புதன், 26 நவம்பர், 2014

புற முதுகெழுதும் நண்ப!

முகநூல் பக்கத்தில்
தலை காட்டும் எனதான சில நண்பர்களே!
ஒரே ஒரு வினா?
நான்
HI என சுட்டினால்-அதாவது
உம்மை நோக்கி இந்த
இரண்டெழுத்தை அழுத்தினால்
உடனே
முகநூலை விட்டே ஓடும்
ம(த)ர்மம்
யாதோ?

புரியும் உனக்கு பதில் தெரியணும் எனக்கு!
சாட்சி மனதில் இருந்தால்
இதில் காட்சி கொடு
மேற் சுட்டிய சில நண்பர்களே!

திங்கள், 24 நவம்பர், 2014

கனதி காணும் காலம்!

 நினைத்துப் பார்க்க!
காலம் சென்ற மாஐி ஐனாதிபதி J.R.யெயவர்த்தனாவினால் அமுலாக்கப்பட்ட ஐனாதிபதி ஆட்சி முறையை ஒரு முடிவிற்கு கொண்டு வருவேன் என களத்திலிறங்கிஅதையே தமதான ஆட்சியில் தொடர்ந்து கடைப்பிடித்த மாஐி சந்திரிகா---தற்போதைய மகிந்தா வரை இந்த ஐனாதிபதி ஆட்சி முறையை களையாதது ஏன்?

1.சந்திரிகா நேற்று இறக்கி வைத்த செய்தி தன்னிடம் மூன்றில் இரண்டு அதிகாரம் இல்லையென்பதுவும்,மேலும் எதிர்க் கட்சிகளும் அங்கீகரிக்கவில்லை எனவே தன்னால் இந்த மமதை பிடித்த ஆட்சி முறையை விலக்கும் திட்டம் அமுலாக்க முடியவில்லை.

 2.ஐயா மகிந்த ஆட்சிபீடம் ஏற முன் வழி மொழிந்ததுவும்
ஐனாதிபதி ஆட்சி முறையை அகற்றுவதாகும்.ஆயினும் அவர் அதை நடைமுறைப்படுத்தவே விரும்பவில்லை.ஐயாவிடம் மூன்றில் இரண்டை விட மேலதிக பாரளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இவ் நடை முறையில் கை வைக்க முற்று முழுமையாகவே ஆட்சிபீட ஆசை விடவில்லை.

3.நேற்றைய பொழுது மகியின் கட்சி செயலாளரும்,பிரதம வகி பாகம் வகித்த (கட்சியின் செயலாளர்)அமைச்சர் மைத்திரிபாலா.ஏலவே போட்ட திட்டப்படி கட்சி மாறி ஒரு பொதுவேட்பாளராக தன்னை அடையாளம் காட்டியதுவும்,அத்தோடு 100நாட்களில் இந்த ஐனாதிபதி ஆட்சிக்கு ஆப்பு வைப்பதாக கூறியுள்ளார்.தான் ஐனாதிபதியாக வெற்றி பெறும் நிலைமை வந்தால்.அதாவது வருவார் எனும் பாரிய நம்பிக்கை(மூலம்--பல ஐ.தே.க +சந்திரிகா அம்மையார் பின்ணணியில் அமெரிக்க அதரவு இன்ன பிற இத்தியாதி அணைக்கும் கரங்களின் அனுசரணை காசு+துட்டு+,மணி,மணி)

4.மேற்படி ஆட்சி கட்டிலில் தூய இன்பம் கண்டவர்களின் சுகத்தை தான்இழப்பாரா?அதாவது் தான ஐனாதிபதி ஆகிய பின் இவ் ஆட்சி முறையை இல்லாதொழித்த பின் அதிகாரம் நாட்டின் பிரதமர் கையில் வீழும்.அதுதானே நடைமுறை.அப்போது ஐனாதிபதி ஆனவர் வெறும் டம்மி தேவை ஏற்படின் அவசர காலத்தில் அதிகாரத்தை கையிலெடுக்கும் ஒரு பிரகிருதியாகவே இருப்பர்.
(யோக்கராகவும் வைக்கலாம்)





