செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அகவுதல்!



இமையும் கண்ணும் செய்யாத
ஒரு எழுதாத ஒப்பந்தம்
இது
என் ஊரிற்கும் எனக்குள்ளும்
உலவுவதாக ஒரு உணர்வு.

நிலச் சுவாசம் ஒரு நிர்ணயம்.
அகச் சுவாசமும் அதுவே ஆக
நித்தமும் ஊரக நினைவு சுழல்கள்
எனை அறிந்தோ அறியாமலோ
மனம் சுடும்.

என்ன தவ வாழ்வெழுதுகிறாய்
அன்னமிட்டு அருகிருந்து
அமிழ்தூட்டிய அன்னை நிலம் மறந்தாயோ -
மதியீனம் பூண்டாயோ?
இது வரையில் எதை வரைந்தாய்?
ஊரிற்கும் அது உனை ஈன்றதிற்கும்
என என்பேரிடை ஒரு இதய நெருடல்.
ஆன வரை ஏதாவது வரைந்தாயா?
அயலவர்ளை கலந்தாயா?
ஆய பலன் ஏது?
ஆய்ந்ததுவும்,தீய்ந்ததுவுமாய்
உன் அகத் திணை எதை
இதுவரை பதித்தது?

இப்படி பல் சுவை வினாக்களில்
என் இதயம் உறைந்தே போகின்றது.
ஊர் கூடி தேர் இழுக்க உற்றவரையும்
என் சுற்றவரையும் இயன்றவரை வேண்டினேன்.

அவர்கள் வைதார்களா?
இல்லை எனை நெய்தார்களா?
எனினும் எனை கொய்தார்கள் மறைமுகமாக
என் மனச் சாட்சியடம் அகவினேன்.

அகவுதல் பறவையின் இயல்பு.
ஆயின் நீ அகவுதல் எதன் சாரலென!
வினவும் இந்த வினாவிற்கு பதில் தர
எவர் எம்
(ன்) கரம் பற்றுவார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்