புதன், 18 பிப்ரவரி, 2015

கனவேட்டு கதவாய்!

தினமும் கனவுகளோடு போராடும் மனம்.
எவ்வித ஆக்கபூர்வமும் இல்லாமல்
ஏனிந்த கனவுகள்?
எங்கோ ஒரு எதிர்பார்ப்பு தொக்கி நிற்கிறதோ என்னவோ?
ஆவலற்று உறக்கத்தை தேடும் உடலாய்
ஒவ்வொரு இரவும் கலைகின்றது.

எதிர்பார்ப்புக்கள் சார்ந்ததாகவும் இல்லாமல்
இயலாமையை குறிக்கவும் முடியாமல்
ஏதோதோ பிண்ணணியில்
சம்மந்தமே இல்லா கனவுப் பொதிகள்
பிணங்கிக் கொள்கின்றன.

வயது கூடிப்போனால்
இப்படித்தான்
அடிக்கடி கடிக்குமோ கனவுகள்?
இப்படியும் நினைத்துப் பார்க்கிறேன்.
வேலை அதிகமானால் அசதியினால்
தூக்கம் தானாக வரும்.
நிறைவாக அடித்திருக்கணும் தண்ணி.
இல்லையெனில்
இப்படியும் ஒரு கருத்து உலவ!

வேலைத் தளமோ கனதியானது
பல வேலைகள்.
பழுவற்ற தன்மைகள்
ஆயினும்
அசதி வருவதே இல்லை.
ஆ(ள)ழப் பழகியதால் அனுசரணையானதோ?

எனில்!
கனவுகளும்
கற்பனைகளும்
இல்லாமல் தூங்க
ஏது செய்யலாம்?

உடற்பயிற்சி???!
மனத் தளர்ச்சி வருவதே இல்லை.
மகிழ்சிக்கும் குறைவில்லை.
ஆயின்
ஏனிந்த அயர்ச்சி?
தூக்கக் கலசத்தில்,
கனவுகளின் மலர்ச்சி?

தன் மொழியில் உரையாடி,
தன் உணர்வை பகிர
அருகாமை தரும்
அகம் ஒழுக,
யாருமே அற்ற உலகிது

எனவே!
உ்ளளத்தை,உள்ளதை,
தண்மையாக்க,
தலையவையில் தகம் தேடுகின்றன.
தன்
அக நிறைவு காணவே!

ஏதோ எங்கோ அலைமோதி
தலை கோதுகின்றது.
தகமற்ற கனவுகளாய்.
அனு தினமும் என் மனவேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்