வியாழன், 21 மார்ச், 2019

சமூகத்தை காதல் செய் 15,03,2019



சமூகத்தை காதல் செய் 15,03,2019

இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் தோன்றி இற்றைக்கு மில்லியன் ஆண்டுகள் புரண்டு ஓடின.இந்த வாழ்வோட்டத்தில் பல பரிமாணங்கள் புதிய பரிணாமங்கள் பெற்று பண்பாடு உருவாகியது அதை ஒரு வகையில் மனித நாகரீகம் என்றும் பண்பென்றும் வகுத்து உலக வாழ் மனித உயிரினங்கள் கூர்ப்படைந்து கொண்டன.

விலங்குகளும்.பறவைகளும் மேலும் ஊர்வனவும் எல்லாமே ஒரு சமூக கூட்டங்களாகவே வாழ்வெழுதிக்கொண்டன.இப்படியே இன்றும் வாழ்கின்றன.இவைகள் சொல்லாமல் கற்றுத் தரும் பாடமே சமூகத்துடன் ஒன்றித்து வாழ்தல் என்றால் மிகையாகாது.எந்த ஒரு உயிரினமும் தனித்து வாழ்தல் என்பது சாத்தியமற்ற ஒன்றே.

மற்ற உயிரினங்களை விட்டு நான் இப்போது தொட்டழுதிச் செல்ல விழைவது மனித சமூகத்தின் வாழ்வியலில் சமூகத்தின் மாண்பான பண்புபற்றியே ஆகும்.அது சமூகம் சார்ந்த ஒத்துழைப்பாலும்.பொது அமைப்பு சார்ந்த செயற்பாடுகளாலும் மட்டுமே உயிர்பெழுதும் தன்மை கொண்டவைகளாக மிளிரும்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் சகோதரனையோ அன்றி சகோதரியையோ மேலும் பெற்றோர்கள்.உற்றார் உறவினர்களையோ என்றுமே சார்ந்துதான் தன் வாழ்வின் ஆரம்பங்களை சுவையூட்டிக் கொண்டு வளர்கின்றார்.அஃதன்றேல் அவர் தம் வாழ்வில் அரும்புப் பருவமே அழிவடைந்து விடும்.இப்படி நாளாந்த வாழ்வில் குடும்ப அங்கத்தவர்களினதும்.சமூகத்தினதும் அரவணைப்பில் வளரும் குழந்தையானது திடகாத்திரமாகவும்.தன்நம்பிக்கை சார்ந்த்தாகவும் வளரும்.அக்குழந்தைக்கு அவர் வளரும் போதே சமூக விழுமியங்களான பண்பாடும்.வாழ்வியல் சீரும் ஊட்டப்படும்.இப்படி வளரும் குழந்தைகள் அவர் தம் பிற்கால வாழ்வில் தடம் புரள்வதும் சமூக காதல் அற்ற ஒரு நிலைப்பாடே ஆகும்.

இதற்கு சான்றாக இருப்பது முதலில் பெற்றோரும்,பிற்பாடு சமூகமும்,அவர் தம் நட்புக்ளும் ஆகும் என்றால் மிகையாகாது.முதலில் பெற்றோர்களை பார்ப்போம்.இன்றைய கால கட்டத்தில் ஒரு பிள்ளையின் எதிர்காலம் எப்படியும் இது அன்று தொட்டே சகல குடும்பங்களிலும் நிலவும் ஒரு அர்த்தமற்று நிலைப்பாடு ஆகும்.அதாவது தன் பிள்ளை ஒரு மருத்துவராக .பொறியியலாளராக மட்டுமே அல்லது ஒரு ஆசிரியராக வரவேண்டும் என ஆழமாக எதிர்பரப்பதாகும்,


இங்கு எந்த பெற்றோருமே தன் பிள்ளையின் ஆளுமையை.அவர் தம் விருப்பத்தை பார்ப்பதும் இல்லை.ஆயின் அங்கீகரிப்பதும் இல்லை.இது முதல் தவறு.பெருந் தவறு.நன்றாக யோசித்துப் பாருங்கள் இந்த உலகம் ஒரு மருத்துவராலும்.ஒரு பொறியியலாளராலும் அல்லது ஒரு ஆசிரியனாலும் மட்டுமா இயங்குவது.அன்றி இப்படியானொரு நிலைப்பாட்டில் தன் பிள்ளைகள் இருந்தால் மட்டுமே வாழ்வு சீர் பெறும் என நினைப்பது அபத்தமே அன்றி வேறில்லை.

