வியாழன், 21 மார்ச், 2019

சமூகமும்.சமூகநாடியும். 16.03.2019


சமூகமும்.சமூகநாடியும். 16.03.2019

எமது ஊரகம் ஒரு சனசமூக நிலையத்தை பல வருடங்களாக நாடோடித்தனமாக நிலையில்லா இடங்களில் அலைந்து காலப் போக்கில் ஊரவர்களின் அதி சிரத்தை காரணமாக ஒரு நிலையான இடத்தில் நிமிர்வெழுதிக் கொண்டது.

எத்தனை ஆரவாரமான திறப்பு விழா?ஊர்மக்கள் அன்றுதான் இவ்வளவு பேர் கலந்து கொண்டதாக ஊரகம் மகிழ்ச்சி பேரலையில் திண்டாடியது.ஆச்சு அதற்கான முடிந்த வரையான கட்டுமானப் பணிகளால் எல்லாமே சிறப்பாச்சு.

காலம் மீண்டும் சில தேவைகளை கருத்தில் எடுக்கும்.அதன் உத்தம தேவை கருதி நிலம் நல்கி கட்டுமானப் பணிக்கு தன் சேவைகளால் உரம் கொடுத்தான் ஒருவன்.ஆம் அது எமது ஊரகத்திற்கான அரும்புகள் முன்பள்ளி எனும் பெயருடன் ஆரவாரமாக ஆரம்பமாச்சு.அங்கே சனசமூக நிலையதிறப்பு விழாவின்போது எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஒரு அதி தேவையாக சமூக நாடி எனும் எமதூரக மக்களின் கைவண்ணத்தில் அவர் தம் ஆர்வத்தில் அவர்களின் அபிலாசைகளையும்.எதிர் பார்ப்புக்ளையும்.உள் கிடக்கைகளையும் வெளிக் கொண்டுவர இந்த சமூக நாடி புத்தகத்தை ஒரு தொட ர்பூடகமாக எதிர் பார்த்தோம்.

இந்த இரண்டு கட்டுமானங்களின் ஆண்டு விழாவை நாம் என்றுமே சித்திரை 16ல் கொண்டாடுவதாக ஒரு தீர்மானம் அதுவே நடைமுறையாக.இந்த கணத்தில் ஊரவர்களின் திறன்களை அதாவது.கலை மேல் உள்ள ஆர்வத்தையும்.அவர் தம் குரல் வளங்களையும்.நடனங்களின் நர்த்தனங்களின் அலைமோதிப்பையும் எல்லாமே எமது முன்பள்ளியில் அரங்கத்தில் அரங்கேற்ற முடிந்த வரை ஆவன செய்துள்ளோம்.ஆனால் ஆங்கு இப்படியான நிகழ்ச்சிகளை ஆர்வமாக மேடையேற்ற எமதூரக மக்கள் பின் நிற்பதுவும்.ஆர்வங்களகற்றி புற முதுகு காட்டுவதும் ஏன் என்பதே புரியாத புதிராக.....

அதைப் போல வருடா வருடம் வெளியிட தீர்மானித்த சமூகநாடி எனும் புத்தகத்திற்கு ஆக்கங்களையோ அன்றி ஓவியங்களையோ அன்றி தன்னாலான கவிதை கட்டுரைகள் என பன் முகம் தாங்கி எந்த ஒரு படைப்பையும் வேளைக்கே சனசமூக நிலைய பொறுப்பாளர்களிடம் கொடுத்து தங்களின் தார்மூக பொறுப்புணர்வை மக்கள் வெளியிடத் தயங்குவதன் காரணங்கள் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

ஊ ர்மக்களின் தாகங்களை அதாவது இளையோர் முதற் கொண்டு முதியோர் வரை சகலரிடமிருந்தும் நாம் எதிர்பார்க்கும் இத்தகைய ஆக்ஙகளின் செயற்பாடுகள் வெகுவாக பின்னடைந்திருப்தை எமது ஊரக மக்கள் தங்களின் கருத்தில் எடுப்பார்களா? வருடா வருடம் இந்த மக்களின் ஆக்கு திறனை வெளிப்படுத்த திரு வாசன் அவர்கள் செலுத்தும் பணமோ அன்றி இந்த ஆக்கத்திற்காக திரு சங்கர்.மற்றும் தலைவர் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாவவதை எந்த முகம் கொண்டு பதிவேற்றுவது?

வருடா வரும் தீபாவளி.வருட புத்தாண்டு.ஆலய திருவிழா இதற்கொலாம் முன்னேற்பாடாக ஆயத்தம் செய்யும் மக்கள் இதுவும் ஆண்டு தோறும் இத்தனையாம் திகதி நடைபெறும் எனும் யதார்த்தத்தை மனக் கொள்ளாமல் இருப்பது ஏன்?

