புதன், 11 பிப்ரவரி, 2015

அவி பாகமது!

அஞ்சா நெஞ்சக ஆளுமை ஒரு வகை
துஞ்சாத உள்ளகமும்
துயில் மறந்த தெள்ளகமுமாய்
பயில் நடை தெளித்த
பைந்தமிழர் பாதம் பட்ட இடமிது

இன்று
அறுவடையெலாம்
தறுதலையாக்கி
தண்ட பிரசண்டம் வீசிய
சண்டாளர்களின் காலடியில்
பசுமைகள் அழிந்தன.

அழிந்தனவைகள்
பின்பொரு காலம்
காலப் பரிமாணத்தால்
ஞாலத்தில் பரிவடிவம் பெறுதல்
இயற்கையின் நியதியாம்








சில
பரப்புக்கள் பாரில் விழைந்து
தளிர்த்து
கொழித்து விழித்தனவாய்
பதிவுகளில் பார்த்தேன்.
வரலாறும் அதை வையகப் பரப்பில்
விரித்தே பதித்துள்ளன.

வடிவங்கள் மாறலாம்
படிமானங்களும் பரிமாணம் மாறலாம்.
பசுமையாய் படிந்த விடி வானம் மாறதல்லவா?
சுமைகள்
சுமந்தவர்களின் சுழிகளிலிந்தே
சுழிகள் பிறக்கும்.






இது
வழி வழியாய் வந்த வரம்.
விழிகளை விற்று ஒரு சித்திரம்
கொள்வனவு செய உளம் ஒப்பார்.
வரும்
பழிகளை களைய விழி பார்ப்பார்.
ஒரு
மொழியான பார்வையில்.

அது தமிழர் தம் தாயகமாய்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்