வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

புல வாழ்வின் தல வாழ்வு!

ஆரோக்கியமாய்
அருகிருந்து
அளாவளாவவும்
அருகாமை தரும்
கருத்துக்களை
அபிப்பிராயங்களை
மனம் விட்டு கதைத்தேக
யாருமே இல்லா தனியுலகிது.


வேலைத் தளம்
ஒண்ணும் மோசம் இல்லை.
பொழுது தானாகவே பெரும்
கலாய்ப்புக்களுடன் போயே போய் விடும்.

வேலை முடித்து
மனையேகினால்
சிறையில் சிறை வைத்ததாய்
சித்தம் தினம் அகவும்.

ஆம்!
இது நியமானது.
மறுப்பதற்கோ,
மறைப்பதற்கோ ஏதும் இல்லை.

யாருடன்
எதை அளவளாவுவது?
இத் தளமும் இல்லையெனில்
சித்தம் செத்தே போய்
ஒரு பிரம்மையில் லயித்திருக்கும்.
ஒரு
அழகியலான பொழுது போக்கு உண்டா?
அட!
நால்வருடன் இல்லை அறுவருடன் சேர்ந்து
ஒரு நாலு சீட்டு விளையாட
கரம் போட்---
இல்லை
சதுரங்கம் விளையாட,

அட போய்யா!
ஒரு தாயக் கட்டை விளையாட கூட
யாருமே அற்ற தனியுலகிது.
கோடை காலத்திலாவது
துடுப்பெடுத்தாட,
கரப்பந்தாட
எவருமே அற்ற பொழுது போக்கற்ற லயமிது.

சரி
ஒரு நடை நடந்து நீச்சலடித்து வர
எவ்வித கூட்டும் இல்லா
புலம் பொருதா வாழ்விது.
வார விடுமுறையில் கூட
யாருடனும் கூடி பொழுதேத்த வழியற்ற நிலை.
நாலு பேரை சந்திப்பதானால்
எங்காவது ஒரு வைபோக நிகழ்வு தேவை.
அங்க மட்டும் என்ன வாழுதாம்?
கடந்த கால இரை மீட்பு.
அல்லது வேலைத்தள அரட்டை
அத்துடன் போதையேற்றல்

சீ---சீ
என போய்விடும் வக்கற்ற தகமையால்.
ஒரு ஐக்கியமான
அக மகிழ்வு சூடும்
ஒரு உணர்வு பூர்வமான உரையாடல்
ம் --ம்
கிடையவே கிடையாது.

ஊரைப் பற்றி
உவப்பைப் பற்றி வாய் கிழிய அலட்டும் சமூகம்
நிதி பற்றியோ .தம்
நீதி பற்றியோ அறவே மூச்சு விடாது.
போகட்டும்.
நற்பொழுது கழிய நல்ல விடயமாவது ???--
புல வாழ்வு
புலர் வாழ்வல்ல.

ஒரு சிறையில் சுதந்திரமாக ஏதோ அலைபாய
அல்லல்படுகிறோம்.
சில இழப்புக்களால் தான்
சில வரவுகளை நுகரமுடியும்.

ஆனால்
எந்த ஒரு வரவுக்கும் ஈடில்லை
இவ் வகை இழப்புக்கள்.
இது நியம்!
ஆயினும் மாற்று வழி ஏதும் இல்லை.
தேற்றம் கூட இனி மாற்றத்திற்கு உட்பட்டதல்ல.
ஊட்டமாகவே ஊறி விட்டது.

புல வாழ்வு.
இதில் ஏக்கங்கள்
எத் தகு தாக்கத்தையும் மொள்ளாது.
ஏனெனில்
நாம்
ஓர் புலர் வாழ் சமூகம்.
இந்த யுகம் தனியுலகம்.
இந்த ஏரியாவுக்குள் நில வாழ் சமூகம் கருத்தெறிவது.
நம் கருக் கலைப்புபோல--
எனினும் நான் கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
எல்லையே இல்லாமல்!

முற்றுப் புள்ளி இந்த இடுகைக்கு இல்லை.
ஆயினும்
முற்றுப் பெறாமலே முடிக்கு முன்
எம் தாயகக் புல வாழ் கவிஞனின்
நாலு வரியுடன்---

இது
சதந்திர தாகம் எனும் இறுவெட்டில்
பதிவாகி பலர் செவிகளில் ரீங்காரம் கொட்டி
மெட்டுக் கட்டிய வரிகள்.

"நரை வீழ்ந்து நடை தளர்ந்து போச்சே!
இந்த
தொலை தூர வாழ்க்கை திசை மாறிப் போச்சே!
மண் வாசம் தேடி மனம் மகிழுதே(அலையுதே)
மலரும் நினைவுகள் நெஞ்சை வந்து நெருடுதே.!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்