வியாழன், 21 மார்ச், 2019

மகிழ்ச்சி


                                                                        மகிழ்ச்சி

விடியும் காலை பொழுதில் கேட்கும்
சேவல் குரலில் மகிழ்ச்சி
புள்ளினங்கள் பூவில் தேனை
அருந்தும் போது மகிழ்ச்சி
கிழக்கு வானில் கதிரவன் வீசும்
கதிரில் குளிர்ச்சி.இந்த
குதூகலங்கள் என் மனதில்
ஏற்றுகின்றதே மகிழ்ச்சி


அம்மா என்று ஆவினங்கள்
அழைப்பதில் ஒரு பாவம்
அந்த பாவனையில் கன்று துள்ளி
ஓடும் போது தாளம்
மடியில் முட்டி பாலை
குடிப்தில் உண்டு மகிழ்ச்சி
அந்த காட்சி என்னில் ஏற்றுகின்றதே கிளர்ச்சி.

காலை எழுந்து வாசல் தெளித்து
போடும் கோலம் அழகு
அதில் பூக்கள் வைத்து வர்ணம் இட்டால்
ஏற்படுமே மகிழ்ச்சி.

பாடாசாலை நோக்கி பாலகர்கள் போவது ஒரு அழகு
அந்த அழகை நோக்கும் என் மனதில்
பொங்கி வரும் மகிழ்ச்சி..
சுற்றாடலை அழகு பேணி வைத்திருத்தல் மகிழ்ச்சி
அதை எல்லோருமே சேர்ந்து செய்தால் பூபாளமே மகிழ்ச்சி

வீணாக நேரம் போக்கி வாழ்வதல்ல வாழ்வு.நம்
பெற்றோருக்கும் உதவி செய்து வாழ்வதுவே மகிழ்ச்சி
சுற்றத்தோடும் உறவுகளோடும் உண்மை பேசி
வாழ்வதுவே வாழ்க்கை அந்த வாழ்வினிலே
வசப்படுமே உண்மையான மகிழ்ச்சி.

மகிழ்விருந்தால் வசப்படுமே வையகத்தில் பிடிப்பு.
அந்த பிரியத்திலே ஒற்றுமையாய் சேருவமே ஒன்றாய்
ஒன்று சேர்ந்து வாழ்வதுவே வாழ்வினிலே இன்பம்.இதை
புரிந்து கொண்டு சிறகடிப்போம் சிறுவர்கள் நாங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்