திங்கள், 1 ஏப்ரல், 2013

நிர்வாகத்தினரின் நிறைவாக!

                 நிர்வாகத்தினரின் நிறைவாக!



திரு குமார் குடும்பத்தினருக்கு 

      புலம் பெயர் நாடுகளில் வதியும் எம் மினிய உறவுகளே ,அன்புடை நெஞ்சங்களே,
                       எமது நன்றி கலந்த வணக்கங்கள்

                    பலகால் பலவிடமும் மாறிமாறி நின்றும்
                    சிலகால் செயலிழந்து சேடம் இழுத்தும்  

                                          68
வருட காலம் பல இடர்களை எதிர்கொண்டவாறே இயங்கி வந்த எமது சனசமூக நிலையம்  சொந்த  நிலத்தில் கட்டபட்ட கவினுறு மாடிக்கட்டடத்தில் இயங்குகின்றதாயில் அதற்கு முதற்காரணம் புலம் பெயர் நாடுகளில் வதியும் எமது உறவுகள் மனமுவந்து வழங்கிய பெருநிதிப்பங்களிப்பே என்பதை மறுப்பார் எவருமிலர்.

                ஜேர்மனியில்  இருந்தவாறே நிதி திரட்டும் பணியில் முனைப்புடன் உழைத்தும் உச்ச தொகை நிதி வழங்கியும் பேராதரவு நல்கியவர் நீங்களே என்பதை குறிப்பிடுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.அத்துடன் அமையாது "சமூகநாடி" மலரையும் இறுவட்டுக்களையும் விற்று நூல் கொள்வனவிற்கும் பெருந்தொகைப்பணம் அனுப்பியவர் நீங்களே . நீங்கள் இவ்விடம் வருகை தந்த போது உரையாடல் மூலம்  வேறு நபர்களிடமிருந்து பெற்றும்சொந்தமாகவும் பங்களிப்பு வழங்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை உணரக்கூடியதாகவும்  இருந்தது.

