பூர்வமான உறவுகளை உணர்வுபூர்வமாக நிலைப்படுத்தி ஆவன செய்து ஆளுமையுடன் எழுந்து நிற்கும் பாலர் பாடசாலை கட்டுமானத்தை பூர்த்தி செய்து எமதான இளைய தலைமுறையை நிமிர்ந்தெழ வைப்போம் என உறுதி கொள்வோமாக..
நன்றி!
என்றும் ஊரகனாக
யேர்மனியிலிருந்து
சு.குமார்.

 

வியாழன், 1 மே, 2014

இருப்பு!

நமக்குள் இருப்பது
தமக்குள் தகைப்பதாய்
கணக்குகள் போடுவது
தப்பான தவறாகும்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மீண்டும் மீட்புக்களில்!




காதல் மடல் விரிய
கானமாய் மனம் விரியும்.
சாதல் அது சாயும்,
நுாதலுடன் நுதம் சூடும்.
நூதனமாய் நுகரும்
போதிலெல்லாம் காதலே காவலாக!

நினைவொற்றி செல்கின்றது கடந்த கால நியங்கள்.
தனைப் பற்றிய பழைய வைகைகளில்
பருவ காலங்கள் படமாய் ஓடுகின்றது.
மருவியதுவும்,கருகியதுமாக
ஒரு கால வெள்ள நீரோட்டம்
பெரு நிறைவாய் நினைவாய்
வயம் மீட்டிப் பார்க்கும் போதிலெல்லாம்
காதலே காவலாக!

இழந்தவைகளும்,
அதை மீண்டும் மீட்டதுவுமாக
களங்கள் கனம் எழுதிக் கொள்கின்றது.
அன்றடைந்த காயங்களிலும் ஒரு
கலயம் சூழ்ந்ததாக
அலையாய் ஒரு அற்புதமான புலர்வுகளால்
தனை மறந்து மத்தப்பாய்
மெய் சிலிர்த்து மேனி மேவும்
தழுவல்களில்
காதலே காவலாக!

மீட்டியும், மீட்டும் பார்க்கின்றேன்,
மீளாத சோதர தொடர்புகளென்ற
தொப்பிள் கொடியுறவுகள்
என்
சோலையில்
பூப்பறிக்க கூட பாதம் பதியாரா
என்கின்ற ஏக்க வலிகள்
என்
நெஞ்செரித்த நினைவுகள்
தண்மை பரவி மென்மையாய்
மெருகேற்றிய தடத்தில்
தொடர் பதிவேற்றி
தொழுகை யாக்கின்றது.
அதுவும்
காதலே காவலாக!

படரும் பாதை இனியும்
இனிமையாக இளமை சூட
வாழ்வெழுதிப் போக வகை யாவும்
வாய்ப்பாக அன்றைய காதலே
என்றும்
இளமை ஏற்றிக் கொள்கின்றது.
காதலே காவலாக!


வெள்ளி, 6 டிசம்பர், 2013


மனம் நிறைய பேச எழும் ஆவல்கள்.
ஒரு
ஆதங்கத்தின் கீற்றாக அலைமோதும்
போதெல்லாம் அணைபோடும்.
துணை கூட அதை துய்க்கும்.
ஏணைகளில் என் எண்ணங்கள்
வரட்சியாக வற்றிப் போகின்றது.

ஏதுமே ஆவலற்ற உள்ளங்களால்
சாதுவான ஒரு துணைபோல
சதா காலமும் சஞ்சரிப்பதாய்
பதாகை தூக்கிய தோள்களையும் காணோம்?

ஒரு போக காலம் முடிந்ததுபோல் பின் வாங்கும்
பல உள்ளங்களின் முதுகுப் பார்வையால்---
தெருவோர பாடகனாய் மனம் பின்னும்
உணர்வுகளில் என் உளம் தேயும்.

நோகின்ற உள்ளம்
நோகாத இணைப்புக்கள்
பிணைப்புக்களில்
எந்த ஒரு பிரயோகமும்,
ஏன்


பிரியோசனமும் இல்லாமல்
தேடும் அலை மேல் துரும்பா?

எடுத்த ஒவ்வொரு அடியும்
வடு சுமக்கும்.
ஆதலால் திண்ணம் இன்னமும் துணிவேற்றும்.
சாதலாவதில்லை இந்த சதா நினைவுகள்
எண்ணங்களின் அடிச் சுவடு
பாதை செப்பனிடும்
நாள் வரும வரை
மனம் நிறையவே பேச எழும்
ஆவல்களுடன்-
அடிமைச் சாசனத்தின்
எழுதாத
தீர்ப்புக்ளை
அடியோடு மாற்ற இவன் எடுத்த
ஆயுதங்கள் பல!