இப்போது நாம் 21ம் நூற்றாண்டில் மிக பெரிய தொழில் நுட்ப கணணி உலகில் காலூன்றி இற்றைக்கு சுமார் 25வருட மாகின்றது.அதாவது இந்த தொழில் நுட்பத்தை நாம் உபயோகிப்பதில் இருந்து புரிந்து கொள்ளணும்.அதாவது கடந்த கால சந்ததியின் பெற்றோர்களின் களிவிரக்கம் முடிந்து புதிய சந்ததிகளின் பெற்றோர்களாலேயே தற்போது உலகம் இயங்குகின்றது.நான் இங்கு உலகம் என் குறியிட்டது நிச்சயமாக எமது சமூகத்தை மட்டுமே என கருத்தில் கொள்க!

ஆனால் இவர்களும் பழைய குருடி கதவை திறவடி எனும் நிலைப்பாட்டில் தங்கள் குழந்தைகளிற்கு அதையே ஊட்டி வளர்ப்பதில் இருந்த மாற்றுச் சிந்தனைகளை உருவாக்க வேண்டும்,இந்த கட்டுரையின் நோக்கமே அதுதான்.ஆயினும் இந்த மாற்றங்கள் சற்று சீரடைந்து இருப்பது போல உள்ளது.இன்றைய கால கட்டத்தில் அது பெரியோர் முதல் சிறு குழந்தை வரை இந்த தொழில் நுட்பம் ஒரு விளையாட்டு களமாக.முகநூல் தளமாக விரிவடைந்து நிற்கின்றது.ஆனால் இந்த தொழில் நுட்பத்தில் சமூக வலைத்தளத்தையே இங்கு நான்முன்னுதாரணமாக கொண்டு தொடரவிழைகின்றேன் இதுவே காலப் பொருத்தாமனதாகும்.

பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் அவர்தம் கையில் உள்ள சிமாட் தொலைபேசியின் அவர் தம் உபயோகிப்புக்களை கருத்தில் கொண்டு அதை அவதானிப்பதில் அவ்வளவு ஈர்வம் காட்டுவதாக தெரியவில்லை.இங்குதான் சமூகப் பிறழ்வுகளின் ஆரம்பமே.

இன்றைய உலகில் பிள்ளைகளின் கையில் இந்த தொலைத்தொடர்பு சாதனம் தேவையா என கேட்டால் ஆம் என்றே சிலபெற்றோர்கள் கருதுகிறார்கள்,அதற்கு பல காரணங்களையும் வகுத்துக் கொள்கிறார்கள்.இதுவே ஒரு வயது வந்தவரிடம் இருக்கும் போதும் அதே காரணம்.நிச்சயமாக இந்த சாதனம் தேவைதான் ஆனால் அதை எதற்கு உபயோகிக்கிறோம் என்பதில் ஆரம்பிக்கிறது சமூக அக்கறையின்மை.