ஆக!
வரும் தேர்தலில் வெற்றியீட்டினால் இப்படியான ஒரு ஏதுமற்ற பதவியில் தற்போதைய பொது போட்டியாளர் இருக்க ஆவல்படுவாரா?.
இது யதார்த்ம்தானா?
பதவி கிடைத்த பின் யாபேர்க்கும் இவர் "பெக்கே" காட்ட மாட்டாரா?என்ன நிச்சயம்?எத்தனையோ ஒப்பந்தங்களை குப்பையில் போட்ட வரலாறு படைத்ததுதான் பேரினவாதத்தின் நிலைப்பாடு.
ஆயின் ????
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மு.கு.
எவர் வந்தாலும் ஈழத் தமிழினம் பற்றி அக்கறை காட்டப்படப் போவதில்லை யாராயிருந்தாலும்.
ஆயின் தமிழரின் வகி பாகம்+அவி பாகம் யாது?என்பதை ஒரு மூலையில் முடுக்கி விடாமல் கவனத்தில் கொள்க!
கார்த்திகை மாதத்தில்
எனக்கும்
காரியமில்லாத இந்த
களவேலை.
இனி
கரிகால சந்ததி பதில் வரையட்டுமே.

புதன், 12 நவம்பர், 2014

மன்னிக்குமா தமிழினம்?

நீதிக்கு தலைவணங்கும்
நியாயவாதியாக
மகிந்த சிந்தனை
வகுத்ததெல்லாம்
(அ)நியாயங்களை அழித்ததே ஆகும்.

அரச கட்டில் தரும் சுகம்-இனி
எந்த ஆயுளிலும்
மகிந்தருக்கு கிடைக்காது.
நீதியரசர்களை
நிந்தித்தே நீதி வாங்கு(பவர்)

இனி
சாவரும் போதும்
சாக்காட்டிலிருந்தும்
சனாதிபதியாக சாப விமோசனம் பெறுவார்.
இவர்தான்
இலங்கையின்
நியமான
நீதியரசர்..

ஆனாலும்
தமிழர் தம் வாக்குடிவங்கியில்
பசிலிற்கு ஏனோ ஒரு மோப்பம்:
எனினும் ஈழத் தமிழர்
ஏப்பமாய் விடுவர்-அது
தமிழின ரத்த வடுவாய்.
படுவான்கரை முதல்
முள்ளி வாய்க்கால் வரை--






சிந்திய குருதிகள்
கூனிக் குறுகுமா?
காலம் என்னய்யா பதில் கூ(று)தும்?

புல வாழ் மக்களின் ஊர் சமூகத் தொடர்பு ஒரு பார்வை





எமதூரவர்கள் மட்டுமல்ல பொதுவாகவே ஈழத் தமிழர்கள் இலங்கையின்
போர்ச் சூழலால் புலம் பெயர் வாழ்வை மேற்கொண்டுள்ளனர்.இது கடந்த காலம்.
இங்கு நான் பதிய விழையும் சாரம்.
அப்படி புலத்தில் வாழும் எத்தனைபேர் ஊரையும்,தான் வாழ்ந்த சமூகத்தையும் உள்ளார நேசிக்கிறார்கள் என்பதுடன் ஊர் சார் கால நடைமுறை.முன்னேற்றத்திற்கு பொதுவாக என்ன செய்ய விழைகிறார்கள்?

நாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்து கல்வி கற்று சமூகப் பிரக்ஞையுடனும் சீரான ஒரு ஒற்றுமையான பரவலான விழிப்புணர்வுடனும் வாழ்ந்து அரசியல் மற்றும் பிற காரணங்களால் பல ரணங்களை சுமந்தும்,வெளியில் ஆற்றுகைப்படுத்த முடியாத வடுக்களை ஏந்தியும் சிலர் மிகச் சுலபமாகவும்,பலர் பல இடர்களிற்கு மத்தியிலும் புலம் பெயர்ந்து சில காலம் புல வாழ்வில் எதையெல்லாம் சகிக்க முடியாதோ அத்தனையையும் சகித்தும்,பின் சுகித்தும் தற்போது ஓரளவு அல்ல பேரளவில் தம்மை நிலைநிறுத்தி நன்றாக வாழ்கிறார்கள்.
இந்த முன்னேற்றமும்,தமதான இருத்தலும் நாட்டிற்கு நாடு வேறுபடும் அனுபவங்களால் நிர்ணயிக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது.
அதற்காக இவர்கள் கொடுத்த விலையும்,நிலையும் இங்கு பதிவிற்கப்பாற்பட்டது.

