வியாழன், 23 பிப்ரவரி, 2012


எழுதியதுவும்,உழுததுவும் போதும்.
இனி
விழுதுகள் தொடரெழுதட்டும்.
பழுதுகள் இல்லா பாட்டாக
பொழுதுகள் பொருதட்டும்.
மழுப்பல்கள் அகற்றி மாதோங்கும்
செழிப்புக்கள் பொழிந்து.

அற்ற உறவுகள் இனியும் வேர் கொளார்.
ஏன்
உற்ற உவப்பாக தேர் இழார்.
பற்றறுத்த போன பாதை தொழுபவர்
உற்றுப் பார்ப்பார் என இனியுமா இனியன கொள?
நெற்றிப் பொட்டில் நெறி வைத்து
வெற்றிப் புன்னகை ஈயாத
வெற்றுறவுகள் வேதினியில் எதை வேண்டுவார்?
இவை(வர்)கள்
அற்ற குளமாய் எமை தீண்டினாலும்.
நாம்
வற்றாத சுரபிகளாய் எம் வாசல் வேய்ந்தோம்.

எனவே!
எழுதியதுவும்,
உழுததுவும் போதும்-இனி
விழுதுகள் தொடரட்டும்.
வீரியம் சொரிய--

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒளி முகம் சொரிய வழியது காட்டு.

மறைமுகம் காட்டும்
திரு முகங்கள் மலர.
திருமறை ஓதிடவா?
சிறை முகம் காட்டும் சிதைவுகள் பறக்க
முறை முகம் ஏற்றிடவா?
புற முகம் நீங்கி அக முகம் காட்ட
நியமதை விளங்கிடடா -நீ
புயமதை ஒதுக்கி பயமதை மேயும்
கயமையை விட்டிடடா -அதில்
ஒருமையை மேவி பெருமையை வடிக்க
திருவுளம் ஏற்றிடடா -வெறும்
பணமதே வாழ்வென பயனது எழுதும்
பாகத்தை அறுத்திடடா -பலன்
கடமையை கவ்வ காதறு தோறும்
உடமையை பெற்றிடடா.உன்
உரிமையை வென்றிடவா!!__

புரிவது உனக்கு தெரிவதில் இல்லை-இந்த
ஊனத்தை உடைத்திட வா -என்றும்
பதிவதில் பொழியும் பாகத்தை விளங்க
மதியதை மொழிய வா.அதில்
பல ரக ராகம் பசுமையாய் விளங்கும்
பாவத்தை புரிந்திட வா .

புரிவதில் உனக்கும் தெரிவது வேண்டும்.
பரிவது வேண்டாமே.ஏகி
ஏற்றிட வரியும் வகையது புரிந்து
திறனது ஒளிர்ந்திட வா.நீ திரிமுகம் நீக்கி
திடமுடன் திறனேற்றி வா.

வலைப்பதிவு காப்பகம்