                நான் தலைவராக பதவி பெற்ற ஓரிரு நாள்களில் திரு.சதாசிவம் ஸ்ரீகாந்த் என்னுடன் கதைக்கும் போது "எமது விளையாட்டுக்கழகத்தின் மீது வீணான அபாண்டப்பழிகள் விழுந்துள்ளன.நாம் சனசமூக நலன்களில் அக்கறையுடையவர்கள் இவ் வருடத்திற்குள் 3 கணனிகள் வழங்கவுள்ளோம்.பின்பும் 3 வழங்கவுள்ளோம் கணனிகள் என 6 கணனிகள் வழங்கவுள்ளோம் என்று கூறினார்.என்னைப் பொறுத்தவரை கணனிப்பயிற்சியோ வேறு எந்த செயத் திட்டமாயினும் அகலக்கால் வைக்கக்கூடாது.ஏனெனில் தொழில்நுட்ப கல்லூரி,கல்வித்திணைக்கள முறைசாராக் கல்விப்பிரிவு தனியார் நிறுவனங்கள் பல எனப் பல கல்வி நிறுவனங்கள் பயிற்சி நெறிகளை நடத்திச் சான்றிதழ்களும் வழங்குகின்றன.அத்தகைய நிலையை நாம் எளிதில் அடைந்து விடமுடியாது. 3,4 கணனிகளுடன் ஆரம்பித்து நிலைமையைப் பொறுத்து விசாலிக்கலாம் என எண்ணியிருந்தேன்.பல்வேறு செயற்குழுக்களை தெரிவு செய்து செயற்படத்தொடங்கியபோது கமலசுதர்சன் 1கணனி,ஸ்ரீகாந்த் 1கணனி என 2 கணனிகளை  வழங்கவுள்ளதாக ஜனார்த்தனன் கூறியிருந்தான்.திரு.புலேந்திரன் நாற்சந்தி நண்பர்களும் 1கணனி வழங்கவுள்ளனர் என கூறினார்.நானும் தந்தையின் நினைவாக 1கணனி வழங்கினால் ஆரம்ப நிலைக்கு திருப்தியானது என என நினைத்திருந்தேன்.
                                      விளையாட்டுக்கழக ஓரிரு உறுப்பினர்கள்(கூட்டம் நடைபெற்ற போது இங்கு நிற்காதவர்கள்)பின்பு ஊர் வந்து போலிக் காரணங்கள் கூறி கல்விக்குழுகலைப்பண்பாட்டுக்குழுக்களை மீள அழைப்பதாகக் கூறி வெளியேறினர்.அதற்கு பிரதான காரணம் ருக்மணி என ஊகிக்கமுடிகின்றது.அவர் ஆரம்பத்திலிருந்தே விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் மீது காழ்ப்புணர்வுடனேயே செயற்பட்டார்.ஆனால் பின்பு நாவலர் விளையாட்டுகழகத்தைச் சேர்ந்த சனசமூக நிலைய செயற்குழு உறுப்பினர்களான திருவாளர்கள்,தி.சந்திரசேகரன்..தேவராஜேந்திரன்,வி.ஜெயந்தன் ஆகியோரும் விவேகானந்தா விளையாட்டுகழகத்தின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாலும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.ஆயினும் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினர் கடிதமூலமும் நேரடியாகவும் ருக்மணியை கண்டிக்க தொடங்கினர்.இவ்வாறு விளையாட்டுக்கழகம் பிரிந்து சென்றமை மன வருத்ததிற்குரியதே.பிரிவதற்க்கு முதற்காரணம் அவர்களது வெளிநாடுகளில் வதியும் மூத்த உறுப்பினர்கள் நிதி அனுப்பி வைப்பதேயாகும்.
               அவர்கள் பிரிந்து சென்றதால் நாம் சோர்ந்து விட முடியாது.நான் மிக விரைவில் கணனி ஒன்று வழங்கவுள்ளேன்.
கோயிற்கும்பாபிடேகம் நடக்க உள்ளதால் வெளிநாட்டு உறவுகளிடம் இருந்து அதிக நிதியை எதிர்பார்க்க முடியாது.உங்களை பொறுத்தவரை கோயிலுக்கு என ஒரு பிரச்சனை இல்லை.எனக்கும் கோயிலுக்கு வழங்க விருப்பமில்லை.தொல்லைக்காக அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஐயாயிரம் வழங்கவுள்ளேன்.அதற்கு மேல் வழங்க மாட்டேன்.வேண்டுமாயின் சனசமூக நிலையத்திற்கு வழங்குவேன்.ஐயர்மார் வருமானத்திற்காக 13 வருடத்தில் கும்பாபிடேகம் நடத்த வேண்டும் என்று கூறினால் கேட்பவர்களுக்கு என்ன மதி.தெய்வம் இருக்குதோ இல்லையோ பிரச்சனையில்லை.கிரியைகளுக்கு நான் ஆதரவளிக்கத்தயாரில்லை.

                                           
நீங்களும் இயன்ற நிதி உதவி வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும்படி வேண்டிக்கொள்கின்றேன்.விரைவில் எனது கணனி மூலம் skype இல் கதைப்பேன்.

                         
எமது சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் வரலாறு பற்றி எழுதியது போல் சனசமூக நிலைய வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்காக ஆராய்ந்து எழுதவுள்ளேன்.அதன் போது தீவிரமாக செயற்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் பற்றி விபரமாக எழுத வேண்டும்.இதற்காகவும் பலரிடம் விபரங்கள் பெரும் வேலையை ஆரம்பிக்கவுள்ளேன்.

                                                                  
நன்றி 
                                                                                                                                                                                              அன்புடன் 
                                                                                                                                                                              செ.சிதம்பரநாதன்



வலைப்பதிவு காப்பகம்