இதுபற்றிய மேலதிக பதிவுகள் தேவையற்றது.
விடயமானது தற்போது புல வாழ் மக்கள் தமதான உறவுகளுடனும்,உற்றாருடனும்,சமூகத்துடனும் எப்படியான பிணைச்சலை,உறவை வலுப்படுத்தியுள்ளார்கள் என்பதுடன், சமூகத்தின் பொது நலத் திட்டத்தில் எந்தளவு ஆர்வமும்,அக்கறையும் கொண்டுள்ளார்கள் எனப் பார்ப்பதே இந்த பதிவின் நோக்கமாகும்.

நான் இதை இங்கு பதிவதால் யாரையும் குறை கூறவோ,அன்றி மேம்படுத்துவதோ எனதான நோக்கம் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்தி தொடரலாமென ஆழமாக நம்புகின்றேன்.
இந்த பதிவில் பொது வாழ்வு சார் எதிர்பாபு்பு நிறையவே அடங்கியுள்ளது.அதன் காரணமாகவே இந்த பதிவு.

இது ஒரு மன ஆதங்கம்,அனுதினமும் எனக்குள் ஆழமாகப் புதைந்து அடிக்கடி நினைவில் வந்து இவர்கள் ஏன் இப்படி? என வலிமையான வினாக்களால் குத்தும்போது எனக்கு நானே சில சமயம் சமாதானம் சொல்வதும்,சில சமயம் வஞ்சினம் வந்து ருத்திரம் கொள்ள வைத்ததும் உண்டு என்றால் அது மிகையாகாது.

.இங்கு நான் பதிவது எனது சொந்த அனுபவத்தாலும், சுற்றத்தாரகிய புல உறவுகளிடம் இருந்து அறிந்ததுவும்,தெரிந்ததுவுமான நியங்களே தவிர கற்பனையாக ஏதும் இல்லை.

1.புல வாழ் மக்கள் ஏன் தமது உறவுகளுடனும், உற்றாரிடமும் வைத்துள்ள தொடர்பை ஊர் எனும் எல்லைக்குள் தொடுகைப்படுத்தவில்லை?

2.இதன் மூலம் எமது ஊரிற்கு ஏதாவது நற்காரியம் செய்யலாம் என தானகவே நினைப்பதும் இல்லை.எண்ணியதுவும் இல்லை.

3.பொதுவான வேலைப்பாடெனில் கோயிலை மட்டும் முன்னிலைப்படுத்தும் மடமை ஏன்?

4.ஏனைய ஊரவர்களைப் பாருங்கள் என நான் ஒருபோதும் ஒத்துப் பார்க்க சொல்லமாட்டேன்.நாமாகவே சிந்தித்து எமது ஊரிற்கு நிச்சயமாகவும்,நியாயமாகவும் எது முக்கியமான தேவை என சுயமாக சிந்தித்து ஊரவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அதேவேளை தத்தமது நாட்டில் வசிக்கும் எமதூரவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு கலந்தாலோசிப்பை நடாத்தி ஆவன ஏதும் செய்ய எவராவது முன் வராதது ஏன்?

இவ் வகையான வினாக்களிற்கு தொக்கி நிற்கும் ஒரே விடை.
பணம்,துட்டு,காசு,மணி,மணி தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது.
இதுதான் யதார்த்தமும் ஆகும்.

ஆம்!
இங்கு வாழும் எம் ஊரவர்களிற்கு பணமே முக்கியம்.

