திங்கள், 16 ஜனவரி, 2017

நான் பாயிரம் பாடிட பல்லவி நீதானே

பூவிற்குள் ஆயிரம் பூமாலை.....எந்தன்
தேர்வுக்குள் ஆயிரம் பாமாலை .....இந்த
பூமகள் ஊர்வலம்தான்..கவி பூணுது
உன் முகம்தான்..நான் பாயிரம் பாடிட
பாவை இவள்தானே.

கண்ணிற்குள் மின்னிடும் தோரணமாய்
கவி பின்னிட நாயனமாய்.இவள் கைத்தாங்கல்
நான் கொண்டேன். காதல் மணமும் கொண்டேன்.
பூமகள் ஊர்வலம்தான்
கவி பூணுது உன் முகம்தான்.

இவள் பார்வைகள் தண்மை ஒளி .அதில்
படர்ந்திடும் சலங்கை ஓலி
மனம் கானம் இசைத்திட காரணம் யாரிவள்
பூமகள் ஊர்வலம்தான்.
கவி பூணுது உன் முகம்தான்

இசை புல்லாங்குழல் இவள் தேகமாய்
இழை பூவின் மணம் மன வாசமாய்
ஒளிர்கின்றாள் ஓவியமாய்.என்னில்
இசை(க்)கின்றாள் காவியமாய்.

நான் பாயிரம் பாடிட பல்லவி நீதானே.
பூமகள் ஊர்வலம்தான்
கவி பூணுது உன் முகம்தான்.

வலைப்பதிவு காப்பகம்