அமைதி வழி ஆர்ப்பாட்டம்-
ஆக்கிரமிப்பு வெள்ளையனிடம்
வேகாதென புரிந்த போது
ஆயுதமே ஆயுதமாக
அரண் காட்டினான்.

அமைதிக்கும்
ஆட்சி கவிழ்ப்பிற்க்கும்
உடந்தையானானெ
மடந்தைதனை விரித்த
வெள்ளையனால்
தீவொன்றினுள் தீ ஆனான்.

மானிடத்தை நேசிக்க
கற்றுக் கொள்ள இந்த அகிலத்திற்கே
அறை கூவலை தன் செயலாக்கியதால்
செவிலியனான்.

பெற்ற விருதுகளை விட
கற்ற பாடங்கள் பல உண்டு இவனிடம்
அதில்
சுதந்திரமும்,
மானிடமும் மகுடம் சூட்டும் சுட்டிகள்.

கறுப்பு
வெள்ளை
இனம் யாபேரும் பெற வேண்டியது
சுகந்தமான சுதந்திரமான
அகிலமே அவன் கனவு.

அடக்கப்படும் இனத்திற்கு
இவன் ஒரு வழிகாட்டி!
இடர்படும்போதெல்லாம் தெம்பூட்டும்
நுகர் தடி.

தனதான இன விடிவில் முழுமையான
வெற்றிபெற்றானா?
இல்லையா?
அதற்காகவே வாழ்ந்து காட்டிய
இவன் வரலாறு கூறும் சேதியில்
அவன் வெற்றியின் யதார்த்தம் பிரதிபலிக்கும்.

போய் வருக!
இன விடுதலை பெருஞ் சுடரே!
ஏன் இறந்தான் தேவனென
உலகம் வடிக்கும் இரங்கலில்
உளம திறந்தது போல்
எம்
மண்ணிற்கும் ஒரு விடிவெள்ளியாய்
போய் வருக.
போற்றுதற் கரிய அடலேறே!

புதன், 4 டிசம்பர், 2013

                                    பெருந் தலைவ!



நன்நெறியுடன்
வல் பொறி முறை பூண்ட
வல்வை மைந்தனாய்
வையகம் வந்தாய்.

செல் நெறியுடன் நீ வகுத்த
பல் களங்களும் பல்கி பெருக
பிறவியெடுத்த பெருந் தலைவ
அகவை 59ஆக
புகும் உன் வாழ்வு நிறை
தகமையான அகமையாக
ஆளுமை தந்தவனே!
வாழி நீ
வாழ்த்தேவும் பெரும் பேறு
உனதான பிறப்பால் எனக்கும் தேறியதுகாண்.

வனப்பெழுதும் நீ வைத்த பார்வையின்
தினம் இன்று.
தனை எழுதும் பேறாக்கிய
நினை
நிந்தன் பெருஞ் சுவடியை
காலம் கருக்கொண்டு
ஞாலத்தில் உந்தும் ஒரு ஒளி புலர.

வாழி நீவிர் என
வையகம் வாழ்த்தெழுதும்
போதும் உன் பெருங் கனவை
நனவாக்க நாளை கூடும்
மாவீரக் கனலில் ஒரு
உறுதி கொள்வோம்.

அது!
தமிழர் கனவை மென் மேலும்
அமிழ்தாக்க ஒரு ஆக்கம் பேணும்.
மாறுதல்களில்
நின்
வார்த்தையால் அகவுவேன்.
போராட்ட வடிவம் மாறலாம்
கொண்ட கொள்கைப் போரது மாறதென
மீண்டும்
ஒரு பெருவொலி இவ் வுலகம் நெய்யும்.

"தமிழரது தாகம் தமிழீ(ழுலக)த் தாயகம்"

நினைவுகளின் தடத்தில்
ஒரு பாதம் பணிந்து
நீர்த் திவலைகள் பனித்து
இதயமே ஒரு மெளன ரீங்காரத்தை
ஓசையின்றி இழைத்தது.

மழையும்,அதன் சாரலும்
மெல்ல எம் தேசம் தழுவிய ஒரு
மாலைப் பொழுதில்
ஆலய மணியின் கணீரென்ற
ஒலியிழையில்
தேசத்து மலர்கள் யாவும் சிலிர்த்துப் போயின.
அது ஒரு காலமாக!