தண்ணியடிப்பதற்கும்,சிகரட் புகைப்பதற்கும என அனாவசியச் செலவுகள் செய்வதற்கும் பின் நிற்காதவர்கள்.
ஊரில் ஒரு கட்டுமானத்தை முன்னெடுப்பதெனில் முன்வைக்கும்
முதற் கேள்வி
உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை?

இவர்கள் தண்ணியடிப்பதோ,மற்றும் ஆடம்பர வாழ்வு வாழ்வதோ எனதான விமர்சனம் இல்லை.அது அவரவர் விருப்பம்.அல்லது தெரிவு.
எனினும் இப்படியான
இந்த செலவில் 1வீதத்தை மாதமாதம் கொடுத்துதவினால் இந்தளவில் எவ்வளவோ கட்டுமானத்தை பூர்த்தி செய்திருக்கலாம்.

அஃதன்று
1.ஏன் செய்யணும்?
2.எதற்க்கா செய்யணும்?
3.யாருக்காக செய்யணும்?
4.வேறு வேலையில்லை.
5.எனக்கு மனம் இருக்கு மச்சி ஆனால் மனுசி ----இப்படி சிலர்
6.ஆமாண்ணை ஆனால் இவர்தான் இப்படி சிலரின் மனைவிமார்.
7.உங்கட ஊரிற்கு ஏன் செய்யணும்?எங்கட ஊரிற்கே செய்யல்லை இப்படி(கணவன்,மனைவி  அயலூரில் திருமணம் செய்த குடும்பம்)
8.எங்களிற்கே வழியில்லை இஞ்சை இவர் வேறை
9.எனக்கு சரியான விருப்பமடா –ஆனால்—பொறு,பொறு எப்படியும் ஏதாவது செய்வன்.இப்படியே காலத்தை கடத்தும் சிலர்.
10.நான் எப்படியும் வருகின்ற மாதம் 50அல்லது 80ஆயிரம் கட்டாயம் அனுப்புவேன்.(சொன்னவர் வருடம் இரண்டாகியும் ஒரு சத நிதியுதவியும் செய்யவில்லை.
11.“நீ ஓரு 1000-யூரோ கடனாக தா“ நான் அடுத்த மாதம் கட்டாயம் தருவேன் என என்னிடமே கடன் கேட்டு எனக்கே மாதா காட்ட என ஒருவர்.
12.உந்த சிறிய ஊரிற்கு உதெல்லாம் தேவையா?(அப்படி பார்த்தால் இந்த சிறிய ஊரில் படிப்பறிவே தேவையில்லை என சொல்லாமல் விட்டானே ஒருவன்)
இப்படி நீட்சியடையும் ஊரகர்கள் என்ன மனதில் வைத்திருக்கிறார்கள் என்றால் பதில் பல வகை. 
ஒரு சனசமூக நிலையம் கட்டுவதற்கு பட்ட இடர் ஒரு சுகானுபவம்.
இந்த இடத்தில் நிச்சயமாக இதை பதிந்தே ஆகணும்.
அதாவது சனசமூகநிலைய கட்டுமானத்திற்கு நிதி தந்துதவிய அனைத்து உறவுகளிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.
ஆனால் அதற்கான நிதியை பெற கால தாமதமும்,பல விமர்சனங்களும்,புற முதுகு காட்டலும் நடந்ததுதான்.ஆயினும் எண்ணம் இனிதே ஈடேறியது.

சனசமூக கட்டுமானத்திற்கு நிதி தந்த ஊரவர்களில் பலர் இந்தப் பணியிலிருந்து ஒதுங்கியிருப்பதன் மூலம் வெளிப்படுத்தும் சேதி கவலையளிப்பதாகவே உள்ளது.
ஒரு ஓர்மம் கூட இல்லை.ஏதோ தங்களது பணத்தை விரயமாக்குவதாக அவர்களுக்குள் அர்த்தமற்ற எண்ணம்.
ஊர் கூடித் தேரிழுக்க பின் நிற்பது சாதாகமான சூழல் இல்லை.இந்த ஒரு நல் வாய்ப்பை கைகழுவி விட்டவர்கள் நிச்சயமாக காலம் கடந்து வருத்தம் தெரிவிப்பார்கள் இது கால நியதி.

