சனி, 23 நவம்பர், 2013


வேதனைகளின் விளிம்பில்
வெம்புகின்ற இதயங்களின்
சோதனைகளை யார் அறிவார்?
அறிந்தவாரக ஒருவர்
இருந்தார்.

இரும்பொத்த இதயம்
யாவையும் புரிந்த தகயம்.
கரும்பான காணிக்கை.
பாரில்!
நெருப்பான வேள்விக் கணை
நு்ண்ணிய தலைமை
நுனி வரை ஏகிய தகமை
தன்னையே
தந்த காணிக்கை

தந்தை என்றும்
தனயன் என்றும்
தமிழீழக் கொள்கையை வேரறுக்க நின்ற
ரத்தங்களையே வேரறுத்த வேதியர்கள்கள்

கொண்ட இலட்சியத்தால்
சூழ தமை ஈய்ந்த எம்
செம்மல்களே!

உமை மறந்தா எம் வாழ்வு
உலகில்
ஈடேறும்.
மறத்தல்
மானிடத்தில் மனதப் பண்பல்ல
தான் ஈன்ற உயிர்க்கு தானமாய்
தமை
ஈடாக்கும் பேரியல் பெற்றோம்
காண்.

உனை இகத்தில் எக் கணமும் ஏற்றி
தொடருவோம்
விடுதலை பயணம் காண்.

வெல்வோம் எனும்
பாத்திரத்தில் காத்திரம் கொள்வோம்.
சாலவே தொடரும்
சாலை நாளை எமதாகும்
சொல்லாத காரியமும் நாளை
செழிப்பேறும்.

வீதியெங்கும் விடுதலை கானங்கள்.
விதி ஏற்றி எம் விடுதலை பயணங்கள்
ஒரு சேதி சொல்லும் அகவலயம் கொள்வோம்.
மாவீரங்களிற்கு
இந்த
மாதவ நாளில் எம் அர்ப்பணங்கள்.
கண்களிற்க்கு தெரியாத
காரியங்கள்
கனதி சூடும்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

என்னை சுவாசிக்கும்
எனதான உயர்வுகளே!
முதலில்
உங்களை
யதார்த்மாக வாசியுங்கள்.
சுகவாசி வாழ்வா?
சுதேச வாழ்வா?

சுகவாசி வாழ்வில்
ஒர்
சுதேச வாழ்வெழுத
எம்முடன்
கரம் சேருங்கள்.

எமதான வாழ்வின்
அர்த்தத்தில் ஒரு அடையாள நெறியை,
ஒரு ஆளுமையை,
எம்!
கிராமத்தில் எமதான கி(வ)ழக்கில்
உதயமாகும் உ(தி)ரத்தில்,
பொட்டிட்டு போய்ச் சேர்வோம்-

நாளை எம்
இளைய கூடுகள்
எமை
இழிவாக இயம்பாமல்,

ஏந்தும் எப் பழிச் சொல்லிற்கும் தகமை சாராமல்,
இயற்கை எய்தியபின்பும்,
இட்டுச் சென்றார்கள்-எம்
இதயமான இயல் வாழ்வாக
புலர்த்திய புயமாக!

தடம் தாங்கிய தககையர்களான -எம்
இடம் பெயர் நம் உறவுகளென
ஒரு ஓலியும்--
ஒளியும்--
உம் சுவட்டையும்,சூழலையும் தழுவ.
ஆசுவாசம் உமைத் தழுவும்.

இது!
வேரடி மண்ணுடன்
தேரடி சுவைத்த நேயமெனும்,
ஊரடித் தேட்டத்தின்
உயர்வான வலுவாகும்.

எமதான ஊரக அரும்புகளின்-
உகமான பள்ளி
உதயமாக-
தகம் தரும் பதிவு.
ஈகம் முக்கியம் என்
ஈரமான நெஞ்சகர்களே!

வியாழன், 21 நவம்பர், 2013


நெருப்பெரிந்த நிலம்
இன்று முதல்
மீண்டும்
கொழுந்தெரித்துப் போகுமென்று
ஒரு போகம்.
இந்த
பெரும்பான்மை சிங்களத்திடம்
ஆதலால்
பல கலை பாட திடல்
விடுமுறையில்

பயம்!
பயம்?
பலமகற்ற பல நாடுகளின்
நிழலில் வந்த நியம்
ஆதலால்
பலமற்ற சமூகத்திடமும் பயம்
தலம் பற்றி
நாளை
ஒரு கலம் சூடும்
காலமது வந்திடுமென்றே பயம்.

சிரிப்பதா-
அழுவதா?
உரிமைப் போரது
ஓயாது எனும் வெப்பகக் காற்றில்
என்றும் ஓயாது தமிழினம் எனும்
பெரு விருப்பகத்தில்
சிங்கள வெங்களத்தை நினைக்க
சிரிப்பதா-
அழுவதா?

