திங்கள், 1 ஏப்ரல், 2013

நிர்வாகத்தினரின் நிறைவாக!

                 நிர்வாகத்தினரின் நிறைவாக!



திரு குமார் குடும்பத்தினருக்கு 

      புலம் பெயர் நாடுகளில் வதியும் எம் மினிய உறவுகளே ,அன்புடை நெஞ்சங்களே,
                       எமது நன்றி கலந்த வணக்கங்கள்

                    பலகால் பலவிடமும் மாறிமாறி நின்றும்
                    சிலகால் செயலிழந்து சேடம் இழுத்தும்  

                                          68
வருட காலம் பல இடர்களை எதிர்கொண்டவாறே இயங்கி வந்த எமது சனசமூக நிலையம்  சொந்த  நிலத்தில் கட்டபட்ட கவினுறு மாடிக்கட்டடத்தில் இயங்குகின்றதாயில் அதற்கு முதற்காரணம் புலம் பெயர் நாடுகளில் வதியும் எமது உறவுகள் மனமுவந்து வழங்கிய பெருநிதிப்பங்களிப்பே என்பதை மறுப்பார் எவருமிலர்.

                ஜேர்மனியில்  இருந்தவாறே நிதி திரட்டும் பணியில் முனைப்புடன் உழைத்தும் உச்ச தொகை நிதி வழங்கியும் பேராதரவு நல்கியவர் நீங்களே என்பதை குறிப்பிடுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.அத்துடன் அமையாது "சமூகநாடி" மலரையும் இறுவட்டுக்களையும் விற்று நூல் கொள்வனவிற்கும் பெருந்தொகைப்பணம் அனுப்பியவர் நீங்களே . நீங்கள் இவ்விடம் வருகை தந்த போது உரையாடல் மூலம்  வேறு நபர்களிடமிருந்து பெற்றும்சொந்தமாகவும் பங்களிப்பு வழங்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை உணரக்கூடியதாகவும்  இருந்தது.

                நான் தலைவராக பதவி பெற்ற ஓரிரு நாள்களில் திரு.சதாசிவம் ஸ்ரீகாந்த் என்னுடன் கதைக்கும் போது "எமது விளையாட்டுக்கழகத்தின் மீது வீணான அபாண்டப்பழிகள் விழுந்துள்ளன.நாம் சனசமூக நலன்களில் அக்கறையுடையவர்கள் இவ் வருடத்திற்குள் 3 கணனிகள் வழங்கவுள்ளோம்.பின்பும் 3 வழங்கவுள்ளோம் கணனிகள் என 6 கணனிகள் வழங்கவுள்ளோம் என்று கூறினார்.என்னைப் பொறுத்தவரை கணனிப்பயிற்சியோ வேறு எந்த செயத் திட்டமாயினும் அகலக்கால் வைக்கக்கூடாது.ஏனெனில் தொழில்நுட்ப கல்லூரி,கல்வித்திணைக்கள முறைசாராக் கல்விப்பிரிவு தனியார் நிறுவனங்கள் பல எனப் பல கல்வி நிறுவனங்கள் பயிற்சி நெறிகளை நடத்திச் சான்றிதழ்களும் வழங்குகின்றன.அத்தகைய நிலையை நாம் எளிதில் அடைந்து விடமுடியாது. 3,4 கணனிகளுடன் ஆரம்பித்து நிலைமையைப் பொறுத்து விசாலிக்கலாம் என எண்ணியிருந்தேன்.பல்வேறு செயற்குழுக்களை தெரிவு செய்து செயற்படத்தொடங்கியபோது கமலசுதர்சன் 1கணனி,ஸ்ரீகாந்த் 1கணனி என 2 கணனிகளை  வழங்கவுள்ளதாக ஜனார்த்தனன் கூறியிருந்தான்.திரு.புலேந்திரன் நாற்சந்தி நண்பர்களும் 1கணனி வழங்கவுள்ளனர் என கூறினார்.நானும் தந்தையின் நினைவாக 1கணனி வழங்கினால் ஆரம்ப நிலைக்கு திருப்தியானது என என நினைத்திருந்தேன்.
                                      விளையாட்டுக்கழக ஓரிரு உறுப்பினர்கள்(கூட்டம் நடைபெற்ற போது இங்கு நிற்காதவர்கள்)பின்பு ஊர் வந்து போலிக் காரணங்கள் கூறி கல்விக்குழு,  கலைப்பண்பாட்டுக்குழுக்களை மீள அழைப்பதாகக் கூறி வெளியேறினர்.அதற்கு பிரதான காரணம் ருக்மணி என ஊகிக்கமுடிகின்றது.அவர் ஆரம்பத்திலிருந்தே விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் மீது காழ்ப்புணர்வுடனேயே செயற்பட்டார்.ஆனால் பின்பு நாவலர் விளையாட்டுகழகத்தைச் சேர்ந்த சனசமூக நிலைய செயற்குழு உறுப்பினர்களான திருவாளர்கள்,தி.சந்திரசேகரன்.அ.தேவராஜேந்திரன்,வி.ஜெயந்தன் ஆகியோரும் விவேகானந்தா விளையாட்டுகழகத்தின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாலும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.ஆயினும் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினர் கடிதமூலமும் நேரடியாகவும் ருக்மணியை கண்டிக்க தொடங்கினர்.இவ்வாறு விளையாட்டுக்கழகம் பிரிந்து சென்றமை மன வருத்ததிற்குரியதே.பிரிவதற்க்கு முதற்காரணம் அவர்களது வெளிநாடுகளில் வதியும் மூத்த உறுப்பினர்கள் நிதி அனுப்பி வைப்பதேயாகும்.
               அவர்கள் பிரிந்து சென்றதால் நாம் சோர்ந்து விட முடியாது.நான் மிக விரைவில் கணனி ஒன்று வழங்கவுள்ளேன்.
கோயிற்கும்பாபிடேகம் நடக்க உள்ளதால் வெளிநாட்டு உறவுகளிடம் இருந்து அதிக நிதியை எதிர்பார்க்க முடியாது.உங்களை பொறுத்தவரை கோயிலுக்கு என ஒரு பிரச்சனை இல்லை.எனக்கும் கோயிலுக்கு வழங்க விருப்பமில்லை.தொல்லைக்காக அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஐயாயிரம் வழங்கவுள்ளேன்.அதற்கு மேல் வழங்க மாட்டேன்.வேண்டுமாயின் சனசமூக நிலையத்திற்கு வழங்குவேன்.ஐயர்மார் வருமானத்திற்காக 13 வருடத்தில் கும்பாபிடேகம் நடத்த வேண்டும் என்று கூறினால் கேட்பவர்களுக்கு என்ன மதி.தெய்வம் இருக்குதோ இல்லையோ பிரச்சனையில்லை.கிரியைகளுக்கு நான் ஆதரவளிக்கத்தயாரில்லை.

