புதன், 18 மார்ச், 2015

விழித்தெழு விளிப்பாய்.

  சிறப்புற ஒரு சனசமூக நிலையம்
எம்
உறவுகளிற்காய் உவந்தளித்தார் பலர்
மறக்க முடியாத ஒரு மானியமது.அதை
புறந்தள்ளி நீவிர் இருந்தால்
அதன் பிறப்பில் ஏதும் பிழையா?

உறவுகளே!
எமதான இனிய உள்ளங்களே!
நினைவில் கொள்க-
பல அரிய முயற்சியால்
பகல் கனவாகாமல் பலித்த இந்த சனசமூக நிலையத்தை
பராமரித்தல் மட்டும் உம் பொறுப்பல்ல
பலமாக பிரயோகித்து அதனூடான பயன் பெற ஆவன செய்க
உமை ஈர்த்தெடு.

அலைபேசியலும்,
வலைபேசியிலும்,
தொல்லை தரும் தொலைக் காட்சி சீரியலிலும்
என்ன பொருள் சுமந்தாய்.
ஆவனவான அரிய சுகமேதும் மொண்டீரோ?
இல்லை
தொலைக்காட்சி தொடரில் நீ
காண்பது முழுக்க
பொறாமை தரும் சூட்சுமமும்
எப்படி பழி பாவம் சுமத்தலாம் எனும்
சமூதாய சீர்கேடுகளையே தானியமாய் விதைத்திருக்கும்
விரிசல் உண்டாக்கும் வியாபம் தவிர வேறென்ன?
புரிந்தாயா?
இல்லை
அருமையான பொழுதுகளை இப்படி
அநியாயமாய் கழித்து எதை சாதிக்க முண்டியடிக்கிறீர்?

பொறுப்பான பல காரியமாற்ற
சனசமூக நிலையம் உனை எதிர்பார்க்கும்
வாசித்தலை அதனூடான சுவாசித்தாலை
தலையான கடனாய் சும,
ஆதலால்
வாழ்க்கையில் பல வசந்தங்களை சுமக்கலாம்.
தாழ்த்தும் எண்ணமும்
தரமமிழந்த தடயமும் உமக்கானதல்ல
எதிர்கால வெளிச்சம் ஒன்று உன்னால் பரவணும்
எனவே காலத்தின் தேவை புரிந்து களமிறங்கு
எங்கள் கரிசனையான நிலையமதில்.

மட்டுமல்ல
எதிர்கால சந்ததிக்காய் அத்திபாரம் பூண்டு
உன்
சாரீர உதவியையும்,
சரீர உதவியையும் எதிர் கொண்டு வரவேற்க
வான் பார்த்து நிற்கும் பாலர் பாடசாலையின்
எதிர்பார்ப்பை சுமந்து நில்.
நிதியும் நின் மதியும் சேரக் கட்டடம் நிமிரும்.
புற முதுகு காட்டாதே .அது
காலத்தின் வெப்பத்தால் உனையே புறம் தள்ளிவிடும்.

சமுதாய கட்டமைப்பை நேசி
ஆதலால் உயர்வாய் அதை சுவாசி
சமூக அரசியலுடன்
உன் சமூக பிரக்ஞைகளை பிரித்தறி
நின் வாசலின் முதன்மை கோலமது.

உண்டதுவும்
உடுத்ததுவும்
காலைக் கடனாய் கழிப்பததிலிலும் அரசியல் உண்டு.
அதை உள்வாங்க ஆர்வமாய் ஈடுபடு.
நாளைய சமூகம் நிந்தன் அரிய செயலால் அகம் சூடட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்