கங்குல்கள்!
என்றுமே அணைந்தபோகாது
எனும் யதார்த்தைத்தை பேணாத
பேரினவாதம்
அங்குலமாக எதையுமே அழிக்க முடியாது
எனும் யதார்த்தத்தை எண்ண
சிரிப்பதா
அழுவதா?
இல்லை
சினப்பதா?

சினைகள் பற்றியதே எம் தேசியம்
சிதைக்க முடியாததே எம் தாயகம்
பனைகளாக நிமிர்ந்த யாசகம்-இதில்
யாப்பதே எம் நாயகம்.

மாவீர நாளிற்கான சிறப்பது -எம்
நாயகர்களே
உங்களது நிழலிற்கே பயந்தோடும்
சிங்களம்.
அந்த வெங்களத்தில் சந்தித்ததை என்றுமே
மறக்காது.
ஆதலால் கூறுகின்றேன்.
உங்களது நியம்
எங்களைவிட
இவர்களிற்கே நினைவு கூறும் நாளாகும்
இந்த மாவீர வாரம்.

நாமே மறந்தாலும்
மறக்காமல் எமை ஞாபகப் பந்தலிற்குள் தள்ளும்
உங்களது நியமும்
நியாயமான போராட்ட வல்லமையும் வலிமையும்
இவ் ஆரிய சமூகத் திடல்-

இதுவே எமது தீபாவளி
இங்கு
புத்தாடைகள் இல்லாமல் உங்களின்
புனிதங்கள் மேல் ஒரு சத்திய வேள்வி
எம்
ரத்தத்தில்
ராகமாக எழுதும்
தீப வழிபாடு.

மனக் கோட்டிற்குள் ஒரு சித்தரம் வரைந்த
சரிதர்களே!
விரிவடைந்தே
பரிவாகும் ஒரு கனவு நாளிற்குள்
உங்களின் பாங்குகளுடன் எங்கள் பற்றுதலும்
தேற்றதுலுடனான தோற்றுவாய்கள்.

மாவீரம் என்றுமே மாசடையாது- என
மானிடத்தில் ஒரு "மா" காவியம் தந்த காத்திரர்களே!
எமதான புனித வணக்கங்கள்
பனி படர் தேசத்தில் வாழ்ந்தாலும்
புனிதமானதே எம் தேசியமும்
தேசமும் என
நாளும் உரைக்கும் ஞாலத்தின்
தேசத்தின் குரலாக!

வெள்ளி, 8 நவம்பர், 2013

எதிர் பார்ப் பூ

சிரித்து
சிதறிய
சிந்தனைகள்
வந்தனம் வருடிய வருடல்கள்
எல்லாம்!
பூரித்து போய்
புவனமாய் ஓர்
பூடகம் காட்டின!

இன்று
அலர்ந்து போயினவாய்
அத்தனையும் என
ஒரு பொய்த்தலம் காட்டின?

எதுவாகினும்
மலர்ந்த
தலம்
என்றும் மலினம் காட்டாதென
ஒரு கைத் தலம் பற்ற கண்டோம்.
இது
காணிக்கை எம் காலக் கதிரவர்க்கு
என்று
ஊது சங்கெடுத்து.

பொறுப்பெடுத் பொழுதுகள்
ஓயாது
காண்
மறு
தலம் பற்றார்-
மையல் அது காண்.

தைத்த புண்களில் என்றும் ஓர் காயம்
மைத்ததுவும்
மையல் காண நினைத்ததுவும்
ஒரே ஒரு காயம்தான்
ஆறாத செயலிகள் ஆறாது.
ஆற்றாமல் தீராது காண்
ஆண்டு 2014 ல்
ஒரு ???

உலைக்கள வியாசா?

உலைக் கள வியாசனை தேடுகின்றேன்.
அவன் தந்த உறுதியை நாடுகின்றேன்.
நிலைக் களத்தில் நிதம் நியம் எழுதியவன்.அவன்
வலைத் தளத்தில் என் வயம் நாடும்.

திணைக் களமெல்லாம் தீர்ந்தே போயினவோ?
திண்ணைப் பேச்சை திசையாலேயே வெறுத்து
உண்மைத் தன்மையை உறுதியாய் படைத்த எம் தேசத்து
அரசபைக் கவிஞன்?
என்னானான்?

தலைக் கனம் சிறிதேனும் இலா தவக் கவிஞன்.
தலைமையின்: திசையில்
விசைகூட்டிய வீரியன்
மலைபோல வெற்றி குவிய மனமிசைத்து கவி எழுதிய
காலக் கவிஞன்.
என்னானான்?
எங்குள்ளான்?