                                           
நீங்களும் இயன்ற நிதி உதவி வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும்படி வேண்டிக்கொள்கின்றேன்.விரைவில் எனது கணனி மூலம் skype இல் கதைப்பேன்.

                         
எமது சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் வரலாறு பற்றி எழுதியது போல் சனசமூக நிலைய வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்காக ஆராய்ந்து எழுதவுள்ளேன்.அதன் போது தீவிரமாக செயற்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் பற்றி விபரமாக எழுத வேண்டும்.இதற்காகவும் பலரிடம் விபரங்கள் பெரும் வேலையை ஆரம்பிக்கவுள்ளேன்.

                                                                  
நன்றி 
                                                                                                                                                                                              அன்புடன் 
                                                                                                                                                                              செ.சிதம்பரநாதன்



ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெள்ளி நிலா தெறித்த நிலம்
விடிவெள்ளியில் விளைந்த பலம்
கல்வியில்,கேள்வியில் கலந்த வளம்-இன்று
கலவியிலும்
களவியலிலும்---?

பள்ளி செல்லா பாலகரை
காணாத பட்டயம் எம் நிலம்.
முள்ளில் நடந்தாலும்
முடங்காமல் சென்று
கள்ளமகற்றி கல்வி பயின்ற பாட்டயம்.

இன்று
வேலிகள் சரித்த,
வேள்வியால்,
பாலியலிலும், பாடலியலிலும்
பாடை காவுவது
பெளசாகுமா?

நாளெல்லாம் நலிவான சேதி தாங்கி
நாணயம் இழந்த நடை தளருமா?
தளர்த்தும் தாயமில்லா தகமெங்கள்
தாங்கு நிலம் கொதித்தெழுமா?

அஃதன்றி
இதுதான் விதியென
வீதி பரவி-எம்
பாரம்பரியக் கல்விகள் களைந்து
குறியில்லா குதமெழுத குவியுமா?

எம்
நிலம் எங்கள் வசமில்லா பொழுதெல்லாம்
பலமிழந்த பாசறையாய் பறை தட்டும்
பார்ப்பனியம் புரியுமா?
அது அவாளின் வதிவிடமில்லையென
வாசிப்புக்கள் களர
காத்திரம் பேணும் கனம் வேண்டும்.

யார்?
எப்போது?
எப்படி?
ஏனங்கள் ஏந்த ஒரு விடிவெழுதும்
வேதியர் வருவாரா?
நாளெல்லாம்
நாளமெழுதும் நாணங்கள் இவை.
நா நயங்கள் சுரக்க
நாணயமெழுதும்
நாயகர்களை தேடுகின்றேன்.

நாடிகள் இப்படித்தான்
சுற்று வட்டத்தில் சுரம் தேடுகின்றது.
பேடிகளை களையும் பேழம்
கபடிகள் ஆடாது.
மூக்கணங் கயிறறுத்து
முதுசம் பேணும் பாதைகள் அழுகின்றன!