முகநூலில் முகம் தெரியா நட்பை பேணுதல்,அவர்கட்கு போட்டோ அனுப்புதல் அவரிடம் இருந்து வரும் ஆபாச காட்சிகளில் ஈடுபாடு கொள்ளல்.பின் அந்தரங்க போட்டோக்களை பரிமாறுதல் என ஒரு வரையறையின்றி தற்போது உள்ள இளஞ் சந்ததிகள் ஒரு விளையாட்டாக ஆரம்பித்து பின் பெரும் வினைகளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்,

சமீபத்திய உதாரணமாக இந்தியாவில் பொள்ளாச்சி கிராமத்தில் அரங்கேறிய அசிங்கத்தை கோடிட்டு காட்டலாம். இலங்கையில் சகல இடங்களிலும் இப்படியான நிலைப்பாடுகள் உலவுகின்றது.எனவே இளைய சந்திகள் இப்படியான தனக்கு தேவையற்ற.மேலும் பொறுப்பற்ற செயலை விட்டு பொதுக் கட்டுமான செயற்பாட்டிற்குள் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.ஒரு சமூக வலைத்தளத்தின் நோக்கம் என்பது கடல்போல விரிவடைந்துள்ளது.ஆனால் சிலரின் அப்பட்டமான சமூக பிறழ் நிலைக்குள் ஊடுருவுவதால் ஏற்படும் அபத்தத்தை என்ன வென்று எடுத்துரைக்க.ஆயினும் காலத் தேவை கருதி சிறு குறிப்பாக ......

பட்டினத்தார் சொன்னதுபோல பிறந்த இடத்தையே நாடுதடா பேதை மனம் பால் கறந்த இடத்தையே நாடுதடா பாவியோடை கண்கள் என்பதாக பலரின் சித்து விளையாட்டுக்களால் சமூகத்தின் இளைய தலைமுறைகள் வழி தடுமாறி செல்கின்றார்கள்.முதலில் ஒன்றை காத்திரமாக உணரணும்.இல்லறம் என்றால் என்ன?தாம்பத்திய உறவென்றால் என்ன வென்ற விழிப்புணர்வுகளை பெற்றோர் முதல் ஆசிரியர்கள் நட்பு வட்டாரங்களில் தெளிவு பிறக்க வைக்கணும்.இதை திறந்த மனத்தோடு விளக்கம் சொன்னால் அல்லது அறிந்து கொண்டால் இப்படியாக சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நெருடிப்போக வழி இல்லாமல் போகும் என்பதல்ல ஆயினும் மன ஒழுக்கம் என்பதை ஊட்டலாம்.....

எனவே செக்ஸ் எனபது தவறான போக்கும் அல்ல இது இல்லையேல் மக்கள் பெருக்கமோ அன்றி சமுதாயமோ உருவாக வழியே இல்லை.ஆனால் அதை யார் எங்கே எப்போது கடைப்பிடிக்கணும் எனும் தெளிவு தேவை.நாங்கள் இதை எப்போதுமே ஒரு தவறானதாக ஒழித்து வைத்து உரையாடுதல் கூட இப்படியான தவறிற்கு காரணமாகின்றது.என் வரையில் பாலியல் பற்றிய விளக்கங்களை தெளிவுகளையும் பாடசாலையில் இருந்து ஆரம்பக் கல்வியில் புகுத்தினால் இந்த இழி நிலை தோன்றாது.

மற்றது குடும்ப உறவுகளின் தாற்பாரியத்தை சரியான திசையில் விளங்கக் கூடியதாக இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தலும் அவசியமே.தாய்.தங்கை.தமக்கை .அண்ணன்.தம்பி அந்த உறவு முறைகளின் வீச்சும் அவர்தம் குடும்ப வாழ்வு முறையும்.மைத்துனி மச்சான்.மாமி.அத்தை இந்த உறவுகளின் வீரியத்தையும் அதனால் ஆகும் சமுதாய விழுமியங்களையும் சரியான திசையில் உணர்த்தணும்.இங்கே வெளிப்படையாக திறந்த மனதுடன் இருத்தல் அவசியம்.ஒரு தவறை ஒருத்தன் செய்தால் அதன் தார்மீக நிலைப்பாட்டை கருத்தில் எடுத்து நல் வழி காட்டினால் அவன் திருந்தி வாழும் வகை தென்படும்.அதை விட்டு கேலிப் பேச்சுக்களாலும்.கிண்டலாலும் அதை மிகைப்படுத்தினால் அவன் செய்த தப்பும் வேறொரு பரிணாமமாக வெளிப்படும்.
சமுதாய உறுப்பினர்களும் தங்களது தாம்பத்திய உறவை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.