இன்று!
மூலைக்கு மூலை பல மூடர்களின் கண்காணிப்பும்
ஈரமாக்கவா இல்லையா எனும் உந்துதலில்
இயற்கையின் இசைவின்மையும்
மனதை நெருட--
நின்றொரு ஒலி கொட்டும் எண்ணம் மனதை உந்த
மனைகள் பலவற்றில் தீபாரதனையுடன் ஒரு மெளனாஞ்சலி
எது நடந்தாலும்-
ஏக்கம் சுமக்கும் நெஞ்சகம்
இயங்கத்தான் சாலவே தடமிடும்.

நடந்தது!
நனவாகவே சகல இதயத்திலும்.
இது
ஆரியர்களின் அடக்கு முறையால்
வீரியம் பெற்றது.
இது
குருதியோடும்,நரம்பினூடும்
இழைந்த சங்கமம்.

தேசத்தின் புதல்வர்களை
எம் நேயத்தோடும்,பாசத்தோடும்
என்றும் நினைவாக்கம் கொள்வோம் எனும்
நனவாக்கத்தின் நல்லிருப்பாய்.
உதிர்ந்து
தொலைந்து கோணாது இந்த
உயிர்ப்புக்களின் ஊடு தளம் எனும்
பயிர்ப்பாய்.


முகிழொன்றாய்
நெகிழ்வகற்றி நெறிகட்டிய விந்தை-இன்று
அகிலமெலாம் அவன் ஆளுமை.
தகித்த வேதனையிலும்,
சகிக்கவே முடியாத சோகத்திலும்
செழிப்பேற்றியது காண் இன்று
தமிழீழ,தமிழக உறவுகள்.

இது!
உலகெலாம் உலவும் உலவு.
கலப்பில்லாத உவப்பு -இது
காலம் காலமாய் எம்
கரிகாலனால்,அவனது
தரிசனத்தால் தாளொற்றிய சிறப்பு.

பொற்காலம் ஒன்றை போரால்-அதன்
பேரால் வேர் கொள வைத்த விந்தையது.
தொலை நோக்காய்
தொக்கிய வீரியம் -அதன்
ஆளுகைகள் இன்று அவன் பேருடன்
மாதவ வீரர்களையும் மையப்படுத்தி
உணர்வுகளை,இதன் தெறிப்புக்களை
அதனூடான விறுமங்களை நம்
ரத்த நாளத்தில் தறையும் விந்தை நாளிது.

அது!
தமிழர்களின் விருத்தம் என்றால்
வடக்கில்,கிழக்கில் ராணுவத்திற்கு கருத்தலாக?
அதன் பெயர்தான் "பிரபாகரன்"
மறு பெயர் மாவீரச் செம்மல்கள்.

விளக்குகளிற்கு விளக்கெதற்கு.
ஒவ்வொரு
இதயக் கூட்டிலும் தேசம் பூராகவும்,
நாளை ஒளிரும் ளெிச்சத்தை என்ன செய்வதாக உத்தே(வே)சம்?
பாவம் பயப் பிம்மங்கள்.
ஒரு தீபம் ஒளிர்ந்தாலே
பளீரென அறையும் தடமே
திடமான மாவீர இருப்பு.
மாதவம் செய்த மாநிலம்.

பூப்பந்தல்
பூம்புனலாய் நாளை ஓடியே ஒரு
புது வீச் செய்யும்.
இது காலத்தின் கட்டளை
கடைசித் தமிழன் இருக்கும் வரை இறவாது.
இது
நீதி மட்டுமல்ல நியதி(தீ)யும்.
இதயத்தால் உங்களின் ஈகங்களில் நனையும்
தேசம் பெரும் கங்கணத்தால் ஒரு கணம் வேயும்.
அது
காலப் பெரு வெள்ளத்திற்கு காத்திரமாய் கூறும்
கூற்றாக -----

உங்கள் உறுதிகள்
உறு தீகளாக உரிமம் சூடும்.
இத் திங்கள் தரும் சேதியது.
எத் திங்களிலும்,சிங்களத்தாலும்
வதைக்கவோ,ஒடுக்கவோ முடியா பெருந்தீயாக
மாவீர இல்லங்கள் ஒளிரட்டும்.
அவர் தம் ஈகையின் பேரால்.