அருவங்களிற்காய் -நாம்
காத்திருப்பது?
தெரிவெழுதி தேடுவதுபோல்
மருளது அகல "மா"
அருளர்கள் அருளது சொரிய
சாலை
சலனமாய் காத்திருக்கின்றது.

விடியுமா
எம் தேசமென
தாயவள் கலங்கும்
சாவொலியில் எம் சாசனங்கள்
சங்கமம் களைந்து, கலைத்து
கரிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சாமியினதும்
சாபமில்லாமல்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நிறைவெழுதிப் போகும் என் வீதியில்
பெயர்
பெயராமல்
சில ஆத்மங்களின்
குடியிருப்பில்
என் குதங்கள்
உயிர்ப்பெழுதும் போதினில்
என் இருப்பிருக்கும்
இவர்களின் பெயரில்
என் நெருப்பிருக்கும்


இதை
நாளையே என்
நா
வண்மையால்
நாடி எடுத்து
பொடிகளற்றி ஒரு பொய்கை வரையும்
பேறில்
என் பொறுப்பின்
இருப்பு
இறுமாப்பெய்யும்.

வசிட்டர்களை
வரலாற்றில்
படித்த எனக்கு
விசிட்டர்களாக
என்
தொடர்பில்
வகுப்பெடுக்கும்
வருணர்களிற்கு
வசந்தமான
வருடல்களுடன்
வாழ்த்தெழுதும் பேறகற்றினால்
என்
பெயர் தவிரும்.
 
துயர் தரும் சேதிகள் தவிர்க்க
துஞ்சாமல் என் தொடர்பெழுதலில்
படரும் ஒரு பாக்கியம்.
வெட்டொன்று துண்டிரண்டென
வேய்தலில் அவன் பாங்கில்
நெஞ்சகம்
நெருடி
வாயார
வருடுகின்றேன்.
பஞ்சாட்சரம்*
சரம்
மொய்ய
சுரம் பாடும்
இவன்
சரங்கள்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அறிந்ததுவும்
அறியாததவுமாய்
அகிலத்தில்
ஆயிரம் பாயிரங்கள்
ஓராயிரமிராய்
ஒன்றித்து
ஒப்புவமையற்று
ஒருக்க(ளி)ழித்து
விழித்து
விழுமியம் காணும்
விற்பகர்கள் அற்றதாய்
வினைகள்

இங்கு
விளையாடும் விகற்பத்தில்
விதி சொல்லி
வீதி அழித்து
மதியழிக்கும் மடமையின்
மகிமையின் கோலங்கள்
ஞாலங்களில்
எத் தீர்ப்பும் இன்றி
தித்திப்புக்கள்
திசை மாற
தீ
ஆசைத் தீயில்
அவனியின் அவலங்கள்.
ஆறாமல்
அவலக் காலங்களின்
மாயங்கள்.

மலங்கும் மடமையில்
துலங்காத தீபங்களாய்
சீலங்கள் சீரிழியும்-
சிறப்பதன் திறப்புக்கள்
துருப் பிடித்து
இன்று
மதம் பேசும் மடமையின்
கரங்களில்
மனிதம் விழித்தாலும் சாகும்.

விதியென ஓலம் போடும்
ஒரங்களில்
மதத்தின் மருமைகள்
மெதுமையாய்
சிரிக்க
வாழ்வறுத்து போகின்றது
மனிதக் கோடுகள்..

சனி, 4 ஆகஸ்ட், 2012


மனித சமூக வியாபாரத்தின்
மிகப் பெரிய மூலதனம்
கடவுள் எனும் கற்பனைக் பொருள்.

இந்த வியாபாரமும்
அதனூடான மூட நம்பிக்கையும்
இதனூடாக விழையும்
இம்மியும் பயனற்ற
இடரும்
எந் நாளும் அற்றுப் போகாது.

வலிமையற்ற வலிமையது
பலனே அற்ற பாதையது
புலனே ஏற்காது -ஆயினும்
புடம் சரியாத பூர்வீகமது.

ஏமாற்றுபவர்கள்
இருக்கும் வரை ஏமாறுபவர்கள்
இருப்பார்கள் என்பதன்
எளிமையான விளக்கவுரையிது.

தாற் பாரியமும்
தர்மம் என்பார்
தகமும் இதுவென்று தாயக்கட்டை வீசும்
தப்பான சமூகத்தின்
ஒப்புவமையும்
ஒவ்வாமையும்
ஒற்றி நிற்கும் சாரம் இதுதான்

இத் தளை
கவிழ்ந்தால்
தார்மீக சமூகம்
தளைத்தே ஓங்கி விடும்.
சுனை பாயும் சுகலயம்
சுட்டு வீழ்த்தப்பட்ட
தட்டுக்களின் த(ட)டையம் புரிவீரே!

மனித சமூகத்தின்
மூலப் பொருளின் பெரு வியாபாரி
கடவுள் எனும் கற்பனைக் காண்டமே.
மூடப் பழக்கம் முடங்க
தேடாமலே எம் சுதந்திரம் சுகிக்கும்.

வலைப்பதிவு காப்பகம்