ஞாயிறு, 24 மார்ச், 2019

முக நாண்


முக நாண்

கொண்டு வந்து கொண்டு வந்து
கசக்கிறாங்கள் பெண்ணை
இது உண்மை இது உண்மை....
கோவைப்பழம் நீயென்று
மயக்கிறாங்கள் பெண்ணை உன்னை

செல்போனின் மயக்கத்தில்
புரிவதில்லை உண்மை பெண்ணே..நீ
உன் போனில் உலகத்தை மறப்பதேனோ பெண்ணே
இது உண்மைஅதன் தன்மை


கண்கவர கவர்ச்சியாக உதிர்ப்பானே வார்த்தை..நீ
வகிடெடுக்க புரியாமல் முழுங்குவதே மடமை
பெண் கவர பார்ப்பதே முகநூலில் தன்மை..புரிந்தும்
தெரியா நட்பை தேடி ஓடுவதே வீண்மை.

காதல் ஒன்றும் கவர்சியாலே உதிப்பதில்லை மகிமை..இந்த
காமுகர்கள் நட்பை இனம் காட்டுவதே இல்லை அவர்
காத தூரம் போனாலும் காத்திருப்பார் உன்னை
இந்த கயவர்கள் மூடி முகம் மறைப்பதுவே உண்மை

வாலிபத்தில் நின் வாலைப் பருவத்தை சிதைக்கவே வேணும்
அந்த கட்டாரி கூட்டத்தை நீ புரியவேண்டும் பெண்ணே.
கல்வி கற்கும் காலத்தில் கலவிக்காக அலையும் ..இந்த
கருவி கொண்டு உனை அணைக்கும் நித்தம் பல பெயரில்

துகிலுரியப் பார்த்திருப்பான் ஒரு கால வேளை.அவன்
துணிவெல்லாம் நின் மெளனப் பார்வை...
துணியின்றி துணிவாக கேட்டிருப்பான் ஒரு பாட்டில்..நீ
துணையின்றி துடிப்பாக கொடுத்திருப்பாய் ஒரு துணிவில்...

இங்கேதான் மாட்டுப்பட்டாய் எதிர் கால பணிவில்..நீ
இனி என்ன ஆவதென்று அவலப்படுவாய் வாழ்வில்..
மானமெல்லாம் போனதெல்லாம் உன் மதியற்ற மாண்பால்..இனி
மண்டியிட்டு.மாண்டு போய் மரணிப்பதுவா நியதி.

நித்தம் அதை கொடுத்தாய் நிலை தடுமாறி போனாய்
நெற்றேத்தி போவதாய் உன்னை விலை கேட்பான்
ஆறறிவு சோலையினால் அறிந்து கொண்டு விலகு..இந்த
ஆரணியில் சோரம் போனோர் ஓரணியில் நீயும்

உருவிக் கொண்டு போகவேண்டும் உனதான நட்பை
எந்த அருவியாக வந்தாலும் அழைக்காதே அவனை
சித்தம் ஓங்கி காதலிப்பவன் உன் சிரிப்பொலியே கேட்பான்
பித்தம் தலைக்கேறுபவனே பிறந்த மேனி படங்கள் கேட்பான்

சொல்லாமல் உனை உணர்ந்து மேலேறிச் செல்லு...நல்ல
வல்ல பல வழிகள் உண்டு வாஞ்சையுடன் உணர்வாய்
கல்வி தானே நல்கும் ஒரு கட்டழகு வாழ்வு .இந்த
கருமாதி மாயைகளை புறந் தள்ளி நீ வாழு.. 

அவனில்லா அவனியிது ஆபத்துக்கள் அதிகம்.
அறிந்து நீ வாழ்வெழுது அவனது ஆழ் அரவணைப்பில்
எடுத்துரைத்துப் போய் விட்டான் எழலாக உலகில்
அந்த அலகில் நீ வனப்பெழுது ஆனந்தமாய் அகிலில்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்