உமது யாகங்களை,
எமது தாகங்களாக கையகப்படுத்தினோம்
எனும் தார்மீக சேதியாக.
தமிழரின் தாகம் தமிழீ(ழுலக)த் தாயகமாக!


தொழவே முடியாத
உங்கள் தொழுவங்களைவிட
எங்களின் ஆழ மனதில்
அமைதியாக உறங்குங்கள்..

அதிதியானாலும்-
ஆழக் கடல் கடந்தே நாம் வாழ்ந்தாலும்-
ஆழமான நேசத்தில்!
உங்களின் சுவாசங்களாக நாமிருப்போம்.
இருக்கின்றோம்.

ஆதலால்தான்-
சில கால குழப்ப,கலக்கங்கள்
ஒருவகை கலகங்களும் கூட -
கலைந்தது.
கலைத்தது உங்களின் தியாகங்களும்
யாகங்களும்.
போகும் பாதை தூரம்தான்.
பெரும் இன்னல்கள்
இடர்கள் சூழ்ந்ததுதான்.

பெரு நெருப்பாற்றை கடந்தவர்கள்-நீங்கள்
சொல்லற்கரிய சாதனையாளர்களாய்
வழி காட்டினீர்கள்-இந்த சுவடே
எமது பாதையாய்
இயங்கு நிலை வேறு.ஆயினும்
இலக்கில் மாற்றமில்லை.

அமைதியாக உறங்குங்கள்-
அதிதியானாலும் அறுதியாய் இலங்குவோம்.
இதுதான் நேற்றைய நாளில்
நேர்த்திய நோற்றல்கள்.
கார்த்திகைப் பூவில்
களங்கமில்லாமல் காப்பாய் இயங்கும் காத்திரர்கள்
காட்டும் கனதியான வீதியில்-
புது விதியெழுதுவோம்.
பூப்போம்.

எம் முற்றத்து முறக் கவிஞனே!
இன்று உனக்கு அகவை ஒன்று கூடும்
அரிய நாளாம்.
வாழ்த்தெழுதி உனை சேவிக்கும்
வரப்பில் எழும் அந்த இனிய பார்வையும்
நெகிழ்வும்
எனக்குள்
எனதான நினைவுப் பள்ளத்தாக்கில்
பெரும் பார,பாராத தழும்புகளாய்.

நிதம் நின் பாக்களையும்
பரவும் வரிகளையும்
மனக் கொண்டவன்.
ஆதலால் தமிழ் நிரவக் களை கொண்டவன்.
இப்படி எனைப்போல் எத்தனை பேரை
உளக் கொண்டவனே!

உலைக்கள வியாசனே!
கலை,பண்பாட்டுக் கழகத்தால்
களத்தையும்,தளத்தையும் மெருகேற்றி
உணர்வேற்றிய உலைக்களமே!

எங்குளாய்?
எப்படியுளாயோ?
யாமறியோம்
எனினும்
ஏடுகளிலும் எழுத்துக்களிலும்
நின் தகமையான தரிசனமாய்
என்றும் எம்முடன் வாழ்வாய்.

வரலாற்றில் நீ ஒரு பெருஞ் சுவடு.
அந்த தொடு தளத்தில்
நின் பேராண்மை.
தமிழுலகம் வாழும் வரை
வரையறையின்றி வாழ்வாய்.
வரும்
இளைய தலைமுறையின்
இடுகையான சுவட்டில் ஓர் பேரொளியாய்.

பெருஞ் சுடரே!
ஈழ அக்னிக் களத்தில்
தாழாமல் வேங்கைகளை சுரந்தவனே!
அரும்பாகிய பலரை
இரும்பாக்கிய
ஈகையே நின்
கருப் பொருளெல்லாம்
ஈழப் பிரவசத்திலென
வசமாகிய
வையகனே!

நிதம் சுவாசித்த தேசக் கந்தகக் காற்றின்
அலை வரிசையாகி,
ஆழப் புதைந்திருந்து ஆழ் மனதில்
என்றும் வல்ல பெருந் தீயாக
தென்றலின் சுகந்தத்துடன்
அழகாக என்றும் அனலாக!
ஈழ நேச நெஞ்சகங்களில்
குடியிருப்பாய்.

நினதான இந்த கம்பீரமும்,
மிடுக்கான,தெளிவான பார்வையும்
திசையெலாம் விசை எழுப்பிய
திடமான வரிகளும் நின் வாசம் பூசும்
இந்த பாரில் என்றும்.

வலைப்பதிவு காப்பகம்