ஏலவே மனமொத்து தன் மனக் கதவை திறப்பார்கள் எனும் பாரிய நம்பிக்கை எனும் எதிர்பார்ப்பு சூழவே இந்த பதிவை நோக்ககிறேன்.இப் பதிவை எப்படியாவது இவர்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டிய காலத் தேவையுள்ளது.இதை ஒவ்வொருத்தரும் கருத்தில் எடுத்து ஆகவேண்டியதை செய்வதே சாலச் சிறப்பாகும்.
இது எனது தாழ்மையான கருத்து.

மீண்டும்!
எமதூரகத்திற்கே அத்தியாவசியமான பாலர் பாடசாலையை கட்டிமுடிக்க வேண்டி அதற்கான நிலம்,வரைபடம்,அனுமதி இத்தியாதி இத்தியாதி என பல விடயங்களை ஒப்பேற்றிகொண்டு மீண்டும் எமதூரகர்களின் கரங்களை பற்ற கையை நீட்டினால் எவருமே அல்ல நன்றாக அறிந்தவர்களும்,பன்முகத்துடன் பழகியவர்களும் வன் முகத்துடன் விலகிச் செல்லும் இழி நிலையை காண்கிறேன்.

முகநூலில் ஒரு கலோ என சாட் அடித்தால் மறுகணம் மூடப்படும் முகநூல் தொடர்பு .நினைக்கவே எரிச்சலையும்,வெறுப்பையும் உண்டாக்கும் இந் நிலை ஏன்?

பணமன்றி வேறென்ன?நிதிதான் வேண்டும் என்றில்லை கருத்துக்கள் தமதான பங்களிப்பாக ஒரு கருத்தைக் கூட சொல்ல விருப்பகற்றும் புற நிலை தேவையா?
பலர் இங்கு  பதில் தருவதாக இல்லை.
விரல் விட்டு எண்ணினால் நிதிக்கான பங்களிப்பை உடனடியாக இல்லாவிட்டாலும் தந்துதவிய மிக,மிகச் சிலரே.. அவர்களின் இந்த ஈடுபாட்டிற்கு எனதான நன்றிகள்

புல வாழ் மக்களிடம் உள்ள இன்னுமொரு நிலைப்பாடு.தாம் அனுபவிக்காத எந்த ஒரு இலக்கையும் மதிக்காதிருத்தல் அப்படியான ஒரு சுயநலம்.
நமதூரில் மட்டுமல்ல உலகத்திலேயே பரவியிருக்கும் ஒரு வித வியாதி.
இந்த பரந்த யுகத்தில் பொதுமை நிலைவேண்டி சாதிக்கப்பட்டவைகள் ஏராளம்.அரசாங்க,மற்றும் தனியார் நிறுவனங்களில் கையேந்தும் நிலை தேவைதானா?தற்போது சகலரும் அனுபவிக்கும் சூழலை நோக்கினால் நாம் அனுதினமும் நுகரும் பல விடயஙஇகளை சுட்டலாம் உதாரணமாக மரங்களை்,பயன் தரும் பல மரங்களை தனதான சுய நலனிற்காகவே என ஒவ்வொருத்தரும் நினைத்திருந்தால் நாட்டில் எவருமே மரம் நட்டிருக்க மாட்டான்.தாமாகவே ஒரு பாடசாலையையும்,ஆலயம்,மற்றும் பிற பொது பாவனைக்கான இடத்தையும் அமைத்திருக்கமாட்டார்கள்.
பொதுவுடமை உணர்வு என்பது நிச்சயமாக ஊரவர்களை விட புல வாழ் மக்களிடம் அரிது.இது மகா யார்த்தம்.ஏனெனில் பல தேவைகளை இலவசமாகவே அனுபவிக்கும் தன்மை.உ+ம் நீச்சல் களம்,பாடசாலை,நூலகம்.இவை எவற்றிற்குமே புல வாழ் உறவுகள் எவ்வித நிதியும் கொடுத்ததும் இல்லை.அப்படி கொடுகஇக முனைவதும் இல்லை.ஆதலால் இதன் அருமைகள் தெரியாது.
சும்மாவா சொன்னார்கள் „சும்மா இருக்க சோறு வரும் வாடா சித்தா காலாட்டா“
இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ?நிச்சயமாக புல வாழ் அனைத்து மக்களிற்கும் பொருந்தும்.இதுதான் யதார்த்தமும் கூட.
யோசித்துப் பாருங்கள்.இவ்வளவு ஊரக மக்கள் புலத்தில் இருந்து கொண்டும் சனசமூக நிலையம்  அமைக்க ஆண்டு இரண்டு தேவையா? அன்றி எமதான தொடர்பாலோ நிதிகோரலோதேவையா?இந்த உணர்வு மேலோங்கியிருந்திருந்தால் நமது ஊர் இன்று எங்கோ ஒரு உயரத்தில் இருந்திருக்கும்.இதுபற்றி சற்றேனும் இனியாவது சிந்திப்பார்களா?சிந்திக்கணும் அதுதான் எனதான நோக்கமும் ஆகும்.எதையும்..தாமாகவே உணரும் தகமையை குப்பைத் தொட்டிலில் போட்டுவிட்டு,தேவையான போது ஒத்திக் கொள்ளும் மாற்றான் மனப் பான்மை.