என் பொண்டாட்டிதானே.என் மச்சாள்தானே என விடும் கால.நேர.இடங்கள் அற்ற தொடுகைக்கள் கூட இப்படியான திசைமாற்றத்திற்குள் ஒருவனையோ அன்றி ஒருத்தியையோ திடம்.தடம் மாற வைத்துவிடும் என்பதை சுற்றமும் அறிந்து அதன்படி ஒழுகுதல் வேண்டும்.

விலங்கினங்கள் கூட கலவி என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே முடித்துக் கொள்ளும்.அவைகளை ஐந்தறிவு பிராணிகள் என நையாண்டி செய்யும் மனித இனமோ கலவிக்கு எவ்வித கால.நேரங்களை வகுப்பதில்லை.எப்போதடா சந்தர்ப்பம் வரும் என காத்துக் கொண்டிருக்கும் சில காளையர்கள் எனும் காவாலிகள் புனை பெயரில் இந்த சமூக வலைத்தளத்தில் ஊடுருவி பெண் வேட்டைகள் நாடாத்துகின்றார்கள்.இதன் தாற்பாரியத்தை உணர்ந்து கொள்ளும் நிலையில் சில பருவ மகளிரோ அன்றி பருவ மகன்களோ இல்லை என்பதே யதார்த்தம்.அப்படியான சிலருக்கு அறிவுரை சொன்னாலும் ஏற்கும் அல்லது ஒத்துக் கொள்ளும் பக்குவத்தை இந்த காளைப்பருவங்கள் ஏற்பதில்லை என்பது துரதிருஸடமான நிலைப்பாடாகும்.

நிற்க!.
அன்றைய வாழ்நாட்களை நமது முற் சந்ததியினர் எப்படி கழித்தார்கள்?எப்படியான சமூக பழக்கங்களை அல்லது கலாச்சாரங்களை பின்பற்றினார்கள் என்பதில் எவர்க்கும் ஈடுபாடு இல்லை எனபதுவும் காலச் சுழற்சியின் மாறுதலே.அத்துடன் அன்றைய நாட்களில் அவர்களின்... ஏன் இதை பிரதிபண்ணும் எங்களின் பொழுதுபோக்குகள் பின்வரும் இப்படியான விளையாட்டுக்களில் கழிந்தன.இப்படியான விளையாட்டுக்ளால் நாம் எமது உறவுகளின் சமுதாயத்தின் விழிமியங்களை பேணிய கையோடு நற்பெயர்களையும் சமுதாயத்தின் ஊடாக பெற்றுக் கொண்டோம்.இதனால் உடலும் மனமும் பெரும் வைராக்கியம் பெற்றுக் கொண்டன.மனச் சஞ்சலம் இல்லாத தற்போதைய காலித்தனமான எண்ணங்கள் ஊடுருவாத ஒருவிதமன இயல்பான பாதைகள் இருந்தன.

தற்போதைய இளைய சந்ததிகளில் எத்தனை பேர்க்கு பின் வரும் விளையாட்டுக்கள் தெரியும் அதன் மூல்ம் ஏற்படும் தேகப் பயிற்சிகளின் விழைவுகள்..மனித வள ஒற்றுமைகள் விரியும்என.... ஏன் பெற்றோர்களிற்கு தெரியுமா?

கடந்த கால விளையாட்டுக்கள்.கிளித்தட்டு.கள்வன்.பொலிஸ்.அம்புக்குறி.கிட்டிப் பொல்லு.ரவுண்டேசு....சிறுபிள்ளைகள்கூட கல்லுச்சுண்டுதல்.தாயக் கட்டை .கொக்கு பிடித்தல் மங்காத்தா அதாவது எட்டுப் பெட்டி.கிந்திக் கிடித்தல்.என நாளாந்தம் தமதான பொழுதுபோக்குடன் உடல்.மன வளர்ச்சிகளை பெற்றுக் கொண்டார்கள்.