ஏங்கும் என் மனம்போல் எத்தனை பேரின்
இதயக் கூட்டில் குடியிருக்கும் தாயகக் கவிஞன்.
புதுவையே
எங்குளாய்?
எப்படியுள்ளாய்?
மாவீர நாள் நெருங்கும்போதெல்லாம்
புதுப் பொலிவுடன் பொங்கும் உனதான கவி கேட்க
ஆவும் எம் மனம் அறியாயோ?

தீபாவளிக்கென்ன தீ எமதான உளப்பரப்பில்.

தன் இனத்தையே அழித்தாதய்
தகடு விடும் இந்த தரமில்லா நாளை
எந்த
தகத்துடன் பார்ப்பேன்?

தனைப் புரியாத அந் நாட்களில்
எதனையும் அறியாவிடாமல்
தீத்தப்பட்ட புராணக் புனைவு கதைகளில்
ஆழ நான் துயின்றதை
இன்று
எந்த இன் முகப்புடன் நினைவெழுதுவேன்?

விழிப்புணர்வு
இன்னமும் இல்லாத இந்த
ஈன இனத்தில் நானும் ஒருவன்?
நினைக்கவே நினைவுகள் கொழுந்தாய்
கனல் கக்கும் நாட்கள் இவை!

பின்
ஒரு காலத்தில்
முள்ளி வாய்க்காலில் எம் இனம்
சிதைவுண்டு போனதுவும்
நவீன தீபாவளி என
ஆரியர்கள் அரற்றும் ஒரு நாள் உலவும்.

அதையும் ஆர்வமுடன்
அகமாய் தொழும் இந்த தமிழினப் பரப்பு
எதையும் ஆராயாமல்
அப்படியே விழுங்கும் விழுமியம்
கொண்டதல்லவா?
எம் தமிழ்குடி
வாழ்க!

இந்த
இலட்சணத்தில்
முகப்பு நூலின் நுனிவரை
வகை,தொகை வழுவேதுமின்றி
வாழ்த்தென எதையோ வதை(கை)கொளுத்தும்
வையகமே!
உனைப் புரிய விழி தொழ மாட்டாயா?

எதிர்பார்க்கும் ஏளனம்?

உளம் உலர்ந்து போனது
களங்களில் காத்திரமற்ற சூத்திரத்தால்
தளங்களில் ஏனோ
தளம்பல்கள்?

நிறைவான
உயர்வான உவப்பகற்றிப்போனதுவோ?
தயவாக இனியும்
தாழ்மையாக வேண்டுதலில்
உவப்பில்லை காண்
உயரட்டும் அவர்களின்
உன்னதம் சார் உவப்புக்கள்.

நெடுதுயிர்க்கும் நினைவுகள்.


  • மன்னிக்கவும் காலம் கடந்து விட்டது.எனவே என்னால் இதுபற்றி இயங்க முடியாது.
    புரிந்து கொள்ளவும். "காலத்தால் பயிர் செய்யா மண் பாழ்"
    ஏற்கனவே கூறியதுபோல் ஐப்பசி 15ற்கு பின் வேகமாக இலங்கவும்,இயங்கவும் பல தடவை முயன்றேன்.இதில் சங்கர் முதல் குமணன் ஈறாக நீங்களும் ஒத்துழைப்பு தரவில்லை.
    நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை. எனினும் என்னால் இனி இதுபற்றி எதையும் ஏகமாக எழுதவோ,நிதி வேண்டி ஏற்கனவே இதயத்தில் புதைத்து வைத்த ஆதங்கங்களை பதிவேற்ற மனம் ஒப்பவில்லை.
    காலம் கடந்து விட்டது. ஏலவே நான் இப் பணியின் நிலையிருந்து சகல விடயங்களிலும் இருந்து விலகிக் கொள்கின்றேன்.
    பட்ட அவமானங்களை பட்டயமாக ஏற்ற என்னால் பட்டயம் ஏற்ற வேண்டிய நேரத்தில் கிடைக்காத பாட்டயங்களால் ஏதும் ஆற்றும் நிலையில் இல்லை.
    நன்றி தங்களின் இன்றைய தொடர்பிற்கு -
    மேலும் வேலைப்பழுக்களும்,வீட்டுப் பொறுப்புக்களும் என்னை துரத்துகின்றன.
    தனிப்பட்ட சில குடும்ப நிலைப்பாடுகளால் என்னால் தொடர்ந்தும் இயங்க முடியவில்லை.
    எனினும் தங்களின் முயற்சிகள் வெற்றியளிக்கட்டும்.
    காலங்களும் நேரங்களும் இதற்கு துணையாகட்டும்.
    காலக் கதிர்கள் தொடர்ந்து துலங்கட்டும். ஞாலத்தில் இவனின் ஈடுபாடு தேவையெனில் காலம் கட்டம் கீறும்.
    நன்றிகள். என்றும் ஊரகனாக. மேலும் இதற்கு பதில் தேவையென எதிர்பார்க்கவில்லை.

