புதன், 11 மார்ச், 2015

வன்மமெழுது!

நியங்களையும்
எமதான புயங்களையும்
இழந்தபோதும்
இயல்பு நிலை மறக்காத
போராட்ட குணம் வேண்டும்.

அதில்
புற முதுகு காட்டி
நிதம்
புறம் சொல்லும்
அறம் மறந்த அர்ப்பர்களே தற்போது -
என்றுமே அருகிருப்பர்.
காலம் போதித்த போதிகளாக!
மறவாதே!
ஆயினும் அருகாதே
அருகாமை என்றுமே தீயாது.
தீயும் தீய்ந்திட திடமாய் முன் செல்

முன்னிருந்தும்
பின்னிருந்தும்
தன் நிலை மறந்து
சில தடம் பதிப்பார்.
சாலை நீளம் என்பர்
சாதிக்க ஆவது யாதுமிலை என்பர்
கையாலாத சில கபோதிகள்

வளம் கொழித்து
தளமேந்தி தகமிருந்த போதெல்லாம்
எதையும் சகமாக எண்ணா சில
சில்லறைகள்.
தற்போது சிலு சிலவென
கொக்கரிக்கின்றன -
தம்
கைக்கொளாத காலம் கோர்த்து.

உணர்வுகள்
காலம் தந்ததாக ஒரு கலம் சமைக்கும்
சாலையர்களை
சளையாமல்
சலித்து விடு.

ஒலிக்கும் உன் ஒளிக்குள் மறையாமல்
அருகாமல் தோன்றும் இந்த
சோதிகளினுள் சோராமல் சேரவிடு.
நினதான காத்திரமான
வலி சூழ்ந்த கடந்த பாதைகளை.

முள்ளில்தான் கூடு கட்டும் குருவி
தள்ளாமையாயினும் ஒரு தனிக் கூடு அதன் சீவ நாடி.
பறவைக்கே இந்த பார்வையென்றால்
பாரமுள்ள,
ஈரமுள்ள உனக்கு ஒரு வளை
ஈர்த்து எவரும் தாரார்.
எனவே பாரதில்
பார்வையை பலமாக்க ஆவன ஆற்று
தோன்றும் குடிலொன்றான ஓர் கூர்ப்பு விளையும்
இது காலத்தின் கட்டளை.
கலி பல தாங்கிய இதயம் கொண்டோனே
க(ம)லங்காதே காலம் மலரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்