இந்த இரு கட்டுமானங்களிற்கும் ஊரக மக்களும்.புலவாழ் மக்களும் உவந்தளித்த நிதியின் ஆக்கு திறன்களை மழுங்கடித்தல் எத்தகைய முரண் என்பதை ஊரவர்கள் உணருவார்களா?.எத்தனை இழுபறிகள். இடைஞ்சல்கள்.தடங்கல்கள் யாபேற்றிற்கும் முகம் கொடுத்து தளராமல் கருவாக்கி உருவாக்கி தளம் கண்ட எம் இரு கட்டுமானங்களின் களங்களை பலப்படுத்த இந்த தும்பளை மேற்கு வாழ் மக்கள் தாமாகவே முன் வரவேண்டும் அஃதன்றேல் கால சுழற்சியில் எமது இந்த சமூக விழிமியங்களை தாங்கி செல்லும் ஊரக தேரான சனசமூக நிலையமும்.அரும்புகள் முன்பள்ளியும் தட ம் புரண்டு அதன் நோக்கம் அறவே அற்று மீண்டும் பழைய நிரைக்கே ஆதரிப்போர் அற்று போய்விட நாம் எங்ஙனம் அனுமதிக்க முடியும்?

கற்றோரும்.க ல்வியில் கரை கண்டோரும்.ஓவியத்தில்.நாட்டியத்தில்.பாட்டில் இசை அமைப்பில் .சோதிடத்தில் .ஆலய நிர்வாகத்தில் என சகல பாதைகளிலும் கரை புரளாமல் நிமிர் வெழுதிக் கொண்டோரை தாங்கி நிற்கும் திமிர் கொண்டது எங்களது ஊர் எனும் பெருமிதம் மட்டும் போதுமா?

தாம் கற்றதை மற்றோர்க்கும் புகுத்தி .தான் அறிந்த நல்ல.தீய நடப்புக்களை தம் மக்களிற்கு அறிவால் ஊட்டி ஆழ விதை கொண்ட எமது ஊரிலா இன்று எழுத்திற்கும்.கலை நிகழ்விற்கும் பஞ்சம்.வெட்கம்.வெட்கம்.இதை எழுதும் எனக்கே வெட்கமாக உள்ளது.ஆயின் புலம் பெயராமல் புலன்களோடு ஊரில் ஒன்றித்து வாழும் எம் மக்களிற்கு எங்கே போனது இந்த தார்மீக புத்தி.இதை செயலால் காட்டி எமது ஊரக சனசமூகநிலையத்தை வெற்றிகரமாக நகர்த்தி செல்லும் தார்மீக பொறுப்பை யார் பறித்தார்??

ஊனக கண்களை உயரே துக்கி எறிந்து விட்டு உங்கள் மானக கண்களை அகல திறந்து உங்களின் செயற்கரிய பங்களிப்பிற்காக காத்துக் கிடக்கும் எங்கள் ஊரக இரு கட்டுமானங்களையும் உங்களின் கைலாகு கொடுத்து அதை தூக்கி சிறப்பாக ஊரக வலம் வர ஒத்தாசை கேட்டு உங்களின் கலம் வருகின்றோம்.ஆவன செய்வீர்கள் எனும் அசையா நம்பிக்கைகளுடன்.

வெறும் கெளரவத்திற்காகவும்.அந்தஸ்த்திற்காவும் இங்கே கட்டுமானங்கள் உயர எழுப்படவில்லை.அந்த ஊரில் இருக்கு இந்த ஊரில் இருக்கு எனும் பேதமையால் இவை உருவாக்கப்படவில்லை.அதி தேவையின் மூலங்களை கருத்திற் கொண்டு உங்களின் பங்களிப்புக்களுடன் ஆனந்தமாக.அபிலாசைகளின் உறுதுணைகள் மோலோங்க ஆர்வமாக கட்டப்பட்தே இந்த கட்டுமானங்கள்.மட்டுமல்ல இதன் மூலம் நாம் மேலை சொன்ன சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வரும் எம் இளைய சந்திதிகளிற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு அடுத்த தலைமுறையின் கைகளில் ஆரோக்கியாமாக கையளிக்க வேண்டி, எங்களின் உங்களின் காலக் கடன்களை உங்கள் அகத்தே சிரத்தையாக பதிவெழுதி ஆக்க பூர்வமாக செயல்பட அனைவரையும் திரண்டு ஒத்துழைத்து இந்த ஆரோக்கிய தேரை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்திக் கொள்ள எமது உள்ளக ஊரக மக்களே அணிதிரண்டு செயற்பட வாருங்கள்.
இந்த அருமையான கால கட்டத்தை நழுவ விடாமல் தொடர்ந்தும் முழு மூச்சுடன் இயங்கி எம் கெளரவத்தையும் .உமது ஊரகத்தின் சாலச் சிறப்பான பண்பையும் காப்போம் எனும் உறுதியுடன் உவந்து முகம் தெளிந்து வாருங்கள்,உம் உழைப்பில் இந்த கட்டுமானங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி முக.மலர்ச்சி கொள்வோமாக.அந்த ஒளியில் எமது வாழ்வு புத்தொளி வீசி பிரகாசிக்கட்டும்.
வருங்கால இளைய சந்ததிகளின் வரப்பிரசாதம் இதுவென சங்கே முழங்கு.
நன்றி ஊரகனாக
சு.குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்