தாமகவே உணராத எதுவுமே யாரும் தீத்தியும் உணரார்கள்.இதற்கு மனதில் மாற்றம் தேவை.அது மொழி உணர்வுபோல,நாடு தழுவிய உணர்வுபோல,தேசிய உணர்வுபோல ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும்.அது தான் சார்ந்து வாழும் சமூகத் தன்மையுடன் ஒத்திருத்தலால் மட்டுமே ஒப்புவமையன்றி திகழும்.முக்கியமாக கல்வியுடன் சமூக அரசியலும் தேவை.இவை தத்தமது சுய தேடலாலும்,அந்த உணர்வுகளாலும் மட்டுமே மேலும் ஊக்குவிக்க முடியும்.

நானும் என் பிள்ளைகளும் போதும் என ஒரு வட்டத்திற்கள் வாழும் பேதமை.இந் நிலை அற்றுப்போகணும். எவ்விதமான பொது வேலைத் திட்டங்களையும் உள் வாங்க மன விருப்பின்றி இருப்பவர்கள் திருந்துவார்களா?

ஐயா!குற்றம் குறை கூற விடுங்கள் சும்மா பிச்சு உதறுவார்கள்.

திருந்தணும் எமதூரக உறவுப் பாலத்திற்கு வலுச் சேர்க்கணும்.ஆவன செய்ய எப்படியும் முயற்சிக்கணும்.முடியும் எனும் நல் நம்பிக்கை ஒன்று மட்டுமே என்னையும் இதுபோன்ற காரியத்தில் இன்னமும் தீர்க்கமாக இலங்கவும்,இயங்கவும் செய்கின்றது.

மேலும் இது எமதூரவர்களிற்கான கோரிக்கை!அல்லது எதிர்பார்ப்பு.
எமது ஊரவர்களும் வேறு நாட்டிலிருந்து வரும் எமதூரவர்களுடன் தொடர்பை பேணுவதில் அக்கறையின்றியே இருக்கிறார்கள்.இதற்கு ஒரு சனசமூக நிலைய நிர்வாகத்தின் அணுகு முறையும் மேலும் மேம்பட வேண்டும்.
பொதுவான நிலைப்பாடு!
1.சங்கடம்(ஈகோ)
2.எப்படி அணுகுவது என்பதில் தயக்கம்.
3.இவர் என்ன நினைப்பாரோ எனும் மனச் சிக்கல்.இதுவும் ஒருவகை ஈகோ.
4.அவருடன் கதைக்கத்தான் வேண்டுமா?(அறிமுகமற்ற புறச்சூழல்)
5.கேட்டால்,கதை்தால் ஏதாவது ஆகுமா? அஃதன்றேல் தன்மானம் கரைந்து காற்றில் போய்விடும் என்கிற அதீத கற்பனை.