இப்போதைய சந்ததிகளின் வாழ்வு எவ்வளவோ சுருங்கி ஒரு கைவிரல் சுட்டியில் அடக்கப்பட்டுள்ளது.யார் யாருடனாவது முகம் கொடுத்து இயல்பாக.மகிழ்வாக பேசிக் கொள்கிறார்களா?தங்களின் நாளாந்த இன்ப.துன்ப.நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்களா?இல்லையே...சற்றே விநோதமான வாழ்வை இந்த சிமாட் தொலைபேசி மக்களிற்கு அருங்கொடையாக பெருங்கொடையாக அளித்துள்ளதாக இந்த இப்போதைய சமுதாயம் அலட்டிக் கொள்வதே இங்கு விந்தையாகும்..இந்த சுருங்கிய உலகத்தால் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய எத்தனையோ தரமான உறவுகளை நாளாந்தம் இழந்துள்ளோம் என்பதை பட்டியல் போட்டல் இந்த கட்டுரைக்கு பக்கம் நீட்சியாகிவிடும்.

ஆக வேண்டாம் வலைப்பந்து விளையாட்டு??.விளம்பரத்திற்கு ஒருக்கால் துடுப்பாட்டம் அவ்வளவே.சரி மக்களாவது நாளாந்தம் தங்களின் மத்தியில் ஒரு சந்திப்பை நடாத்துகிறார்களா என்றால் அது துப்பரவாக இல்லை என கூற முடியாவிட்டாலும் முழுமையானதாக கூறமுடியாது.இப்படி சந்திக்கும் இளையார்களோ அன்றி பெரியவர்களோ அதற்கான நேரத்தை ஒழுங்கமைப்பதே இல்லை.இது என் ஊரக உலாவலின்போது கண்ட மிகப் பெரிய அவலம் என்றால் மிகையாகாது.சந்திப்பவர்கள் கூட நேரமில்லை எனும் ஒரு பொய்ச் சாட்டுடன்.விலகிச் செல்வதே ஆங்கு மிளிரும் நடைமுறையாகும்.
எனவே இப்படியான விளையாட்டுக்ளை மக்களின் முன் பரப்பி அவர்களையும் இதில் ஈடுபடச் செய்ய எமது சனசமூக நிலையம் ஆவன செய்ய வேண்டும்.இப்படியான பொதுக் கட்டுமானத்திற்குள் இளையோர்களை ஈர்த்தெடுத்தால் தேவையற்ற களியாட்டத்தில் மக்களின் ஈடுபாட்டை இல்லாதொழிக்கலாம்.இதற்கு எத்தனை பெற்றோர்கள்,பிள்ளைகள் பங்களிப்பார்கள் என்பதை சனசமூக நிலைய பொறுப்பாளர்களின் செயற்பாட்டில் உள்ளது.
ஆசினும் இது கைகூடுமா என்பதே தொக்கி நிற்கும் மிகப் பெரிய????ஆகும்

ஆக சமூகத்தை காதல் செய்ய தற்போதைய இளையோர்களை ஒரு கட்டுமனாத்திற்குள் இணைக்க வேண்டியது காலத் தேவையாகும்.
ஊர் பிரிந்து ஒற்றுமை கலைந்து வேடிக்கையாக உள்ள எமது ஊர் இனியாவது ஒற்றுமையாக ஓர் குடையின் கீழ் இயங்க சமூகத்தை காதல் செய்யுமா?இது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை என்றில்லை இதுவே எதமு பெரும் பிரச்சனை ஆகும்

ஒற்றுமையாக இயங்க பல விட்டுக் கொடுப்புக்ளும்.புரிந்துணர்வுகளும்.ஈகோ அறவே அற்ற மனத் தெளிவும் தேவை என்பதை ஆழமாக கருத்தில் கொண்டால் இந்த சமூகத்தை உண்மையிலையே காதலித்தால் .......
நன்றி ஊரகனாக
ஊரகன்
சு,குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்