அழகு.
அழகு அழகு
பற்றி பாடப் போகிறேன்.நான்
ஆனந்தமாய்
அழகு சொல்லி ஆடப்போகிறேன்
உறவு
சொல்லி.உணர்வு
அள்ளி
வீசப்
போகிறேன்.அங்கே
உவகை பொங்க
கலந்து நானும்
வாழப்போகிறேன்
சுற்றாடலை
காதலித்தால் அழகு.அங்கு
சுகந்தம்
வந்து குடியிருக்கும் அழகு
பெற்றோரை
மதித்து இங்கே உலவு
நீயும்
கற்றோரை கலந்திருத்தல் அழகு
கற்றோரும்.மற்றோரும்
உன்னை
சூழ்ந்திருந்தால்
நீ நூற்பாய் அழகு
எத்தொழில்
செய்வோரும் அழகு.அவர்
எங்கிருந்து
வாழ்ந்தாலும் அழகு

ஏமாற்றி
பிழைக்காமல் பழகு.பிறரை
ஏய்த்து
பிழைத்து வாழாமல் பழகு
களவு.பொய்கள்
நிலையாதே உலகில்
உளவு
பார்த்து வஞ்சிக்காதே உணரு
உன்னை
நீயே உணர வேண்டும் முதலில்
அந்த எண்ணம்
யாசிக்கட்டும் மனதில்
மனிதம்
ஆங்கு குடியிருந்தால் அழகு
மதிப்பாரே
பலரும் உன்னை உணர்ந்து
இயற்கையை
நேசித்தால் அழகு.அதில்
மாண்பு
வந்து உன்னை யாசிக்கும் அழகு
திருப்பி
உன்னை தீண்ட வேண்டும் எதிலும்.அந்த
திமிரில்
நீயும் உயர வேண்டும் உலவு