எனதான கருத்து யாதெனில்.
இரு பக்கமும் உள்ள ஈகோ எனும் வாளை தூக்கி எறியுங்கள்.
கதையுங்கள்,மனம் விட்டு கதையுங்கள்.அப்போதே ஒரு வழி திறக்கும்.
பொது அமைப்பில் பங்கெடுக்க வெளிக்கிட்டால் மான,அவமானங்களை பெரிது படுத்தக்கூடாது.உ+ம் உங்க ஊர்க் கோயில்களில் நடக்காதா கூத்தா?
இது புலம் பெயர் நாட்டிலும் தாராளமாகவே உண்டு.யாரும்,எதையும் பெரிதுபடுத்துவதில்லை.படிப்பறிவற்ற சில பேர்களைத் தவிர இவர்களை யாரும் பெரிதாக இல்லை பொருட்டாகவே கருதுவதில்லை.(விதிவிலக்குகள் எங்கும் உண்டு)
இந்த நிலை எல்லா இடமும் உண்டு.ஆகவே ஊரகர்களும் சரி,புல வாழ் மக்களும் சரி ஊருக்குள் உலவும் போதாவது மனம் விட்டு கதையுங்கள்.அது மட்டுமல்ல உங்களின் அனு,தின பார்ப்பனவாகிய முகநூலிலும்தான்
ஊர் போய் உங்கடை ஆடம்பரம் எனும் பெயரில் அசிங்கம் பண்ணாதீர்கள்.

ஒரு சிலர்க்கு உள்ள பிரச்சனை யாதெனில் என்னை ஒத்த வயதினர்க்கு அதாவது தமதான வயதொத்த நண்பர்கள் இல்லாமையே.எனக்கும் அப்போது இந்த பிரச்சனை இருந்தது.இப்போது அறவே இல்லை.காரணம் எமதூரக இளைய சமூதாயத்துடனான அறிமுகம்.தொடர்பாடல் தொடர்ந்தும் தொடர்புகளை கனதியாக பேணுதல்.கருத்துக்களை மனம் விட்டு கதைத்தல்,காரியங்களிற்கு நிதி மட்டுமல்ல ஆலோசனைகள் வழங்கல் .(தமது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்கணும் எனும் கட்டாயம் இல்லை என்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்).

உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஏதுமே இல்லை.
அதற்கு பின்வரும் சிறப்புக்கள் தேவை.
1.புரிந்துணர்தல்
2.விட்டுக் கொடுத்தல்
3.மற்றவர்களின் உணர்வுகளிற்கும்,கருத்துக்களிற்கும் மதிப்பளித்தல்.
4.உரிய நேரத்தில் உரியதை நேர்மையாக உரையாடி தீர்வு காணல்
5.ஈகோ“ எனும் உந்தும் ஆயுதத்தை அறவே தவிர்த்தல்.
6.முக்கியமாக புறம் பேசுதல்.முதுகுப்பின் முறைத்தல் ஆகியனவற்றை தவிர்த்தல்
7.கிண்டலடிப்பதில் உள்ள ஒரு அதீத குரூர திருப்தி (கட்டாயம் உதறப்பட வேண்டிய நிலைப் பாடிது)

ஆக!
மனம் வைப்பார்களா சகலரும்?
வெறும் நம்பிக்கையில் எந்த நாற்றையும் நடமுடியாது.
முடிவாக!உளப் பூர்வமான உறவுகளை உணர்வுபூர்வமாக நிலைப்படுத்தி ஆவன செய்து ஆளுமையுடன் எழுந்து நிற்கும் பாலர் பாடசாலை கட்டுமானத்தை பூர்த்தி செய்து எமதான இளைய தலைமுறையை நிமிர்ந்தெழ வைப்போம் என உறுதி கொள்வோமாக..
நன்றி!
என்றும் ஊரகனாக
யேர்மனியிலிருந்து
சு.குமார்.

 

வலைப்பதிவு காப்பகம்