புதன், 25 பிப்ரவரி, 2015

நஞ்சுண்ட காடு ஒரு சிறு விமர்சனம்!

வாசித்தல்
சுவாசித்தல்
லயித்து ரசித்து
அதன்
உணர்வுகளுடன் ஒன்றி
ஒரு
புத்தகத்தை வாசித்தல்.

மனதை ஒரு நிலையாக்கி
கதை சொல்லியின்
உணர்ச்சியை கண்களால் உள் வாங்கி
இதயத்துடன் நெட்டுயிர்த்து
வாசிப்பது இருக்கே-அது
ஒரு சுகானந்த அனுபவம்.

ஒரு படைப்பை உள்வாங்கும்போது
அதனுடன் ஒன்றிணைய
படைப்பாளி பாவிக்கும்
உரையாடல் அல்லது
நிகழ்வுகளை விளக்கும் விதத்தால்
இதயம் விசிறிக் கொள்கின்றது.
ஆற்றுகைக்குட்டபடுத்த இல்லாத வார்த்தையை நாடி
மனம்
நெடிதுயர் கொள்கின்றது.

கதை சொல்லியின் படிமனான எழுத்துக்கள்
காட்சிகளை மனதில் ஒளிப்படமாக பதிவெழுதி
உருகி
உருக் கொள்கின்றது.
இது
படைப்பாளியின் வெற்றி்

நீண்ட இடைவெளியின் பின்
இன்று வாசித்துச் சுவைத்த ஒரு
போரிலக்கியம்
"நஞ்சுண்ட காடு"
இந்த ஈழத்து போராளியான படைப்பாளிக்கு
வாழ்த்தெழுதி அவன் வரிகள்
தந்து சுவையெழுதி அவனுடன்
அளவளாவ ஏற்படும் ஆசை-
அது
இயல்பானது.
 காலம் கனிந்தால் அது வயப்படும்.

நிற்க!
இரவல் வார்த்தைகளை பாவிப்பதில்லை
எனும் பாரிய நிலைப்பாடு.
இதில் எதையும் வரிக்க பின் நிற்கின்றது.
இது
எனதான ஆவல்
என்
ஆதங்கத்தின் படிகள்.

குணா கவியழகா!
எங்கிருக்கின்றாயோ
உன்னிடமிருந்து மேலும்
எதிர்பார்க்கிறேன்.
சுவைபட
வேதனைகளை,
அதில் படர்ந்த சுமைகளை
அதை கையாண்ட நிலைப்பாடுகளை......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்