நிலையில்லா நிர்ணயர்கள்

நிலையான உள்ளங்களும்
நியமான தொடர்பாளர்களும்
நியம் மறைத்து,
நித்திரையில்!

தெளிவான சில
விபரங்கள் கேட்டேன்-
அர்ப்பணிப்புடன்--?
தொலைபேசியிலும்
நியம் கேட்டேன்.
தொடு நியமான முகப்பு நூலிலும்
நிதம் கேட்டேன்.

ஆயினும்
தொலை முகம் காட்டி
தொலைந்து போன தோழமைகள்-
யாது
பகரப்போகின்றார்கள்?

முற்றமது காய்ந்த பின்
என்ன
முகமலர்ச்சி மலரும்?
அற்றே போனது எனதான அயராத உழைப்பு என
அரற்றும் என் கனதிகள்
காலத்தால் அழியாத கவளமாக

தொடும் தூரம் இனி யாக்க யாருமே இல்லாமல்
படுதூரம் போனது காண்.
முற்றத்து தோழமைகளே!
புற முதுகு காட்டி என்ன பயன் கண்டீர்?

வேற்று முகம் காட்டும் வேதனைகளால்
தோற்றுவாய் பெற வேண்டிய
பாலகர் பாடசாலை பயனற்றே போயிடுமோ?
இனி
யாதும் ஆற்றும் நிலையில் யான் இல்லை.
போதும் உங்களின் பாராமுகம்.
வெறும்
பயனாளி சீட்டில் பயனே பற்றுங்கள்.
வெளியேறுகின்றேன்
இந்த
வெற்று முத்தத்திலிருந்து.

திசை பிரியாள் இசைப்பிரயா?

வெருகம் புல் கூட
வெகுளும்
அருவிகளாய் அணைத்த அவள்
கருவிகளும் காவியம் இழந்தன.ஐயகோ
என்
சொல
ஏதும் எழவில்லை எழுத
இவள்
புனிதங்கள் காந்தளாய் கனதியிழந்ததை
எந்த காவியத்தில்
ஏற்றி வைக்க.

மனிதங்கள் மரித்து மாதமே 4X365 ஆக
கனிமங்களும்
காரியங்களும் கனதியழந்தன-காண்
வெறுங்கைகளும் அற்று எம் வேதியங்கள்
நொதியங்களும் இழந்தன:
கதிகள் இனி
காயங்களாக?
மேனி சொரியும் இடர் பற்றி
எந்த சேதி இனி
சோகம் தீர்க்கும்.

சென்றனையோ
எம்
பிரியமானவளே!
சொல்லற்கரிய வேதனைகளாய் வடிந்த நின்
நிணம்?
ஓர் நாளும் நீதி வழுவா நிலை தருமோ?
தர்மம் சாகதென்பரே
தர்மத்துடன் ஓர் நீ "தீ" வடிப்பீரா?

,இசைப்பிரியா"

தெளிவற்ற தெளிவு.

காலங்கள்
திடமானவை.
காத்திருப்புக்கள் ஏதும் இன்றி
காலக் கடமைக்காவே காத்திருப்பவை-
இல்லை
அவற்றி தன் காலக் கண்ணாடியில்
காத்திரமாக வரையக் காத்திருப்பவை.

கிடைக்கும் சந்தர்ப்பங்களையும்
புற சூழலையும்
தடையகற்ற
புடைசூழ்ந்தவை-
நாமோ
ஏற்புடைய அத்தனையையும்
ஆழப் புதைத்து விட்டு
ஆலய சராணகதி செய்பவர்கள்.

ஏலவேதான்
இன்னமும்
சாலச் சிறப்பெழுதாத சாத்திரர்களானோம்.
கேட்டால்
தன் மானத் தமிழரென
வன்மம் காட்டுவோம்.

யதார்த்தத்தில்
அடிமைச் சாசனத்தின்
ஓலை(ல)ச் சுவடிகள்.
தர்சனம் தந்த காத்திரர்களை
இன்னமும் ஆழச் சுவாசிக்கவே
கூசும் குறும் சுவடிகள்.

காலம்
தந்த சுவட்டில்
ஓலைச் சுவட்டைகை் கூட
சாலச் சிறப்பாக ஓங்கி தூக்க உவப்பற்ற
ஆரியச் சுவர்கள்.

வலைப்பதிவு காப்பகம்